Little Terrorist

>> Friday 16 January 2015

 குறும்பட திறனாய்வு




லிட்டில் டெரரிஸ்ட் 2004ஆம் ஆண்டு அஷ்வின் குமாரினால் இயக்கப்பட்டு வெளியாகி ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது மட்டுமன்றி நூற்றுக்கும் மேற்பட்ட உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இந்திய குறும்படங்களின் வரலாற்றில் அதிமுக்கிய முக்கியமானஅடையாளத்தை பதித்துவிட்டு சென்றது இந்த லிட்டில் டெரரிஸ்ட்குறும்படம்.

இந்தியாவுக்கு மிகஅருகில் இருக்கும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள  கிராமத்தில் உள்ள சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகின்றார்கள். அடித்த பந்து இந்திய எல்லைக்குள் விழுந்துவிடுகிறது, அதையேடுக்க சிறுவன் ஒருவன் எல்லைதாண்டி நுழைகின்றான்.எதோ மாறுதல்களை உணர்ந்த எல்லைபடை காவல்வீரர்கள் உசாராகின்றார்கள். தீவீரவாதி நுழைந்து விட்டதாக கருதி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்கின்றார்கள், தப்பி ஓடும் சிறுவன் இந்திய எல்லைக்குள் அகப்படுகின்றான். எல்லை படைவீரர்கள் சல்லடையிட்டு தேடுகின்றார்கள். தப்பித்து திகைத்து திரியும் சிறுவனை இந்திய எல்லையில் உள்ள கிராமத்தில் உள்ள பிராமணர் ஒருவர் அடைக்களம் கொடுத்து காப்பாற்றுகிறார். வீடு வீடாக சோதனையிட எல்லைபடை வீரர்கள் வருகின்றார்கள். அவர்களிடம் இருந்து சிறுவனை பாதுகாத்து எப்படி பாகிஸ்தானுக்கு பத்திரமாக அனுபிவைகின்றார் என்பதே மீதிக்கதை.

திரைகதையை அதன் மையைகரு சிதையாமல் எழுதுவதிலும் படமாக்குவதிளும் உள்ள இடர்பாடுகளை வெகுவாக குறைத்து அற்புதமான திரைகதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் அஷ்வின். எளிய மனிதர்களின் சாமானிய மனவிம்பங்களை அற்புதமாக வெளிப்படையாக கமராவில் பதிவுசெய்துள்ளார். சிறுவனுடன் பிராமணர் கிரிக்கெட் பற்றி உரையாடும்போது ஒருமரத்தை நினைவுகூறுவார், தனது பால்யகாலத்தில் தானும் விளையாடியதாக நினைவிகளை மீட்பார். அந்த புள்ளியில் அந்த சிறுவனும் பிராமணரும் மனதளவில் இணைகின்றார்கள். அதுவே சிறுவனை பாதுகாக்க உந்துதலை பிராமணருக்கு ஏற்படுத்துகின்றது.
இரக்ககுணத்தை கொண்டதாக பிராமணரும் அவரது பெண்ணும் சித்தரிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களது இயல்பான வாழ்க்கை குணத்தை காட்டுவதில் செஞ்சரி அடிக்கின்றார் இயக்குனர். அந்த பிராமணரின் வீட்டுக்கு சிறுவன் வரும்போது துடைப்பகட்டையை தூக்கி துரத்தவருகின்றாள் பிராமணரின் பெண். பிராமணர்களின் சாதியவெறிகள் அதற்கும்மேலாக தெரியும் மனிதாப குணங்கள் இவை இரண்டுக்கும் இடையில் சமநிலையை குழப்பாமல் பாத்திரங்களின் தன்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


சிறுவனுக்கு ரொட்டிகளை இரவு உணவாக கொடுக்கும்போது அவர்களின் சட்டியில் அவன்தொட்ட உணவை வைத்து விடும்போது பிராமணரும் அவரது மகளும் திகைகின்றார்கள் அவர்கள் திகைக்கும்போது சிறுவன் புரியாமல் விழிக்கிறான் அந்த கணத்தில் சிறுவனின் உணர்வுகள்,பிரமாண பெண்ணின் உணர்வுகள் கச்சிதமாக படத்தில் பதிவாகின்றது. அன்பாக ரொட்டிகள் தந்தாலும் மறைமுகமாக அவன் தொட்ட பாத்திரங்களை பிராமணரின் பெண் உடைகின்றாள் அந்த இடத்தில அந்த பாத்திரத்தின் இயல்புத்தன்மை நமக்கிடையே நிறைய பேசுகின்றது. அந்த பெண் பாத்திரங்களை உடைப்பதை கண்டுவிட்ட சிறுவன் முகத்தில் வெளிப்படுத்தும் உணர்வுகள் அற்புதம், தான் தொட்டத்தை உடைத்தாலும் அவர்களை முழுமையா நேசிக்கின்றான் சிறுவன். அதேபோல் படம் முழுவதும் பிராமணரையும்,பெண்னையும் மறுக்க முடியவில்லை.நமக்கு பிடித்த பாத்திரமாகவே இருக்கின்றார்கள்.

ஜாமால் என்ற பாத்திரத்தில் நடிக்கும் சிறுவன், பிராமணர், பெண் , விறைப்பாக வரும் எல்லைபடை வீரர்கள் அனைவரும் கச்சிதமாக நடித்துவிட்டு போயிருகின்றார்கள். ஜமால் என்று பெயர் சொல்லும்போது முஸ்லிமா என்று வினாவி அந்த பெண் வெளிப்படுத்தும் முகபாவனைகள், எல்லைபடை வீuர்கள் சோதனையிட வரும் போது சமாளிக்க வெளிப்படுத்தும் முகபாவனைகள் என்று நடிப்பில் குறைவைக்காமல் நடித்திருக்கின்றார்கள் அனைவரும். படத்தின் இசை அந்த மண்ணை பிரதிபலிக்கும் வகையில் கமகமக்கின்றது. எங்கள் தேசத்துக்கு வந்ததுக்கு வரவேகின்றோம் என்று ஒலிக்கும் குஜராத்திய பாடலை கவனித்துபாருங்கள்.



இக் குறும்படத்தை பார்பா இங்கே சொடுக்கவும்...


Comments

0 கருத்துக்கள்:

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP