Walk of Shame (2014) - விமர்சனம்

>> Wednesday 4 March 2015


தொலைகாட்சி நிகழ்சிகளில் அங்கராக வேலைபார்ப்பது ஒருவகையில் சுவாரசியம், பிரபலத்தை பெற்றுத்தரும் என்றாலும் நேரடி நிகழ்ச்சியில் சொதப்பிவிட்டால் டங்குவார் அறுந்துவிடும். ஓவ்வரு வார்த்தைகளையும் உன்னிப்பாக பிறழாமல் சொல்ல வேண்டும். நியூஸ் லைவ்வாக வாசிக்கும்போது கமராவுக்கு பக்கத்து ஸ்க்ரீனில் என்ன வாசிக்க வேண்டும்மென்று வசனங்கள் ஓடிக்கொண்டிருக்கும் அச்சு பிசகாமல் அதை பார்த்து சரியான உணர்வுகளுடன் ஒப்புவிக்க வேண்டும். எங்கயாவது பிராக்கு பார்த்தால் வார்த்தைகள் தடுமாறத்தான் செய்யும். தமிழ் செய்திகளை விட இங்கிலீஷ் செய்திகள் வாசிக்கப்படும்போது சில சமயம் இந்த குளறுபடிகளை அதிகமாக கவனிக்க முடியும். 

நியூஸ்வாசிக்கும் அங்கர் தொடர்பாக வந்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் “வோக் ஒப் சேம்”(Walk of Shame). மேகன் மைல்ஸ்” என்ற பெண்ணுக்கு அங்காரக வேலை பார்கவேண்டும் என்பது கனவு வாசிப்பிலும் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவள். அமெரிக்காவில் உள்ள ஓர் லோக்கல் சனல் KZLA6 இல் காலம்காத்தாலே நியூஸ்வாசிக்கும் அங்கராக வேலை பார்கின்றாள். CNB நெட்வொர்க்கில் நிரந்தரமாக அங்கரhக தொடர்ந்து வேலைபார்க விரும்புகின்றாள். CNB தொலைகாட்சி நெட்வொர்க் மேலிடத்திலிருந்து சாதகமான சமிஞ்சைகள் கிடைக்க வேண்டும். ஏற்கனவே ஒரு நேரடி நிகழ்ச்சியில் பூனைகளிடம் கடிவேண்டி அது யூடியூப்பில் பலரினால் பார்வையிடப் பெற்று மேகனுக்கு தலையிடியை தந்திருந்தது.

நெட்வொர்க் மேலிட இண்டர்வியூவில் திறமையாகவே பதிலிகின்றாள். தான் ஒரு “GOOD GIRL” என்பதை அழுத்தமாக சொல்கின்றாள். CNB யை பொருத்தவகையில் அங்கராக வேலைபார்ப்பவர்கள் மிக ஒழுக்கமாக தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்க வேண்டும். எதுவும் இசகுபிசகான புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் உலாவுவதையே விரும்ப மாட்டார்கள். அப்படியான புகைப்படங்கள் வெளியாகினால் தங்கள் நெட்வொர்க்குக்கு தலையிடிகளை தரும் இறையாண்மை பாதிக்கப்படும் எனவே இந்த விடயங்களில் கறாராக தங்களை மெய்டேயின் செய்கின்றார்கள். அவர்களின் இறுதிப்பதில் மேகனுக்கு சில நாட்களில் சொல்லப்படும். இந்த நேரத்தில் அவள் திருமணம் செய்யவிருந்த பாய்பிரண்ட் சில கருத்துவேறுபாடால் நமக்குள் ஒன்றுமில்லை எல்லாம் முடிந்துவிட்டதாக தன்னுடைய பெட்டிபடுக்கையுடன் அவளுடன் தங்கியிருந்த அறையை காலி பண்ணி விடுகின்றான். அவள் நண்பிகள் இரண்டுபேர் அவளை நைட்பார்ட்டிக்கு அழைகின்றார்கள்,அந்த நேரத்தில்அவளுடைய நிகழ்சி தயாரிப்பாளர் CNB Wendy Changஎன்ற அங்கரை தேர்வுசெய்து விட்டதாக கூறுகின்றார். உடைந்துபோகும் மேகனை நண்பிகள் நைட்கிளப்க்கு கூட்டி செல்கின்றார்கள். மேகனிடன் பொருத்தமான உடையில்லை எனவே நண்பியின் மஞ்சள் நிற அரைகுறை உடையில் வளவளப்பான துடைகள் தெரிய கிளம்புகின்றாள்.
நைட்கிளப்பில் கண்மண் தெரியாமல் நண்பிகளுடன் குடிக்கின்றாள். ஏறக்குறைய சுயநினைவு இழக்கும் தறுவாயில் அங்கேயிருக்க பிடிக்காமல் கிளப்பில் இடம்மாறி ஏதோவொரு வாசல் வழியாக வெளியே வந்துவிடுகின்றாள். குதிகால் செருப்பு பலகையிடுக்கில் மாட்டிவிடுகின்றது. அப்போது மேகனுக்கு “கோர்டன்” என்ற நபர் அறிமுகமாகின்றான். அவளின் குதிகால் செருப்பை பலகையிடுக்கில் இருந்து மீட்டு அவளுடன் நண்பன் ஆகின்றான். கோர்டன் ஒரு எழுத்தாளன் மேகனுக்கு புத்தகங்கள் இலக்கியம் பிடிக்கும் என்பதால் (அதை விட அவன் அழகாகவேற இருக்கின்றான்) அவளுக்கு கோர்டனை ரொம்பவே பிடித்துவிடுகின்றது. கோர்டன் அவளின் காரில் அவளை தன்வீட்டே அழைத்து செல்கின்றான். அங்கே என்ஜாம்மண்ட் செய்கின்றார்கள். ஒரே படுக்கையில் உருண்டு பிரண்டுபடுத்து கிடத்தட்ட செக்ஸ்சும் ஜாலியாக வைத்து கொள்கின்றார்கள்.

நடு இரவில் போதை தெளிய எழும்பும் மேகனுக்கு ராத்திரி நடந்த விடயம்  உறைக்கின்றது. இரவு கலைத்த தனது உடைகளை தேடிபொறுக்கி அணியும் மேகன் தொலைபேசியழைப்புக்களை செச்பண்ணும்போது அவளின் நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம் இருந்து வந்த மெசேச்சை கேட்க்கின்றாள் “ஏற்கனவே மாற்றிய அங்கரினுடைய ஏடாகூட புகைப்படம் ஒன்று மேலிடத்துக்கு சிக்கிவிடது எனவே அவளை நீக்கிவிட்டார்கள், அவர்களின் கவனம் உன்மீது திரும்பிவிட்டது நாளைக்கு அவர்கள் உனது நிகழ்ச்சியை நேரடியாக பார்க்க வருகின்றார்கள் எனவே இந்த ராத்திரி நன்றாக ஒய்வெடுத்து நாளை காலை வருக” இதை கேட்ட மேகன் பரபரப்பாகின்றள். போகின்ற அவசரத்தில் ஒரு பூனையைபார்த்து பயந்து செல்போனை தவறவிட்டு கோர்டனுக்கு சொல்லிக்கொள்ளாமல் எஸ்கேப்பாகின்றாள்.

நோ பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த அவளுடைய காரைவேற எடுத்துச் சென்றுவிட்டார்கள். காருக்குள்தான் பேர்ஸ் கையில் ஒருபைசா கூட இல்லை. இருக்கும் இடம்கூட சரியாக தெரியவில்லை. இப்போது வீட்டே மேகன் போயாகவேண்டும். ஒரு டாக்ஸி டிரைவரை நடுராத்திரியில் கெஞ்சிக்கூத்தாடி நித்திரையில் எழுப்பி கூட்டிபோக சொல்கின்றாள். அந்த டிரைவரோ மிடிலீஸ்ட் நாட்டிலிருந்து குடியேறியவர் இங்கிலீஷ் உச்சரிப்புகள் கொஞ்சம் இசகுபிசகு. அவள் சொன்ன இடத்துக்கு பதிலாக வேறோர் இடத்துக்கு கூட்டிசெல்கின்றார். டாக்ஸி டிரைவரோடு முரண்பாடு வருகின்றது. டிரைவர் பணத்தை வைக்கச் சொல்ல இவளிடம் பணம் இல்லை, பணம் தராவிட்டால் ஜெயில் என்று மிரட்ட டிரைவருக்கும் பாச்சா காட்டிவிட்டு எஸ்கேப்பாகின்றாள். கடும் குளிர் ஒதுக்குபுறமான பிரதேசம். போகின்ற, வருகின்ற வாகனங்களில் லிப்ட்டும் கேட்டுப் பாட்கின்றாள். யாரும் கண்டுகொள்ளவில்லை.
கண்ணாடி முன் ஜன்னலுக்காள் குனிந்து எட்டிப்பார்து லிப்ட் கேட்பதை பார்த்து அவளை கால்கேர்ள் என்று சிலர் நினைகின்றனர். உண்மையிலே அங்கே உலாவும் கால்கேர்ள்ஸ் நமக்கு போட்டியாக நமது இடத்தில இவள் யார் புதுசாக என்று திட்டுகின்றார்கள். அந்த நேரத்தில் ட்யூட்டி முடிந்து செல்லும் பொலிஸ்காரரிடம் சிக்கி அவர்களும் இவளை அந்தமாதி நினைத்து இவள் சொல்லவதை கேட்காமல் தங்கள்பாட்டில் கத்தி எச்சரிக்கை செய்கின்றார்கள். அங்கேயிருந்து கிளம்புகின்றாள். கொஞ்சம் விடிந்தும் விட்டது.

இரகசியமான கஞ்சா விற்க்கும் ஒருவன் செல்போன் வைத்திருப்பதை பார்த்து அவனை அணுகுகின்றாள். அந்த நேரத்தில் பொலிசும் அங்கேவர கஞ்சா விற்பவனுடன் இவளும் ஓடுகின்றாள். மஞ்சள் உடையுடன் ஒர் பெண் கஞ்சா கும்பலுடன் ஓடுவதை பொலிசார் கவனித்து விடுகின்றார்கள். அவர்களின் கும்பல் இருக்கும் இடத்தில் இவளும் தஞ்சம் அடைய அவர்களின் தலைவன் இவளை பொலிஸாக இருக்குமோ என்று சந்தேகப்படுகின்றான். அங்கேயிருக்கும் “பூமா” என்பவன் இவளை தினமும் தொலைகாட்சியில் பார்பதாகவும் ரொம்பவே தனக்கு பிடிக்குமென்று இவள் பெயர் “மேகன் மைல்ஸ்” என்று சொல்கின்றான். மேகன் தன்னுடைய சோக கதையை சொல்லி தான் இன்னும் கொஞ்ச நேரத்தில் தொலைக்காட்சி நிலையத்துக்கு போயாகவேண்டும் என்கின்றாள். அவர்கள் இவளுக்கு தங்களுடைய தொலைபேசியை பேசக் கொடுக்கின்றார்கள். மேகனுக்கு எந்த நம்பர்களும் நினைவில் இல்லை. பழைய காதனுடைய நம்பர்,பெற்றோர்களின் நம்பர்கள் நினைவில் உள்ளது.பழைய காதலனுக்கே டயல் செய்கின்றாள் அவனுடன் கதைக்கும்போது அவன் வேறோரு பெண்ணுடன் இருப்பது தெரியவருகின்றது. சண்டை போனில் பிளக்க அந்த நேரத்தில் வேறொரு கும்பல் இந்த கும்பலை போட்டுதள்ள துப்பாக்கியோடு சுட்டுதள்ள வருகின்றார்கள். அங்கேயிருந்து தப்பிச்செல்லும்போது பூமா ஒரு கஞ்சா பொதியை அன்பளிப்பாக கொடுகின்றான். அதை விற்று பணம் எடுக்கச் சொல்கின்றான்.

அங்கேயிருந்து கிளம்பும் மேகன் இன்னும் ஓர் இரகசியமாக கஞ்சா விற்பவனிடன் தான் வைத்திருக்கும் கஞ்சாவை விற்க முயற்சிக்கின்றாள். அதுவும் சரிவரவில்லை. ஓர் பஸ்ஸில் ஏறி அங்கேயும் அவமானப்பட்டு யூதர்களின் பிராத்தனை கூடத்தை அடைகின்றாள். அங்கே இவள் அரைகுறை ஆடையை பார்த்து திகைக்கும் யூதநபர் இவளின் சோகக்கதையை கேட்டு தான் இதுவரை எந்த ஒரு பெண்ணின் குரலிலிருந்தும் இனிமையான பாட்டுக்களை கேட்டதில்லை எனவே ஓரு பாட்டு பாடினால் பஸ்சுக்கு பணம் தருவதாக சொல்கின்றான். இவளும் பாட அதைகேட்டுகொண்டு இன்புற்று கொண்டிருக்க மற்ற யூத நபர்களும் வந்துவிகின்றார்கள் அப்புறம் என்ன அங்கேயிருந்தும் ஓடவேண்டியதாகின்றது.
நண்பிகளும் கோர்டனுடன் இணைந்து தேட தொடங்குகின்றார்கள். பொலிஸ் தலைமையகத்தில் மஞ்சள் சட்டை அணிந்த பெண்தொடர்பாக பேச ஏற்றகனவே ராத்திரி அவளை எச்சரித்த பொலிசார் அவளை நமக்கு தெரியும் என்று உளறிவைக்க அவர்களையே அவளை பிடிக்க அனுப்பிவைக்படுகின்றனர்.

இப்படி பரபரப்பாக போகும் படத்தில் இறுதியில் அவள் குறிபிட்ட நேரத்தில் போய்சேர்ந்தாளா? CNB வேலை என்னவாகின்றது என்பதே மிச்சசொச்ச கதை. முடிந்தவரை நகைச்சுவையாக படத்தை கொன்று சென்றுள்ளார்கள். அநாவசியத்துக்கு ஏசியன்ஸ், யூதர்களை  சாதுவாக கிண்டல் அடித்துள்ளார்கள். 

ஒருநாள் நடக்கும் கதையே படம். குறுகிய பஜ்ஜெட்டில் உருவாகிய இப்படத்தை Focus Features தயாரித்திருந்தார்கள். மேகன் மைல்ஸ் ஆக நடித்திருந்தவர் Elizabeth Bank இவரின் நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது. Steven Brill இந்த படத்தை எழுதி இயக்கியிருந்தார். மியூசிக் John Debney. ரிலாக்ஸ்க்கு இந்த படத்தை பார்கலாம் ஓரளவுக்கு சிரிக்கலாம்.





Comments

0 கருத்துக்கள்:

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP