Fata Galbena Care Rade

>> Sunday 18 January 2015



குறும்பட திறனாய்வு

குறும்படங்களுக்கான கதை எங்கேயிருந்து உருவாகின்றன? நல்ல குறும்படங்களுக்கான இலக்கணம் என்னவாக இருக்கும்?மூன்று மணிநேரம் பார்க்கும் திரைபடங்களில் இருந்து குறும்படங்கள் எவ்வாறு வேறுபடுகின்றன? இலகுவில் நாம் கடந்து செல்லும் சாதாரண வாழ்கையின் சுவடுகளில் இருந்து குறும்படங்களுக்கான கதைகள் மையம் கொள்கின்றன.உணர்வுகளை மையப்படுத்தி சொல்லும் காட்சிபடிமமாகவே குறும்படம் இருக்கவேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம் Constantin Popescu இயக்கிய Fata Galbena Care Rade ( The Yellow Smiley Face), ரோமானியப் குறும்படம். மிகச்சிறிய கதைக்களத்தை எடுத்து சரியான உணர்வுகளுடன் திறம்பட நெறிபடுத்தப்பட்டுள்ளது. 


இரண்டு கதாபாத்திரங்களை மையமாக வைத்து நகருகின்றது திரைக்கதை. ஓரளவு முதுமையடைந்த வயோதிப பருவத்தில் உள்ள மனைவி ஒருதுண்டுச் சீட்டுடன் அதில் எழுதியுள்ளவாறு கம்ப்யூட்டரை ஆன்செய்ய கடினப் படுகின்றாள். கணவனின் உதவியுடன் மெல்ல மெல்ல துண்டுசீட்டில் குறிப்பட்டவாறு இரண்டுபேருமாக ஒருவரையொருவர் திட்டி மெல்ல மெல்ல அடுத்தடுத்த கட்டத்துக்கு நகருகின்றார்கள்.
பொதுவாக கணவன் மனைவிக்கான அன்யோன்யம் வயதாக வயதாக அதிக புரிதல்களினால் இருவருக்கும் இடையிலான உடல் மொழிகளில் ஈடுகொடுத்து உள்வேண்டும் ஒற்றுமைகள் அதிகரிக்கும்.அவற்றை கூட கனகச்சிதமாக மிக நுண்ணிய இயல்பை அந்த இரு கதாபாத்திரங்களுக்கு இடையில் இயக்குனர் உருவாக்கியுள்ளார். கணவன் மனைவியாக நடித்த இருவரும் நடிப்பில் மிகை இல்லாமல் யாதர்த்தமாக நடித்துள்ளார்கள். படத்தில் இசையில்லை, அது ஒரு குறைபாடாகவே தெரியவில்லை உணர்வுகளை மையபடுத்தி நகர்வதால் அவை பாதிக்கவில்லை. கம்ப்யூட்டரை ஆன்செய்து முடிய ஏன் இப்படி கடினப்பட்டு ஆன்செய்தார்கள் என்பற்கு விளக்கம் கிடைகின்றது. அதன் பிற்பாடு உணர்வுகளை உச்சம்செய்து குறும்படத்துக்கான முழுமையை எட்டிப் பிடிக்கின்றது.இவ்வாறான குறும்படங்களை ஈழத்து குறும்பட ஆர்வலர்கள் பார்க்க வேண்டும் திறனாய்வு செய்ய வேண்டும்.


Comments

0 கருத்துக்கள்:

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP