ஓகே கண்மணி - சினிமா விமர்சனம்

>> Friday 17 April 2015

அலைபாயுதே திரைப்படத்துக்கு பிற்பாடு மணிரத்னத்தினால் சிறந்த வலிமையான திரைப்படத்தை உருவாக்க முடியவில்லை. கடல் இதிலிருந்து எல்லை விலகியது, சிறந்த கதையும் பல்வேறு அடுக்குகளை கொண்ட திரைக்கதையும் அதனை உள்ளவேண்ட பரந்துவிரிந்த திறனாய்வு செய்யும் மனபோக்கையும் கொண்டவர்களால் மட்டுமே அதனை ரசிக்க முடிந்தது. ஜெயமோகனின் இலக்கித்தன்மை வீச்சை புறவயமாகக் கொண்ட அவரது புனைவுச் சித்திரத்தில் மணிரத்தினம் தனது திரைநுட்ப மொழியை உள்நுழைத்து சிதைவடைய செய்துவிடார், முதல்பாதியில் ஜெயமோகனின் புனைவு வெளிச்சம் அதிக வீச்சத்தில் தெறித்தாலும் இரண்டாம் பாதியில் மணிரத்தினத்தின் தனித்துவம் படத்தில் மேலோங்கி வெகுஜன ரசிகர்களை அதிகம்கவர அவரது திரைமொழி முற்பட்டு ஜெயமோகனின் இருப்பை வெற்றிடம் ஆக்கி தொய்வடைந்தது. கடலின் வணிகரீதியான வெற்றி தோல்வியில் முடிந்து. அதற்கு முதல் பொன்னியனின் செல்வனை திரைபடமாக்க முயற்சித்து சிலபல காரணங்களினால் கைவிடப்பட்டது. இறுதியில் மிக அமைதியாக ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் ஒரு காதல் கண்மணி.

அதே வழமையான பி. சி. ஸ்ரீராம், ரஹுமான்,வைரமுத்து, மணிரத்தினத்தின் கூட்டணியோடு உருவாக்கப்பட்ட திரைப்படம் ஒரு காதல் கண்மணி. இயல்பாக நேர்கோட்டில் பயணிக்கும் லிவிங் டுகேதர் உறவை மையபடுத்திய கதை. கதாநாயகனும், நாயகியும் பிஸியான மும்பை நகரவாழ்கையில் சுழல்பவர்கள். இருவருக்கும் இடையில் எதோச்சையாக நட்பு உருவாகி இருவரையும் நெருக்கப்படுத்துகின்றது. இருவருக்கும் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. திருமணம் உருவாக்கும் சுயதடைகளை,சுதந்திர பறிபோதலை வெறுப்பவர்கள். எனவே தங்களுக்குள் உருவான தற்காலிக கவர்ச்சியை திருமணம் வரை கொண்டு செல்லாமல் சேர்ந்து வாழத் தீர்மானிக்கின்றார்கள். திருமண சம்பிரதாயங்கள் இன்றி ஒரேபடுக்கையை பகிர்ந்து தேவைப்படும்போது கலவியை பூர்த்திசெய்வதும் ஒருவர் ஒருவர்மீது கட்டுபாடுகள் ஏதும் விதிக்காமல் சுதந்திரமாக இயங்கவிடுவதுமாக வாழ்க்கைப்பயணத்தை தொடுக்கின்றார்கள். நாயகி பாரீசுக்கு போகும் வரையும் நாயகன் அமெரிக்கா செல்லும் வரையும் அவர்களுக்குள் இந்தப் புரிந்துணர்வு ஏற்பாடு. இந்த காலப்பகுதியில் அவர்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகள்,சோகம்,பிரிவு,நேசம் என்பவற்றை பேசும் சம்பவங்களே படத்தின் தொகுப்பு. இறுதியில் என்ன ஆகின்றது என்பதே கிளைமாக்ஸ்.

அலைபாயுதே திரைப்படத்தில் இருந்த சுவாரசியம் நிச்சயமாக இல்லை. அதே நேரத்தில் அலைபாயுதே திரைப்படத்தின் சாயல் நிறையவே உண்டு. படம் தொடங்கி முடிகிற வரை மின்சார வண்டியும், பேருந்தும், கதாநாயகன் நாயகிஇருவரின் முகத்தையும் அண்மையில் காட்டும் எக்கச்சக்க காட்சிளை பார்கலாம்.நாயகிக்கு திருமண இணைவில் உள்ள கசப்புக்கு வலிமையான ஏற்றுக்கொள்ளத்தக்க காரணம் சொல்லப்படுகின்றது. நாயகனுக்கு அப்படியான காரணங்கள் சொல்லப்படவில்லை. இருவரும் சேர்ந்து வாழ்வதுபோல் காட்டப்படும் காட்சிகளில் ஏற்படும் நெருக்கம்,ஏக்கங்கள் போன்றவை பாடல் காட்சிகளிலே சொல்லப்படுகின்றது. அதிகமான பாடல்கள் படம் முழுவதும் இனிமையாக மாறிமாறி ஆக்கிரமிக்கின்றன. வழமைபோல் ரஹுமான் அதியுச்சபாணியில் இசையை கட்டவிழ்த்து கிறங்கடிக்கின்றார்.

லீலா சாம்சன், பிரகாஷ்ராஜ் நடித்திருந்த தம்பதி பாத்திரம் ரசிக்கும்வித்தில் இருகின்றன. நிஜத்தில் பரதநாட்டியக்கலைஞர்லீலா சாம்சன்இப்படத்தில் முன்னொரு காலத்தில் சிறந்த கர்னாடக கச்சேரி பாடகியாக இருந்தவராக வருகின்றார். அவருக்கு நினைவு அழியும் நோய். லீலா சாம்சன், பிரகாஷ்ராஜ் பாத்திரங்களுக்கு இடையிலான அன்யோன்யம் நெருக்கம்,காதல் அனைத்தும் நுணுக்கமா ரஹுமான் இசையுடன் அட்டகாசமாக பிரதிபலிக்கின்றன.

மணிரத்தினம் படங்களில் அவருக்குரிய தனிப்பட்ட தளம் ஒன்று இருக்கும். அதிகம் பேசாத மனிதர்கள், குறியீட்டு சமிச்சைகளில் அதிகம் இயங்கும் மனித மனங்கள் போன்றவற்ரை நீங்களே உற்றுநோக்களாம். இன்னும் நுணுக்கமாகப் பார்த்தல் முதல் காட்சிகளிலே படம் ஆரம்பிக்கும், ஒளிப்பதிவில் சிலிர்க்க வைக்கும் கமராக்கோணங்கள் புகைப்படம் பிடிக்கப்பட்ட நவீன ஓவியங்களின் தீற்றுப்போல் படமாக்கப்பட்டு இருக்கும். இந்தப்படமும் முதல் காட்சியிலே ஆரம்பம் ஆகின்றது, மெய்மறக்கவைக்கும் பி. சி. ஸ்ரீராமின் ஒளிபதிவும் உண்டு. படம் முழுக்க மழைவிட்ட பின் உள்ள குளிர்மையைதரும் உணர்வை செறிவாகக்கொண்டுள்ளது. மிக குறுகிய பட்ஜெட்டில் உருவான இத்திரைப்டத்தில் அட்டகாசமான பாடல்கட்சிகள் அட்டகாசமாக ஒளிப்பதிவி செய்யப்படவில்லை. உள்ளக களத்திலே படம் முழுக்க முழுக்க ஒளிப்பது செய்யப்பட்டுள்ளது. மெட்டல் மனதிலே பாடல் விதிவிளக்கு.

மிக ஆழமான உணர்வுபூர்வமான காதல் காட்சிகள் படத்தில் இல்லை. நித்தியாமேனன் கொஞ்சம் பூசிமெலுகினால்போல் இருக்கின்றார். நடிப்பில் மிரட்டுகின்றார். துல்கர் சல்மான் அரவிந்த்சாமிபோல் வழமையான மணிரத்னம்பட ஹீரோபோல் ஜொலிகின்றார். வசங்கள் இந்தமுறை ஆச்சரியம் ஊட்டும் வகையில் அட்டகாசமாக இருக்கிறது, குறுகியதாக இருக்கும் மணிரத்தினம்பட வசங்கள் இம்முறை மாறுதல் அடைந்து இயல்பாக செயற்கைத்தன்கள் இன்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக சுவாரசிய திருப்பங்கள் இல்லாத திரைக்கதையோடு வந்துள்ள இப்படத்தில் மணிரத்தினம் தன்னை மீளுருவாக்கம் செய்யமுற்பட்டுள்ளார்.



Comments

8 கருத்துக்கள்:

மெக்னேஷ் திருமுருகன் 17 April 2015 at 23:12  

மணி நாசமாகப்போனதுக்கு காரணம் , அவரின் தொழிலில் தேவையில்லாமல் மனைவியை மூக்கை நுழையவிட்டதுதான் . அந்தம்மாவின் மறைமுகமான ஈடுபாட்டினால்தான் கடலும் கவிழ்ந்தது , ராவண்னும் சுருண்டது . இந்த படத்திலும் அவர்களின் தலையீடு இருக்கிறது என்பது தெரிந்ததுமே , இதுவும் ஒரு சராசரி படம் என்று அப்போதே முடிவுக்கு வந்துவிட்டேன் . இதெல்லாம் போதாதென்று , பத்திரிக்கைக்காரர்களுக்கு ஐஸ் வைக்கிறேன் என்று தேவையில்லாமல் வேலியில் சென்ற ஓனானை புடவைக்குள் பிடித்து விட்டுக்கொண்டார்கள் . இப்போது வரும் ரிவியுஸ் எல்லாமே நியூட்ராலிட்டியாக இருந்தாலும் , எழுதுவதற்குமுன் யோசிக்கவேண்டியதாகவே உள்ளது . நான் படித்தவரை நேரம் இருந்து , வேறு படத்திற்கு டிக்கெட்டே கிடைக்காத சூழ்நிலையில் இப்படத்திற்கு போகலாம் என்றே விமர்சனம் வருகிறது . என்ன தல ? போற அளவுக்கு ஒர்த் தானா ????

Annogen 18 April 2015 at 07:47  

இதுவும் சராசரி படம்தான்.. ரஹுமான் இசையை நம்பி படம் எடுத்து இருகின்றார்கள். காட்சிக்கு காட்சி அவர் இராஜ்ஜியம்தான், ரொம்ப ஒர்த் என்று இல்லை..சும்மா பரவாயில்லை... ஆமா உங்க ப்ளாக்கு ஏன் இப்ப எல்லாம் கமெண்ட்ஸ் இட முடியவில்லை?

மெக்னேஷ் திருமுருகன் 18 April 2015 at 09:27  

இல்ல சகோ . நானேதான் கமென்ட் disable செஞ்சேன் . நமக்கு கமெண்ட் கொடுக்கறவங்களுக்கு திருப்பி கண்டிப்பா கமென்ட் கொடுக்கற மாதிரி இருக்கும் . இப்போ முன்னமாதிரி நேரம் கிடைக்கறது இல்ல . அதனால தான் க்ளோஸ் பண்ணேன் . கூடியசீக்கிரம் fb கமெண்ட் பாக்ஸ் ஓபன் பண்ணிடுவேன் . அது கொஞ்சம் பரவாயில்லையா இருக்கும் .

Kasthuri Rengan 19 April 2015 at 08:23  


படம் பார்க்கலாம் என்று இருக்கிறேன்
உங்கள் விமர்சனத்தால்

அன்னோகன் மெக் ஐடியா ரொம்ப அருமை ...

Kasthuri Rengan 19 April 2015 at 08:24  

திருவின் தளத்தில் கமென்ட் முடில உங்கள் தலத்தில் வாக்கு...?

Annogen 19 April 2015 at 08:53  

Mathu S - வருகைக்கு நன்றி.. நிச்சயம் பாருங்க , வாக்கு? ஹஹா.. இணைச்சுடுவம்.

ராஜ் 24 April 2015 at 01:18  

நேர்த்தியான பார்வை.. :-)

Annogen 25 April 2015 at 08:40  

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜ்

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP