பிஞ்சுத்தடம் - குறும்படம்
>> Sunday, 12 April 2015

விளிம்புநிலை
மக்களின் வாழ்வின் அபத்தங்களை பேசும் குறும்படம் பிஞ்சுத்தடம். கல்வியினால் ஒரு
சமூதாய கட்டமைப்புகளை மாற்ற முடியும் என்ற கருத்தாக்கம் நம்மில் இருந்தாலும்
நடைமுறை வாழ்வின்போக்கில் அவை செல்லுபடியாகுமா என்பதின் யதார்த்த பிரதிவாதங்கள்
எங்களை சிக்கல்ப்படுத்தும். இலவசக் கல்வி நமது ஈழநாட்டில் செறிவாக இருந்தாலும்
உண்மையில் பயன்பட வேண்டிய மக்கள் பயன்படுத்திக் கொள்ளின்றார்களா? அல்லது அவை
எப்படி செயல் இழந்துபோகின்றன? செயல் இழந்து போவதற்கான யதார்த்த காரணங்கள் என்ன? இவை தொடர்பான
வினாக்களுக்கு விடைதரும் குறும்படம் பிஞ்சுத்தடம்.
வறுமையின் ஆதீத
மையசுழட்சியில் பிடிமானமாக இயங்கும் ஓர் குடும்பம். தந்தை விறகு வெட்டி
சந்தைபப்டுத்தி தனது குடும்பத்தின் வாழ்வாதரங்களை தீர்க்க முயல்கின்றார்.
நீர்ந்துபோன தனது உடல் பலத்தினால் தொடர்ந்தும் தனது கடுமையான தொழிலை முன்னேடுத்துச்
செல்ல முடியாமல் துன்புறுதல் அடைகின்றார். பாடசாலை செல்லும் வயதில் இரு சிறுவயது
பிள்ளைகள். அதில் மூத்த மகன் தந்தையின் துன்பங்களை உணர்ந்து மன உளைச்சல்
அடைகின்றான். அதிகம் தனிமையில் தன்னை இணைத்து தங்களின் குடும்ப இயலாமையை எண்ணித்
தவிக்கின்றான். வயது முதிந்த தந்தைக்கு ஓய்வை வழங்கி தனது பங்களிப்பால் குடும்ப
பொருளாதரத்தை தீர்த்துவைக்க முனைகிறான். தனது கல்வியை புறம்தள்ளி தந்தையின் தொழிலை
அனுபவம் அற்ற தனது பிஞ்சுக்கையினால் முன்னேடுக்கச் செல்கின்றான்.
மிக இலகுவான கதையாக
இருந்தாலும் உரையாடல் இன்றி முழுக்கமுழுக்க சிறுவனின் உளவியல் மனப்போக்கை பற்றியே
படம் பேசிகொள்கின்றது. அந்தப் பிஞ்சு சிறுவனின் ஏக்கங்களை சரியாக உள்வேண்டி அவனின்
மன எண்ண ஓட்டத்தை கச்சிதமாக ஒளிப்படம் பிடித்திருகின்றனர். மிக முக்கியமாக உயிர்
ஓட்டம் தந்து காட்சிப் படுத்த எடுத்துக்கொண்ட படத்தின் களம். ஈழத்தின் வாசனையை
படத்தின் களம் நெருக்கமாக பேசுகின்றது. கலை இயக்குனரை பாராட்டாமல் இருக்க
முடியவில்லை. வீட்டின் ஓவ்வெரு பொருட்களும் கச்சிதமாக நெறிபடுத்தப்பட்டுள்ளது.
அந்த சூழலை ஒளிப்படம் பிடித்த ஒளிப்பதிவாளர் கூட எல்லை மீறாமல் காட்சிகளை
படிமமாக்கி உள்ளார்.
தந்தையாக, தாயக
நடித்தவர்கள் முகத்தில் காட்டும் சோகங்கள் மிக திறமையான நடிப்பு. அணைத்து
ஏக்கங்களையும் கச்சிதமாக முகத்தில் தோற்றுவித்து உள்ளனர்.
சிறுவனாக நடித்த விதுசன் ஒப்பற்ற கலைஞன். அவர்கள் வீட்டில் உள்ள நாய்கூட
நடித்துள்ளது.
அருமையான படமாக
இருந்தாலும் ஆவணப்பட சாயலில் தன்னை முன்வைகின்றது. உண்மையான ஒரு குடும்பத்தில்
உள்ளே கமராவை ஒளித்துவைத்ததுபோல் யோசிக்க வைகின்றது. படத்தின் இசை அனாவசியமா
வலிந்து ஒலிகின்றது. அறிமுகப்பாடல் வலிகள் நிறைந்த எழுச்சிகளை உருவாக்கினாலும்
பின்னணி இசை எரிச்சலை ஏற்படுத்துகின்றது. ஃபிகரை தியட்டருக்கு கூட்டிட்டுப் போறது
எப்படி குறும்படத்துக்கு இசை அமைத்த மதீசனின் இசையா என்று நம்மப முடியவில்லை.
அந்தப் படத்தில் அருமையாக ஒலித்த இசைகள் இங்கே இல்லை. சோகங்களில் படிமானங்களை
சரியாக வெளிபடுத்த இசை முயன்றாலும் கச்சிதமாக இல்லை. பொருந்தாத ஒருவித இரைச்சல் தன்மை
உள்ள இசை வெளிப்பாடுகள்.
சிறுவன் தனது பாடசாலை
கல்லிவியை உதறித்தள்ளிவிட்டு வாழ்வாதாரத்தை காப்பாற்ற விறகு வெட்டச்
செல்லும்போதுதான் படித்த பாடசலை சகமாணவர்களை கடக்க நேர்கின்றது, அப்போது
எதிர்ப்படும் சகமாணவர்களிடம் இருந்து ஏளன சமிசைகள் கிடைக்கும். அந்தக் காட்சியில்
நுணுக்கம் இல்லை. எதிர்ப்படும் சிறுவர்கள் வழங்கிய உடல்மொழிகள் படுசெயற்கையாக
பிரதிபலிக்கின்றது.
முதலாவது படத்திலே
இயக்குனர் சுதேஸ் கவனிக்க வைக்கின்றார். அடுத்த கட்ட படைப்புகளில் தனது
தனித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளவரா? உற்சாகமாக அவதானிக்கலாம் பார்ப்போம்.
படத்தின்
காட்சிக்கோர்புக்கள், பின்கள வடிவமைப்புகள் அட்டகாசம். நமது மக்களின் வாழ்வியல்
அபத்தங்களை பேசும் இக்குறும்படத்தை அந்தரங்கமாக எம்முடன் வைத்திருக்கலாம்.
இணையத்தில் பார்க்க..
இணையத்தில் பார்க்க..
0 கருத்துக்கள்:
Post a Comment