இண்டர்வ்யூ(2014) ஹாலிவூட் சினிமா – ஓர் பார்வை

>> Sunday 1 March 2015


அமெரிக்காவுக்கு தலையிடி தரும் தலைவர்களில் தென்கொரிய அதிபர் “கிம் ஜொங் உன்” மிக முக்கியமானவர் அவரை பாரபட்சம் பார்க்காமல் கிண்டலோ கிண்டலடித்து “இண்டர்வியூ” என்றவொரு ஹொலிவூட் திரைப்படம் கடும் சர்சைகளுடன் கடந்த கிறிஸ்மஸ் அன்று வெளிவந்தது தெரிந்திருக்கலாம். அப்படி என்னதான் படத்திலிருக்கின்றது என்று பார்க்க முதல் கொஞ்சம் வடகொரிய ஹிஸ்ரி நமக்கு அவசியம். அதை  ஒருதபா மேலோட்டமாக பார்த்துவிடலாம்.

1910இல் இருந்து 1945வரை ஜப்பானிய கொடூர சர்வதிகார ஆட்சிக்குக் கீழ் இருந்த கொரியாவை ஜப்பானிடம் இருந்து அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் இழுத்துப்பறித்து பங்கு போட்டுக் கொண்டன. வடகொரியா தென்கொரியா என இரு நாடுகளாகப் பிரிந்த முட்டிமோதிய சமாச்சாரங்கள் எல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும். எனவே அறுக்காமல் முக்கிய சுவாரசியமான விஷயங்களை பார்க்கலாம்.

"யூகே" கம்யூனிஸ்ட் பொதுவுடமை பொருளாதரத்தைக் கொண்ட வட கொரியா தனது படை வலிமையை பெருக்கிக் கொண்டே இருக்கிறது நீண்ட தூரம் பாயும்  ஏவுகணைகளைபரிசோதித்து வெற்றிகண்டுள்ளது. தென்கொரியா அமெரிக்காவுக்கு சலாம் போடும் முதலாளித்துவ நாடு அதுமட்டும் அல்லாது அமெரிக்காவிடமிருந்து பெருமளவு ஆயுதங்களை வாங்கி வைத்திருகின்றது. அமெரிக்க படைத்தளமும் அங்கேயிருக்கிறது. வடகொரியா தனது நாட்டின் பொருளாதாரப் பிரச்சனையை தனது படைபலப் பெருக்கத்தால் மறைத்து வருகிறது என தொடர்ந்தும் குற்றம் சுமதப்படுகின்றது. வடகொரிய யுரேனியம் செரிவூட்டல் அணுவாயித பரிசோதனைகள் என்று கிளம்ப அமெரிக்காவுக்கு சொல்ல முடியாத கடுப்பு எகிறிக்கொண்டேயிருந்தது. வடகொரியாவின் அணுக்குண்டு தயாரிப்பைத் தொடர்ந்து அதன் மீது அமெரிக்காவும் தென்கொரியாவும் பொருளாதாரத் தடையை விதித்தன. கடுமையாக எச்சரித்தும் ஒன்றும் பிடுங்க முடியவில்லை. “ஆமாண்டா ஆணுகுண்டுதான் செய்ன் என்ன பிடுங்க ஏலுமோ செய்துக்கோ..” என்று அமெரிக்காவுக்கே பாச்சா காட்டினார் கிம் ஜொங் உன்.
                                          கிம் ஜொங் உன்
வட கொரியாவின் அணுக்குண்டு தயாரிப்பால் அமெரிகாவும் கொரியாவும் கதிகலங்கிப் போய்யுள்ளமை நாம் தினமும் பத்திரிகைகளில் பார்த்து தெரிந்து கொண்டவைதான். கிம் ஜொங் உன் அதிரடியாக அமெரிக்க வரைபடத்தை வைத்து அமெரிக்கா மீது எப்படி அணுக்குண்டுத் தாக்குதலை நடாத்துவது என்று தனது படைத்துறையின் உயர்அதிகாரிகளுடன் திட்டமிடுவது போன்ற படங்கள் வெளிவிட்ப்பட்டது. அந்தப்படம் "Plan for the strategic forces to target mainland U.S.என்றதலைப்புடன் வெளியாகியது.  அத்துடன் வட கொரியப்படைகள் நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் படகுகளான hovercraftsஇல் ஒத்திகை செய்யும் படங்களும் வெளிவிடப்பட்டுள்ளன. அமரிக்காவுக்கு இது மிகபெரும் எரிச்சலை கிளப்பியது.

இப்படி எல்லாம் நிலைமை சூடுபிடிக்க 30-03-2013-ம் திகதி கொரிய மக்களை ஒரு செய் அல்லது செத்து மடி போருக்குத்தயாராகும் படி கிம் ஜொங் உன் அறைகூவல் விடுத்ததுடன் தென் கொரியாவுடன் ஒரு போர்ப்பிரகடன நிலை நிலவுவதாகவும் அறிவித்தார்.தமது போர் தென் கொரியாவிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லாமல் அமெரிக்காவிற்கு எதிரானதாக அமெரிக்க நிலத்திலேயே நடக்கும் போராக இருக்கும் என்றும் அசால்டாக அமெரிக்காவையே மிரட்டினார் கிம் ஜொங் உன். இப்படி எந்த நாடும் போர் தொடுக்கமுன் இப்படி அறிவுப்புகளை வெளியிடுவதில்லை. இது என்னய்யா புதுசாயிருக்கிறதென்று உலகமே குழம்பிபோனது. ஒரு கட்டத்தில் அமெரிக்கா கிம் ஜொங் உன் இனது நடவடிக்கைகளை கோமாளித்தனமாக பார்கத்தொடங்கியது, சும்மா வாய்பாச்சா காட்டுகின்றான் டுபாகூர் என்று அமெரிக்கா கண்டுகாமல் இருந்ததுதான், ஆனால் உண்மையில் வடகொரியாவின் அணுவாயித பரிசோதனைகள் அமெரிக்க வயிற்றை பிராண்டி கிளியூட்டியது.
வட கொரிய மக்கள் கடும்பஞ்சத்தில் வாழ்கின்றார்கள் அங்கே மிகக்கொடூரமான ஆட்சி நடக்கின்றது, மக்கள் நிம்மதியாக இல்லை இந்த படைபல பெருக்கத்தை நிறுத்திவிட்டு மக்கள் பஞ்சத்தை போக்க வடகொரிய முனைப்பு காட்டவேண்டுமென்று அமெரிக்கா சீறிக்கொண்டேயிருகின்றது. கிம் ஜொங் உன் அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை அவர் தன்பாடு.

இந்த கடுப்பெல்லாம் சேர்த்துவைத்து வந்த படம்தான் இன்டர்வியூ. உலகப் பிரபல நபர்களை நகைசுவையாக தனக்குரிய ஸ்டைலில் நேர்காணும் "ஸ்கைலார்க் டுநைட்" என்ற என்ட்டர்டேய்மண்ட் தொலைக்காட்சி நிகழ்ச்சியை நிகழ்த்துகின்றார் “டேவ் ஸ்கைலார்க்”. அட்டகாசமாக பிச்சுகிட்டு போகின்றது நிழ்ச்சி. பெரும்பாலானவர்களின் அபிமான நிகழ்ச்சியாக உருவெடுக்கின்றது.1000வது நிகழ்ச்சியைத் தாண்டி செமையாக ஓடிக்கொண்டிருகின்றது. இந்த நேரத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் அணுவாயிதம் பூட்டப்பட்ட ஏவுகைனைகளை பரிசோதித்து அனைத்து அமெரிகர்களின் கவனத்தையும் ஈர்கின்றார், அடிக்கடி அவரைப்பற்றி எல்லா தொலைக்காட்சிகளும் Braking newsசை போட்டு பரபரப்பை கூட்டுகின்றனர். இப்படி நிலைமை போய்கிட்டு இருக்கும்போது நிகழ்ச்சி தயாரிப்பாளரின் நண்பர் ஒருவர் உங்கள் நிகழ்ச்சியில் எப்போதும் சாதாரண கூலான நிகழ்சியையே காட்டுகின்றீர்கள் ரொம்ப சீரியசாக ஒன்றும் இல்லை என்று கடுப்பேத்தி விடுகின்றார். இந்த நேரத்தில் வடகொரிய அதிபர் “கிம் ஜொங் உன்” இந்த நிகழ்சியின் விசிறி என்பது டேவ் ஸ்கைலார்க்கு தெரியவருகின்றது. அவசர அவசரமாக அவரது மூளை ஒரு கணக்குபோடுகின்றது. இந்த பரரப்பில் நேரடியாவே கிம் ஜொங் உன்னை ஒரு சுவாசரியமான இண்டர்வ்யூ செய்து ஒளிபரப்பினால் பலரின் கவனிப்பு கிடைக்கும், சீரியஸ் இல்லை என்று சொன்னவர்களின் வாயை அடைக்கலாம் இன்னும் பிரபலமும் ஆகலாம் என்பதுதான் அது. வடகொரிய எம்பஸிக்கு விண்ணப்பம் அனுப்பிவிட்டு இருக்க நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆரன் ராப்பபோர்ட்டை தொடர்பு கொள்ளும் வடகொரியா, இண்டர்வ்யூ தொடர்பாக பேச சைனாவின் வடகொரிய எல்லைக்கு வரச்சொல்கின்றார்கள். சைனா பயணமாகும் ஆரன் சூக் என்ற வடகொரிய இராணுவ பெண்ணை சந்திக்கின்றார். ஸ்கைலார்க் டுநைட் இண்டர்வ்யூ நிகழ்ச்சியில் பங்குபற்ற கிம் ஜொங் உன் விருப்பத்துடன் சம்மதம் தெரிவிக்கின்றார் ஆனால் அவர் அனுப்பிய கேள்விகளையே கேட்க வேண்டும் என்றும் சூக் சொல்கின்றாள்.

இன்ப அதிர்ச்சியில் திகைக்கும் ஸ்கைலார்க் டுநைட் குழுவினர் தங்கள் தொலைகாட்சியில் விளம்பரம் செய்ய அமரிக்கா மட்டும் அல்லாது உலகமே சுதாகரிகின்றது. இதுவரை வடகொரியாவுக்கு எந்த சுற்றுலா பயணிகள் உட்டபட யாரும் பயணிக்க முடியாது. அங்கே என்ன நடகின்றது என்பதே சுத்தசூனியம். டீசல்,பெற்றோல் உட்பட என்ன கண்ணுக்கு ஊற்றி பார்த்தாலும் அமெரிக்கர்களினால் நிஜமா வடகொரியாவில் என்ன நடகின்றது என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்த நேரத்தில் டேவ் ஸ்கைலார்க், ஆரன் ராப்பபோர்ட்டும் வடகொரிய பயணம் போகிறார்கள். 

CIA உசார் ஆகின்றது, டேவ் ஸ்கைலார்கையும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆரன் ராப்பபோர்ட்வையும் அணுகுகின்றது. அவர்களுக்கு அமரிக்க தேசியவாதம் கற்பிக்கும் CIA எஜண்ட் லேசி,கிம் ஜொங் உன் தொடர்ந்தும் வடகொரிய அதிபராக இருந்தால் சிக்கல் எனவே அவரை போட்டுவிட சொல்கின்றாள். கிம்முடன் கைகுலுக்கும் போது அவரைக் கொல்லக்கூடியரைசின்”என்ற நச்சுத்தூளைக் கொண்ட பட்டி ஒன்றையும் தருகிறார். ஆரம்பத்தில் டேவ் ஸ்கைலார்க், ஆரன் ராப்பபோர்ட்டும் தயங்கினாலும் இதில் மாட்டிக்கொள்ள முடியாது என்பதால் சம்மதம் சொல்கிறார்கள். காரணம் மருந்து உடனே வேலை செய்யாது கொஞ்ச காலம் எடுக்கும், அதற்குள் இண்டர்வ்யூவை முடிச்சுகொண்டு ஜாலியாக ப்ளேன் ஏறிவிடலாம்.
வடகொரியா பயணமாகும் டேவ்,ஆரன்க்கு பலமான வரவேற்பு கிடைகின்றது! அதிபர் இல்லத்தில் தங்கவைக்க முதல் பரிசோனைக்கு உள்ளாகும்போது அதிபரிற்க்கு வேண்டப்பட்ட ஒரு அதிகாரி ரைசின் நச்சுபொருளை எடுத்து விடுகின்றார். என்ன இது என்று கேட்க பேந்த பேந்த விளிகிக்க எதோ சுயிங்கம் என்று அதை மென்ருவிடுகின்றார் அந்த அதிகாரி. இருந்ததே ஒரு ரைசின் அதுவும்போச்சா! உடனே CIA ஏஜண்ட் லேசிக்கு சொல்ல தென்கொரிய அமரிக்க படைத்தளத்தில் இருந்து ஆளில்லா விமானம் மூலம் இரண்டு ரைசின் நச்சு பொருள் அனுப்பப்படுகின்றது. அதில் ஒன்றை ஆரன் தேவ்க்கு தெரியாமல் பத்திரபடுத்தி விடுகின்றார்.

கிம் ஜொங் உன் கை சந்திக்கின்றார் டேவ். ஆரம்பத்திலே டேவ்க்கு அன்புபரிசாக டேவ் போன்ற சிலையை கொடுக்கின்றார். கவரப்பட்ட டேவ் கிம் ஜொங் உன் உடன் சுத்துகின்றார். கிம் ஜொங் உன்உம் ஜாலியான ஆசாமி இருவருக்கும் இடையில் நட்பு கெமிஸ்ட்ரி லாகவமாக பத்திகொள்கின்றது. கிம் ஜொங் உன் உடன் ஜாலியாக வடகொரியாவை சுற்றி அரட்டை அடித்து என்ஜாய் செய்யும் டேவ்க்கு மிகவும் பிடித்துவிடுகின்றது கிம் ஜொங் உன்கை. இதவிட ஒரு அமேசிங் டே இருக்க முடியாது என்று ஆரன்க்கு சொல்கின்றான். கிம் ஜொங் உன்னை போட்டுதள்ளும் முடிவை கைவிடுகின்றான். இருந்த ரைசின் நச்சுபொருளையும் அழித்துவிடுகின்றான். ஆரன்க்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை, தன்னிடம் இருந்த ரைசின் நச்சுபொருளை வைத்து கிம் ஜொங் உன்னை போட்டுதள்ள கிளம்ப அதையும் லாவகமாக டேவ் தடுக்கின்றான்.
கிம் முன் ஓர் இரவு விருந்தில் உணவு அருந்தும் போது கிம்மின் உண்மையான முகத்தைக்காண்கிறார் டேவ். நாட்டைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்கிறார். டேவ்க்கு ஏதோ பிழையாக இருப்பது தெரிகின்றது. கடைகளை பார்க்கும்போது அங்கே போலி பொருட்கள் வெறும் காட்சிக்கு இருப்பது புலனாகின்றது. கடுப்பாகும் டேவ் தான் தவறு இழைத்ததாக வருதப்படுகின்றான். கிம் ஜொங் உன் ஓர் மோசமான ப்பேக் தலைவன் அவனை அகற்ற வேண்டும் என்று முடிவேடுகின்றான். இந்த நேரத்தில் அதிபருக்கு வேண்டப்பட்ட முன்னம் சந்தித்த சூக்குடன் காதல் கொளகின்றார் ஆரன். சூக்கு கிம் ஜொங் உன்னின் உண்மையான விம்பம் தெரியும் அவளுக்கும் கிம் ஜொங் உன்கை பிடிக்கவில்லை அவரை அகற்ற விரும்புகிறாள். மூவரும் இணைகின்றனர்.

இண்டர்வ்யூக்கு ஏற்கனவே கிம் ஜொங் உன் இனால் எழுதி அனுப்பப்பட்ட கேள்;வியையே கேட்காமல் இன்டர்வியூவில் பல முக்கிய கேவிகளை கேட்டு கிம் ஜொங் உன்கை தடுமாற விட்டு, தொலைக்காட்சியில் பார்க்கும் வடகொரிய மக்களுக்கு கிம் ஜொங் உன் இன் பலவீனமான முகத்தை காட்டி கிம் ஜொங் உன்கை துகில் உரிப்பதே நோக்கம். இதன் மூலம் கிம் ஜொங் உன்னை கடவுளாக பார்க்கும் வடகொரியர்களின் எண்ணம் மாறும். ஆட்சியை மாற்றலாம் என்பதே ஐடியா.
கிம்முடனான நேர்காணல் நிகழ்ச்சியை உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்புகிறார்கள்.கிம்மின் கழிவறைப் பிரச்சினை தொடக்கம், சர்ச்சைக்குரிய பல விடயங்களை அந்தநேரடி நேர்காணலில் பேசி கிம்மை ஆத்திரமடைய வைக்கிறார்கள். கடுப்பேறி கிம்தனது துப்பாக்கியால் டேவை சுடுகிறார். நேரடி நிகழ்ச்சியில் இதை பார்த்து உலகமே ஸ்தம்பிக்கிறது. ஆனாலும் குண்டு துளைக்காத ஆடை அணிந்திருந்தமையால் டேவ் தப்புகிறார். அதன்பின் வழமையான ஹொலிவூட் மசாலாப்படி டேவ், ஆரன், சூக் மூவரும் கவச வாகனம் ஒன்றில் ஏறி தப்பிச்செல்கிறார்கள். கிம் அவர்களை ஹெலிகாப்டர் ஒன்றில் ஏறித் தொடர்கிறார். கவச வாகனத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் கிம் இறந்துபோகிறார். சூக்கின் உதவியுடன் அமெரிக்க ஆறாம் சீல் குழுஇருவரையும் காப்பாற்றுகிறது. டேவ் தனது அனுபவங்களை நூலாக எழுதி வெளியிடுகிறார். வடகொரியாவில் மக்களாட்சி மலர்கிறது, இவ்வாறு படம் முடிகின்றது.

டேவ்வாக நடித்தவர் சேத் ரோகன், ஆரன்னாக நடித்திருந்தவர் ஜேம்ஸ் பிரான்கோ. இருவரும் ரொம்பவே நடித்து ரொம்பவே சிரிப்பை வரவழைகின்றனர். படத்தில் நடித்த சேத் ரோகன்க்கும் எவன் கோல்ட்பேர்க் ஆகியோர் படத்தை இயக்கியிருந்தனர். கிம் ஜொங் உன் காக நடித்தவர் “ராண்டல் பார்க்” என்ற நடிகர். அச்சு அசலாகவே கிம் ஜொங் உன் போலவே உருவமைப்பை கொண்டவர் நிஜமான கிம் ஜொங் உன் போலவே இருகின்றார்.
              கிம் ஜொங் உன் ஆக நடித்த “ராண்டல் பார்க்”
உயிருடன் உள்ள ஒரு தலைவரை இந்தளவு நக்கல் செய்து கொள்ளபடுவது போல் காட்டப்பட்டுள்ளது அமரிக்காவின் வக்கிர காழ்புணர்வின் புத்தியையே காட்டுகின்றது. மிகவும் கோமாளியாக கிம் ஜொங் உன் னை சித்தரித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தை வெளியிட வடகொரிய கடும் எதிர்ப்புக்களை காட்டியது. தமது தேசிய தலைவரை தவறாக சித்தரித்து அவருக்கும் களங்கம் ஏற்படும் வகையில் இந்தப் படம் உள்ளதாக கூறியது. இது பயங்கரவாதிகளின் படம் இதை வெளியிட்டால் சோனி நிறுவனத்தின்மீது தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரிய பகிரங்கமாகவே அச்சுறுத்தியது. வெளிவிடப்படும் தியட்டர்கள் மீதும் தாக்குவோம் என்று கடுமையாக வடகொரிய சீறியது. கடும் சர்ச்சைகள் உருவாக தியடர்களில் வெளியிடபோவதில்லை என்று சோனி நிறுவனம் கூறியது. இந்தமுடிவுக்கு அமரிக்க அதிபர் “ஒபாமா” கடும் எதிர்ப்பை வெளிபடுத்தினார் தியட்டர்களில் வெளியிட சோனி நிருவனத்திற்க்கு அழுத்தம் கொடுத்தார். இறுதியில் சில தியட்டர்களிலும் இணையதளங்களிலும் வெளியாகியது.

அமெரிக்காவின் வக்கிரபுத்தியை அழகாக சித்தரிக்கும் ஒரு காழ்புணர்வு திரைப்படம் இது. படங்களில் வரும் வசனங்கள் எல்லாம் எசகுபிசகான ரகம் ஆனால் வயிறுவலிக்க சிரிப்பதற்க்கு உத்தரவாதம். யாரும் குடும்பத்துடன் பார்த்தால் டங்குவார் அறுந்துவிடும் ஜாக்கிரதை.




Comments

2 கருத்துக்கள்:

மெக்னேஷ் திருமுருகன் 1 March 2015 at 21:45  

என்ன சகோ ! வொர்த்தான படம்போல இருக்கு ! the great dictator மாதிரி இருக்குமா ??

Annogen 1 March 2015 at 21:52  

//megneash k thirumurugan// ஹஹா அந்தளவுக்கு இல்ல..சும்மா ஜாலிக்கு பார்கலாம்...

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP