Fifty Shades of Grey (2015) - விமர்சனம்

>> Sunday 8 March 2015

E. L. James ஆல் எழுதப்பட்ட ரோமான்டிக் ஏரோட்டிக் பிரிட்டிஷ் நாவல் Fifty Shades of Grey . மிகபிரபல்யமான இந்த நாவல் நூறு மில்லியனுக்கு மேல் உலகமெங்கும் பரபரப்பாக விற்றுத்தள்ளியது. 52 மொழிகளில் மொழிபெயர்கப்பட்டது. பிரிட்டிஷ் நாவல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக இடம்பிடித்து. ஏரோட்டிக் நாவல் என்றாலே உங்களுக்கு புரிந்திருக்கும் அஜால் குஜால் வகையை சார்ந்ததென்று. ஆனால் ஆண்களைவிட அதிகமாக பெண்களினால் இவ் நாவல் மிகரகசியமாக விரும்பி வாசிக்கப்பட்டது. எழுத்து வடிவில் சில சில்மிஷங்களை வாசிப்பது சுவரசியமானதாம், அந்த சைகலோஜிக்கை மெய்பித்திருகின்றது நாவலின் விற்பனை. Fifty Shades of Grey இன் கண்மண் தெரியாத வெற்றியை தொடர்ந்து அதன் தொடர்ச்சியான சீரிஸ் Fifty Shades Darker, Fifty Shades Freed நாவல்கள் வெளியாகின, ஆனால் Fifty Shades of Grey அளவுக்கு பிரபல்யம் ஆகவில்லை.

இந்த பரபரப்பான Fifty Shades of Grey நாவலை அடிப்படையாக கொண்டு Kelly Marcel ஆல் திரைக்கதை எழுதப்பட்டு Sam Taylor-Johnson என்ற பெண் இயக்குனரால் இயக்கப்பட்டு அதே நாவலின் பெயரில் இந்த வருட பிரப்பிரவரியில் Fifty Shades of Grey திரைப்படம் ஹாலிவூட்டில் வெளியாகியது. பிரமாண்டமான பாக்ஸாபிஸ் ஹிட்டாகி 500மில்லியன் டாலர்கள் இதுவரை குவித்திருக்கின்றது.

வாஷின்டன் யூனிவர்சிட்டியில் ஆங்கில இலக்கியம் இறுதிதியாண்டு படிக்கும் மாணவி “அனா”. அவளின் ரூம்மேட் “கேட்” யூனிவர்சிட்டி நியூஸ் பேப்பர்க்காக இளம் தொழிலதிபர் “கிறிஸ்டியன் க்ரேயை” இண்டர்வ்யூ எடுக்கவேண்டிய தேவையில் இருக்கின்றாள். அவளால் துரதிர்ஷ்டவசமாக செல்லமுடியவில்லை. நண்பிக்காக அனா க்ரேயின் ஹெட்குவார்டஸ் இருக்கும் இடமான “சியாட்டல்” போகின்றாள். மிக பிரமாண்டமான அழகான சுற்று சூழல் அவளை கவருகின்றது. க்ரேயை பார்த்த முதல் நொடியே அவனின் வசீகரம் அனாவை இம்சிக்கின்றது. பத்து நிமிடமே அனாவின் கேள்விக்கு பதிலளிக்க க்ரே முதலில் ஒதுக்குகின்றான்.
பதற்றத்துடன் மெலிதான நடுக்கத்துடன் நண்பி கேட் எழுதிகொடுத்த கேள்விகளை முன்தயாரிப்புக்கள் ஏதுவுமின்றி கேட்கின்றாள். பலசமயம் அவளின் வார்த்தைகள் தடுமாறுகின்றன. சிறுமிக்குறிய சில வெகுளித்தனமான இயல்புகள் அனாவிடமிருந்து வெளிப்பட இயல்பாகவே க்ரே அவளிடம் கவரப்டுகின்றான். பத்து நிமிடங்களில் அவளால் உருப்படியாக எந்த கேள்விகளையும் கேட்கமுடியவில்லை. ரொம்பாவே தடுமாருகின்றாள். அனாவின் அப்பாவித்தனத்தை பார்த்து இம்பெர்ஸான க்ரே அவளை பற்றிகேட்க தொடங்குகின்றான். அனா பகுதிநேரமாக வேலைபார்க்கும் ஹாட்வெயர் ஷாப்க்கு வருகின்றான்,அவளையே இடைவிடாமல் தொடர்கின்றான்.

ஆர்டிகல் ஒன்றுக்கு க்ரேயின் புகைப்படம் எடுக்க அனா அணுகுகின்றாள். அதற்கு சம்மதம் தெரிவிக்கின்றான். புகைப்பட போட்டோசூட் முடிய காபிஷாப் போகின்றார்கள். அனாவுக்கு க்ரேயை அவளையறியாமலே பிடித்துவிடுகின்றது. மிக விலைமதிப்பான 1891ஆம் ஆண்டு வெளியாகிய Tess of the d'Urbervilles நாவலின் முதல்பதிப்பை பரிசளிக்கின்றான். க்ரேயை தவிர்க்க பார்க்கின்ற அனா மனதளவில் எப்போதும் தோற்கின்றாள். க்ரேயின் வசீகரத்திலிருந்து இலகுவில் விடுபடமுடியவில்லை.
நண்பிகளுடன் நைட்பாரில் பியர் அருந்திகொண்டிருக்கும்போது க்ரேக்கு Tess of the d'Urbervilles நாவல் தந்ததிற்கு நன்றி சொல்கின்றாள். ரொம்பவே தடுமாறி அனா போதையில் பிதற்ற க்ரே அவளை அழைத்து செல்கின்றான். அழைத்து செல்லும்போது முற்றுமுழுதாக சுயநினைவு இழந்து விடுகின்றாள். காலையில் எழும்பிப் பார்க்க க்ரேத தங்கியிருக்கும் ஹோட்டலில் இருகின்றாள். அவளின் உடைகள் அனைத்தும் க்ரேயினால் மாற்பட்டுள்ளது. அவளின் பக்கதிலேயே இரவு படுத்திருகின்றான், அனா பயந்ததுபோலும் நாம் எதிர்பார்த்ததுபோலும் க்ரே உடலுறவு ஒன்றும் வைக்கவில்லை.

அடிக்கடி க்ரேயும் அனாவும் சந்திகின்றார்கள் அனாவுக்கு க்ரேமீது அதிகமான காதல் சுரக்கின்றது. க்ரே ஹெலிகாப்டரில் தன்னுடைய சியாட்டல் அப்பார்ட்மெண்ட்டுக்கு கூட்டிச் செல்கின்றான். ரோமான்ட்டிக்காக சென்றுக்கொண்டிருந்த படம் இங்கேதான் முக்கிய சுப்ரைசை தருகின்றது. வெளிபடுத்தாவொரு ஒப்பந்த பேப்பரை காட்டுகின்றான் க்ரே, அவன் தன்னைப் பற்றி சொல்லும் விடயங்கள் அனாவை மட்டுமல்ல எம்மையும் திடுக்கிடவைகின்றது. முக்கிய ரெண்டு விடயங்களை தெளிவுபடுத்த வேண்டும் என்கின்றான். ஒன்று “தான் காதலிப்பது இல்லை அத்துடன் கொடூரமாக உடல் உறவுவைப்பேன்” அனா இரண்டாவதை கேட்க ஒரு அறைக்கு அழைத்து செல்கின்றான் அங்கே க்ரே காட்டும் பொருட்கள்??... கொடூரமாக உடல் உறவுவைகும் முறையான Bondage உடன் சம்ந்தப்பட்ட பொருட்களான Rope, cuffs, bondage tape, self-adhesive bandages போன்ற எக்கசக்கமாக பொருட்கள் குவிந்து கிடகின்றன. (மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக்செய்யது விக்கிபீடியாவில் படிக்க) “நான் இதற்கு அடிமை எனக்கு சில அடிப்படை விதிகள் இருகின்றன அதை நீ பின்பற்றினால் வெகுமதிகள் தருவேன் இல்லாவிட்டால் தண்டிப்பேன் உனக்கு இது பிடிக்காவிட்டால் தாரளமாக செல்லலாம்” என்கின்றான்.

மேற்கூறிய விடயங்களை ஒப்புகொண்டு வெளிபடுத்தமுடியா ஒப்பந்தம் ஒன்றுக்கு கைச்சாத்திட சொல்கின்றான் க்ரே, அதில் பலவிடயங்கள் பொதிந்திருக்கின்றன, அனா தயக்துடன் அதை எதிர்கொள்கின்றாள். ஒபந்தத்தில் கைச்சதிடாமல் நாட்களை கடத்துகின்றாள். ஆனால் அவளால் க்ரேயை தவிர்க்க முடியவில்லை. க்ரேயின் வசீகரம், நாகரிகமான ரோயல் லுக் அனாவை கட்டிப்போடுகின்றன. அடிக்கடி Bondage முறையில் உடலுறவும் கொள்கின்றார்கள். அவளின் பழைய காரை விற்றுவிட்டு புதிய கார், லேப்டாப் பரிசளிகின்றான். தனது குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தி வைக்கின்றான். அனவை அவளின் குடும்பதினருக்கு ரொம்பவே பிடிகின்றது.

ஒப்பந்ததில் அடிக்கடி கைசாத்திட சொல்கின்றான், அவளால் அதை செய்ய முடியவில்லை தான் உன்னை நிஜமாக காதலிக்கின்றேன் தன்னை நிஜமாக அப்படி ஏற்கறுகொள்ளச் சொல்கிபார்கின்றாள். அதற்கு க்ரே மறுகின்றான். கடைசில் என்ன ஆகின்றது என்பதே மிசசொச்ச கதை.
இந்த திரைப்படம்,நாவலின் மையக்கரு நமது கலாசாரத்துக்கு ரொம்பவே அந்நியமானது,கண்டிப்பாக இது 18+ திரைப்படம். படத்தில் வரும் பலகாட்சிகள் ரொம்பவே நெருக்கமானதாக இருந்தாலும் இதைவிட பலமோசமான காட்சிகளை நாம் வேறு திரைப்படங்களில் பார்த்திருக்கின்றோம். அதிகமான உடலுறவு காட்சிகள் இடம்பெறுகின்றன, கதையே அதைவைத்துதானே. ஆனால் கலைநயமாகவே காட்சியமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ரோமான்ஸ் காட்சிகளில் வரும் பின்னி இசைகள் அட்டகாசமாக ஒலிகின்றது, குறிப்பாக கிளைடரில் பறந்து செல்லும்காட்சிகளும் இசையும் அட்டகாசம். ஆரம்பத்தில் திரைக்தை வேகமாக நகர்ந்தாலும் பிற்பகுதியில் தொய்வாகவே நகர்கின்றது. சில சமயம் அலுப்பூட்டும் வகையிலிருந்தாலும் ஒளிபப்திவு, வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. அனாவாக நடித்தவர் அமெரிக்க மொடல் நடிகை Dakota Johnson. க்ரேயாக நடித்தவர் Jamie Dornan

ஸ்ரீலங்காவில் லிபேட்டி தியட்டரில் அமோகமான ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்தியாவில் இந்த திரைப்படத்தை காண்பிக்க தடைவிதிக்கப்பட்டடுள்ளதாக தெரிகின்றது. இந்த தடையால் தம்மை கலாச்சார பாதுகாவலராக பி.ஜே.பி மறுபடியும் காண்பிக்க நினைக்கலாம். ஆனால் ஒரு திரைப்படத்தை ரொம்ப ஈசியாக தடைசெய்யலாம் என்று நான் நினைக்கவில்லை. Fifty Shades of Grey பற்றி தெரியாதவர்கள் கூட எனி கிண்டபோகின்றார்கள். நல்ல காப்பி எங்கே டவுன்லோட் செய்யலாம் என்று விடலைபயல்கள் நெட்டில் தேடத்தான் போகின்றார்கள். ஆனால் Fifty Shades of Greyயை கண்டிப்பாக பார்கவேண்டிய திரைப்படை வரிசையில் வைக்க வேண்டிய தேவையில்லை என்பதே என் கருத்து.


                              டிரைலர்


                                                                   


Comments

2 கருத்துக்கள்:

மெக்னேஷ் திருமுருகன் 8 March 2015 at 14:33  

அப்படினா நா கண்டிப்பா பார்க்கமாட்டேன் ப்ரோ ! . உங்க lego batman ரியவியு படிச்சேன் . படம் பாக்கனும்னு தோனுது . ஆனா டைம் தான் கிடைக்கல . பாத்துட்டு என்னோட அனிமேஷன் சீரிஸ்ல சேர்த்துக்கறேன் .

Annogen 8 March 2015 at 18:43  

//megneash k thirumurugan// ஓகே ப்ரோ..நானும் உங்கள் பதிவுகளை அதி உன்னதமாக எதிர்பார்கின்றேன்..

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP