மார்ச் 13
>> Saturday, 17 January 2015
குறும்பட திறனாய்வு
ஈழ தமிழர்களில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களும் குறும்படங்களை எடுத்து குவிப்பது நவீன பொழுதுப்போக்கை தாண்டி முழுநேர உருவாக்கமாக மாறியும் வருகின்றது. மிகச்சில படைப்புகளே சொல்லிக்கொள்ளும் பரிமாணத்தில் உருவாக்கப்பட்டு ஒரு புதினமாக எம்மை சுவரசியப்படுத்தும் வகையில் வந்துசேர்கின்றது. ஒரு கூட்டு கலை படைப்பான
குறும்படங்களில் அதிகமான ஆளுமை இயக்குனர்களின் கட்டுபாட்டில் இருகின்றபோதிலும் ஒலி,ஒளி அமைப்புக்கள்,
எடிட்டிங் போன்ற இதர விஷயங்கள் இயக்குனரின் ஸ்பரிசத்தில் இருந்து தள்ளியிருக்கின்றது. குறும்படங்களுக்கான இலக்கண விதிகள் தன்னில் எப்போதும் மையமாகக் கொண்டிருக்காது, அது ஒரு சுழற்சியாக மாறிக்கொண்டு இருக்கும். வெறும் நேரம் குறைந்த திரைபடங்களை குறும்பட வகையில் சேர்க்க முடியாது அதே நேரத்தில் சற்று நேரம்கூடிய படங்களை நெடியபடங்களின் வகையினுள் சேர்க்க முடியாது. அவற்றுக்கான இலக்கண விதிகள் இந்த இடத்தில் மையம்கொள்கின்றன.
மார்ச் 13 ஆர்.தினேஷ் இயக்கிய திரில்லர் குறும்படம் வகையினுல் எட்டிப் பார்க்கின்றது. குறும்படத்துக்கான ஆதார இலக்கணங்களை இவ் குறும்படம் வைகைப்படுத்தியுள்ளது. மண்டையை பிசைந்து மாற்று சட்டத்தில் சிந்தித்து அமைக்கும் கதையிலிருந்து வேறுபட்டு சாதரணமாக ஒரு இலகுவான கடமைப்பை பிற்பகுதியில் இவ்குறும்படம் கொண்டுருந்தாலும் ஆரம்பத்தில் சில சுவாரசியங்களை கதையமைப்பில் தூவிவிட்டு செல்கின்றது.
ஹேமா என்ற பெண்னை மையப்படுத்தி கதை நகர்கின்றது. ஹேமா பாத்திரத்தில் நடித்த பெண்ணின் உடல்மொழி, நடிப்பு அனைத்தும் திருப்தி தருகின்றது. அற்புதமான முகபாவனைகளை வெளிப்படுத்தியிருந்தாலும் அவைகள் சரியாக காட்சிப் படுத்தப்படவில்லை, முக மாறுதல்களை உள்வேண்டும் குளோஸப் ஷாட்கள் இல்லை. சில அதிர்ச்சிகளை அந்த பெண் கனகச்சிதமாக முகத்தில் இயல்பாக வெளிப்படுத்தி இருந்தார், நிச்சயம் அவர் தேர்ந்த நடிகை. மயு கணேசனின் இசை நேர்த்தி. ஹேமா துயிலெழும்போது ஒலிக்கவிடப்படும் குருவிசத்தங்கள்,பின்னியிசையில் இரைச்சல்களை தவிர்தல் என்று தனது பங்கை நேர்த்தி படுத்தியுள்ளார். பார்டியில் நண்பர்கள் உரையாடும்போது அவர்கள் உரையாடல்களின் சத்தத்தை விட படத்தின் பின்னி இசையில் ஒலிக்கும் பாடலில் இரைச்சல் கலந்த ஒலி அதிகமா இருக்கின்றது. எடிட்டிங் இன்னும் மேம்படுத்தப்பட்டு இருக்கலாம். பல்துலக்கும் போது ஒரே சீரான ஷாட் வைக்படுகின்றது ,இன்னும் வேகப்படுத்தியிருக்கலாம். உரையாடல்கள் ஆரம்பத்தில் இயல்பாக இருகின்றது, ஆனால் இறுதி பிளாஷ்பேக்கில் அவை மிஸ்ஸிங் செயற்கையான வசனங்களும் அதனை வெளிபடுத்தும் முறையில் ஏற்ற இறக்கங்களின்றி நாடகதன்மையுடம் பரிதாபமாக இருகின்றது. கதையமைப்பில் மிகப்பெரிய குறை “மார்ச்13” என்று தொலைநகல் சொல்லும்போது ஹேமா டயரியை தேடி அந்த சம்பவத்தை நினைவுபடுத்த முனைகின்றாள். இயல்பு வாழ்கையில் இருந்து மாறுபட்ட ஒரு சம்பவத்தை அன்று அவள் நிகழ்த்திவிட்டாள், அது கொஞ்சம் கொஞ்சமாக அவளை அலையவிட்டிருக்கும்.
ஒரு இயல்பான பெண் அப்படியொரு சம்பவத்தை மேற்கொண்டால் அந்தநாள்,மாதம் மட்டுமல்ல அவளால் அந்த வருடத்தைகூட மறந்திருக்க முடியாது. மார்ச் 13 என்ற தொலைநகலை பார்த்தவுடன் அந்த பெண் அனைத்தையும் புரிந்து இருக்கவேண்டும். இயல்பான உணர்வுகள் மிஸ்ஸிங். திரைக்கதை நுண்ணியமைப்பில் பட ஆரம்பத்தில் விசேஷ மாறுதல்களை கொண்டுதிருந்தாலும் இருதியில் அதன் வடிவமைப்புகள் சிதைந்து விடுகின்றன. ஒளிப்பதிவு திருப்திதரவில்லை முக்கியமாக லைட்டிங் அறவேயில்லை. ஒளிபதிவாளர் ஒளிப்பதிவின் ஆதார விதியான Rule of thirds மீது அதிகவனம் செலுத்த வேண்டும். இயக்குனரின் இயக்கதன்மை பரிமாணிக்கவில்லை. இன்னும் நிறைய படைப்புகளை கூர்ந்து அவதானித்தால் நிச்சயம் அடுத்தகட்டத்துக்கு சென்றுவிடலாம். நிச்சயம் அடுத்த முறை இவர்களால் இதைவிட சிறந்த படைப்பை கொடுக்க முடியும். வாழ்த்துக்கள்.....சியர்ஸ்..
0 கருத்துக்கள்:
Post a Comment