யாதுமாகி நின்றான்

>> Wednesday, 21 January 2015


குறும்பட விமர்சனம்

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான எளிமையான உணர்வுகளை ஆர்பாட்டம் இல்லாமல் சொல்லும் உன்னதமான குறும்படம் யாதுமாகி நின்றான். சமீபத்தில் பார்த்த ஈழத்து தமிழ் குறும்படங்களில் சிலிர்க்க வைத்த சராசரியான படைப்பு.

தாயில்லாத மகன், மகனை வளர்க்கும் பத்திரிகை துறைசார்ந்த எழுத்தாளர் அப்பா. லேப்டாப் ஒன்றை வேண்டித் தரும்படி தட்ட முடியாத சில காரணங்களுடன் மகன் தந்தையிடம் கேக்கின்றான். ஆரம்பத்தில் அதற்கான சாதக சமிச்சைகளை தந்தை காட்டாவிட்டாலும் லேப்டாபை வேண்டிக் கொடுகின்றார், மகன் இரவிரவாக எப்போதும் லேப்டாபுடன் இருக்கின்றான். தந்தை நோட்டம் விட்டாலும் அதையும் தாண்டி லேப்டாபுடன் எப்போதும் இருக்கின்றான். காலையில் தந்தை கவனிக்கும்போது லேப்டாபில் மகன் ஃபேஸ்புக்கோடு இருப்பது புரிகின்றது. அதற்கு பிற்பாடு முக்கிய சஸ்பென்ஸ்,கிளைமாக்சோடு விறுவிறுப்பாக யாதார்த்தமாக படம் முடிகின்றது.

குறும்படம் ஆரம்பிக்கும்போது முதல் காட்சியே கவனிக்க வைகின்றது, மகன் பூக்கண்டுக்கு தண்ணீர் வார்கின்றான், தந்தை வீரகேசரியோடு கலாதியாக இருக்கின்றார் மதிலில் தேத்தனி கோப்பை, மெல்ல மெல்ல உரையாடல் இருவருக்கும் இடையில் யதார்த்தமாக செயற்கையின்றி விரிகின்றது, அசைமன்ட் செய்ய லேப்டாப் வேணும் நண்பர்கள் லேப்டாபில் இலகுவாக செய்ய தான்மட்டும் கையால் கீறி கடிணப்பட வேண்டும் என்று தன்பக்க காரணத்தை சொல்லும்போது ஒரு தந்தையின் பாத்திரம் இயல்பாக என்ன உணர்சிகளை வெளிக்காட்டி தனது கருத்துக்களை சொல்லுமோ அதேபோல் ஆச்சுபிசகாமல் அந்த தந்தை பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில படத்தின் ஆளுமையை புரிந்துகொள்ள முடிந்தது.

படம் முழுக்க வரும் உரையாடல்கள் எழுதப்பட்ட விதமும், காட்சி படிமங்களில் சொல்லப்பட்ட விதமும் சுவாரசியமாக உள்ளது, எந்த செயற்கைதனமும் இல்லை.

தந்தையாக நடித்த சத்குருவின் நடிப்பு ஆர்பாட்டம் இல்லாத அட்டகாசம், மிக கச்சிதமான பாத்திர தேர்வு, மகனோடு கதைக்கும்போது ஏற்படும் முகபாவனைகள், ஓவ்வொரு கைத்தொலைபேசி அழைப்புக்கும் கண்ணாடியை பொருத்தி கதைப்பது, இறுதியில் நண்பரோடு கைத்தொலை பேசியில் உரையாடும் போது உணர்ச்சி விளிம்புகளில் தடுமாறுதல் என்று கனகச்சிதமாக சிம்பிளாக நடித்து அசத்தியுள்ளார். மகன் ஃபேஸ்புக்கோடு இருப்பதை கண்டுவிட்டு மகனை கண்டிக்கும்போது வரும் வசங்கள் மட்டுமே கொஞ்சம் செயற்கைபோல் தோன்றுகின்றது, சத்குரு அந்த இடத்தில மட்டும் கொஞ்சம் நாடகத்தன்மையான நடிப்பை பிரதிபலித்திருந்தார், அந்த இடத்தில எழுதப்பட்ட வசனம் இன்னும் கொஞ்சம் யாதர்த்தமாக இருந்தால் சத்குருவின் நடிப்பும் யாதர்த்தமாக இருந்து இருக்கும்.

மகனாக நடித்த சர்மாவின் நடிப்பும் சத்குருவுக்கு சளைத்ததில்லை, யதார்த்தமான நடிப்பு, ஓவ்வரு வசன உச்சரிப்புகள், ஏக்கங்களை அதனுடாக வெளிப்படுதல் என்று நன்றாக நடித்துள்ளார். இடக்கை பழக்கம் ஆகட்டும் இடக்கையை உபயோகித்து எல்லா காட்சியிலும் நடிப்பதாகட்டும் ஒன்றிலும் முரணில்லை.

தந்தை லேப்டாப்பை வேண்டிக் கொடுக்கும்போது முகத்தில் காட்டும் பரவச உணர்சிகள், வேக வேகமாக லேப்டாப்பை தட்டிக்கொண்டு தந்தைக்கு பதிலளித்தல் என்று அட்டகாசமாக ஸ்கோர் செய்துள்ளார். அதிகம் லேப்டாபுடன் நேரத்தை செலவிடும்போது தந்தை படுக்க சொல்லும்போது ஒருநிமிஷம் ஒருநிமிஷம் என்று தந்தைக்கு பதில்சொல்லுதல் அனைத்தும் யதார்த்தம், இயக்குனரின் பன்முகத்தன்மை அபாரம்.

மிகவும் நுணுக்காமான இயக்கம். இயக்குனரின் உளவியல் புரிதல்கள் படத்தில் மிகப்பெரிய பிளஸ்பாயிண்டை தருகின்றது. கதாபத்திரங்களின் இயல்பை சரியாக ஸ்கிரிப்ட்டில் பின்னியுள்ளார், தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான தலைமுறை இடைவெளிகளை சாரியாக கையாண்டுள்ளார். டயரி எழுதும்போது அம்மா இருந்தால்தான் கெஞ்சலாம் என்று குறிப்பிடும் இடம் புரிதல் உள்ள இடம்.

சரியான உணர்சிகளை சரியான முறையில் சரியாக தந்துள்ளார் இயக்குனர், உணர்சிகளை பதிவுசெய்த ஒளிபதிவு, இசை ஸ்பரிசமான ஒத்தாசை, கச்சிதமான உறுத்தாத எடிட்டிங். மொத்தத்தில் படம் பிடித்து இருக்கிறது, வாழ்த்துக்கள்... சியர்ஸ்

குறும்படத்தைபார்க்க இங்கே சொடுக்கவும்...

World Builder

>> Tuesday, 20 January 2015



வழமையான சயின்ஸ் பிக்ஷன் படங்களில் ஏலியன்ஸ்கள் பூமிக்கு படையெடுப்பதும், பிரமாண்டமான கட்டிடங்களை தகர்பதாகவும் சனங்கள் பதறியடித்து ஓடுவதாகவும் சலிப்புதட்டாமல் விதம் விதமாக காட்ப்படும். சில படங்களே அதிலிருந்து விலகி விச்தியசமான புதினங்களை தருகின்றது. நிறைய சயின்ஸ் பிக்ஷன் குறும்படங்கள் வெளியாகின்றன, சிலதே மனதுக்கு ஏதோவொரு பிடித்த நெருக்கத்தை தருகின்றன. “World Builder” குறும்படம் அந்தவகையில் திருப்திபடுத்தியது. மிக எளிமையான திரைப்பட கரு.



கோமாவில் எழுந்து நடமாட முடியாமல் சுயநினைவு இல்லாமல் படுத்தபடுகையாக இருக்கும் தனது மனனைவியின் மனதில் ப்ரோக்ராம்கள் மூலம் ஊடுருவி அவளின் மனதில் ஏகப்பட்ட சிந்திரங்களை விதம் விதமாக வரைகின்றார். குறிப்பிட்ட கணத்தில் அவளை கொஞ்சம் மகிழ்ச்சிபடுத்தி சிலிர்க்க வைக்கின்றார், அவளின் சிரிப்பில் உறைகின்றார். திரைக்கதை நுணுக்கமான சொல்பட்டுல்லது, ஆரம்பத்தில் எதுவுமே சரிவர புரியாது கடைசி நிமிடங்களிலே அனைத்தும் வெளிச்சத்துக்கு வரும். தனது Visual effects திறமையை வெளிக்காட்டுவதற்கு இந்த குறும்படத்தை இயக்கியாதாக இயக்குனர் Bruce Branit குறிப்பிட்டு இருந்தார். வெறும் Visual effectsக்கு மட்டும் உரிய குறும்படமாக இதனை புறக்கணிக்க முடியாது ஆழமான விடயங்கள் தொடப்பட்டுள்ளது.

Kamera

>> Sunday, 18 January 2015


குறும்பட திறனாய்வு

                 ( Award Winning Best Indian Short Film – Cannes)

Kamera2011ஆம் ஆண்டு Nijo Jonson இனால் இயக்கப்ட்டு இந்தி மொழியில் வெளியாகி ஏராளமான விருதுகளை வென்ற குறும்படம். மிக எளிமையான கதைபிணைப்புக் கொண்ட குறும்படம்.

சேரி புத்தில் தாயுடன் தனியாக வாழும் அர்ஜுன் என்ற பன்னிரெண்டு வயது சிறுவனின் மெல்லிய கதை. சேரி புத்தில் பழைய பொருட்களை நண்பனுடன் தேடும்போது camera ஒன்று தட்டுப்படுகின்றது. அதை வைத்து என்ன செய்யலாம் என்று நண்பனிடம் கேட்கும் போது cameraவை யாரை நோக்கி புகைப்படம் எடுக்கும் நோக்குடன் சுட்டுகின்றாயோ அவர்கள் முகத்தில் புன்னகை அரும்பும் என்று சொல்கின்றான். அதை பரீசிலித்து பார்க்கும் அர்ஜுன் அவை உண்மையென்று கண்டுகொண்டு இதை வைத்து மக்களிடையே புன்னகையை உற்பத்தி செய்ய கிளம்புகின்றான். வீட்டில் அவனின் அம்மா பழைய பொருட்களை விற்க்கும் போது cameraவையும் விற்றுவிடுகின்றாள். அதற்கு பிற்பாடு எப்படி அவன் மக்களிடையே புன்னகையை உருவாகின்றான் என்பதோடு படம் முடிகின்றது.



 ஸ்பரிசமான கதையை எடுத்து மிகச்சிதமாக நெறிப்படுத்தியுள்ளார் இயக்குனர்.அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தின் இயல்புகள் அதன் பின்புலங்கள் கச்சிதமாக காட்சிகளாக படிமப்படுத்தப்பட்டுள்ளது. அம்மாவுக்கு தெரியாமல் ஒழித்து எலி வளர்கின்றான். ரோட்டோர பையன்களுடன் சேர்ந்து டிராபிக்கில் நிற்கும் வாகங்களுக்கிடையே வித்தைகாட்டி வாகங்களுக்கு உள்ளே இருபவர்களிடையே புன்னகையை உருவாக்குகின்றான். உருவாக்கிய புன்னகையில் திருப்தி காண்கின்றான். இவை திரைகதையில் அட்டகாசமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜுனின் தாயின் கதாபாத்திரம் விரக்தி நிலையில் உள்ள கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது, இறுதியில்அவன் தன் தாயிடம் இருந்து புன்னகை ஒன்றை பெற்றுக்கொள்கின்றான். எந்த முசடான அழுத்தத்துடன் கஷ்டத்துடன் சேரிபுறத்தில் வாழும் கதாபாத்திரமாக இருந்தாலும் cameraவை சுட்டிநோக்கி புகைப்படம் எடுக்கும்போது புன்னகைகின்றார்கள்,சிறிய மகிழ்ச்சியை வடிவமைக்கின்றார்கள் அதுதான் படத்தின் மையக்கரு. அட்டகாசமான பாத்திர அமைப்புகள்.
 
திரைக்கதையையின் நுணுக்கங்கள் சிலிர்க்கவைக்கின்றன. இந்தியர்களுடன் பாடல்கள் மிகநெருக்கமானது. பழைய பொருட்களை வேண்ட வரும் கதாபாத்திரம் பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டு வருகின்றது. அதேபோல் குளித்துவிட்டு குளியல்அறையில் இருந்து வரும் அர்ஜுன் பாடல் ஒன்றை மெலிதாக பாடியவாறு வருவான். இப்படி நுணுக்கமா விடயங்கள் திரைக்கதையில் இருக்கின்றன. சிறுவர்களுக்கிடையேயான பண்புகள் எப்படி இருக்கவேண்டுமோ அதையும் சொல்ல தவறவில்லை. அங்கே பாரேன்று சொல்லிவிட்டு கண்ணில் தேசிக்காய் புளியை விடுவதாட்டும், நண்பர்கள் விடைபெறும்போது தாக்கிவிட்டு ஓடுவதாகட்டும் என்று சிறுவர்களுக்கான இயல்பானதன்மைகளை படிமப்படுத்தவும் தவறவில்லை.
ஒளிப்பதிவு இயல்பாக அட்டகாசமாக இருக்கிறது. சில இடங்களில் cameraவின் பார்வையில் காட்சிகள் நகர்த்தபடுகின்றது அப்போது cameraவின் பார்வையில் எப்படி காட்சிகள் இருக்குமோ அப்டியே யாதார்த விரோதமின்றி ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது, மெல்லிய கைநடுக்கங்கள் எல்லாம் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. பின்னி இசை அமர்களம் அதிகம் ஒலிக்காமல் குறிப்பிட்ட காட்சிகள் மட்டும் ஒலித்து அட்டகாசம் செய்கின்றது. இறுதிக் காட்சியில் வரும் பின்னனியிசைய கவனியுங்கள்.




Call Back

 குறும்பட திறனாய்வு





டிரக்(drug) பாவனை மூலம் டைம் டிரவலில் கடந்தகாலத்தை நோக்கிசெல்லும் கதையை மையாமாக கொண்ட திரில்லர் குறும்படம் Call back. ராணி நமானி மற்றும் காரோல்.எப்.பீடரோல்ஸ் இருவராலும் எழுதி இயக்கப்பட்ட குறும்படம். இவ் குறும்படத்தை நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்றால் சிறந்த திரைக்கதையை அமைக்கும் திறனை நெருகிங்கி விட்டீர்கள் என்று அர்த்தமில்லை ஆனால் மேம்பட்டு விட்டீர்கள் என்று அர்த்தம். மிகவும் நுணுக்கமான குறும்படம். படம் ஆரம்பித்து இருபத்தியைந்தாவது செக்கண்ட் ஷாட்களில் படத்தின் தீவீரத்தன்மையை புரிந்துகொள்ள முடியும். மனைவியை அவளுடைய கள்ளக்காதலனோடு படுக்கையறையில் கண்டுவிட்ட கணவர் இருவரையும் சுட்டுத்தள்ளிவிட்டார். இரதம்தேய்ந்த கைகளுடம் செவ்வதறியாது உறைந்து நிக்கும்போது ஒரு தொலைபேசி அழைப்பு வருகின்றது போலிஸ் மூன்றுநிமிடத்தில் வந்துவிடுவார்கள் என்பதை தெரிவிக்கின்றது அத்துடன் ஒரு டிரக் ஊசியை போட சொல்லி வற்புறுத்துகின்றது அந்த அழைப்பு. அது அவர்களை கொலைசெய்ய முன்னுள்ள காலத்துக்கு அவரை அழைத்துச் செல்கின்றது. அதற்கு பிற்பாடுதான் கதையில் ட்விஸ்ட். அது என்னவேன்று நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். சாதாரணமாக நமது வாழ்வில் நாம் கடந்துவந்த பாதையில் நாம் சந்தித்த வருந்தத்தக்க, துரதிர்ஷ்டவசமான சம்பவங்களை மறக்க விரும்புவோம் அந்த நம்பிக்கையில் ஒரு சந்தர்பம் வழங்கப்பட்டால்??? அதுதான் கதைச்சுருக்கம். படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயின்ட் காட்சியமைப்பு மற்றும் பாத்திரதேர்வுகள். 



ஒளிப்பதிவு,பின்னி இசை அட்டகாசம். தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளும் கேவின் அன்ருசின் குரல் மிககச்சிதமானதும் வசீகரிக்கு விம்பத்தையும் கட்டமைகின்றது. ஒளிப்பதிவுகள் மிகநேர்த்தி. கணவராக நடித்தவரின் நடிப்பு நேர்தி. ஹோட்டல் கதவுக்கு கடந்தகாலத்தில் மறுபடியும் துப்பாக்கியோடு வந்துவிட்டு மனைவியை பார்பார் ஒரு பார்வை அதன் பின் கள்ளக்காதலனை ஒரு பார்வை பார்பார் மிக்கச்சிதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் பார்வையது. அதே நேநரத்தில் மனைவயின் முகபாவனைகளை கவனயுங்கள் அட்டகாசம், மிகசிறந்த திரைப்பட மொழிபேசுமிடம் அது. மிகசிறந்த நடிப்பாற்ளை முகபாவனைகளின் மெல்லிய அங்க அசைவுகள் மூலம் கனகச்சிதமாக காட்சிக்கு காட்சி அசத்தப்பட்டுள்ளது. ஹோட்டல்ரூம், கார்பார்க்கின் எல்லாம் திறம்பட யாதர்த்தமாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. படத்தின் கதையில் லாஜிக்ளாக நிறைய கேள்விகள் கேட்ட தோன்றுகின்றது. ஆனால் அதற்கான பதில்கள் நிச்சயம் இல்லை. குறும்பட இலக்கணத்தில் அவை வேண்டப்படாத கேள்விகள்.சில படைப்புக்களை ரசித்துவிட்டு அது கொடுக்கும் உந்துதல்களை மீண்டும் மீண்டும் நமக்குள் அசைபோட வேண்டும் அப்போதுதான் அந்த முழுமை வெளிச்சம் நமக்குள் சுடர்விடும்.
 இந்த குறும்படத்தை எடுத்து முடிக்க ஐந்து நாற்களே செலவழித்து உள்ளார்கள். ஆறுமாசம் போஸ்ட்புரோடக்ஷனுக்கு மினக்கட்டுள்ளார்கள். இரு இயக்குனர்களும் பெரும்பாலும் மின்னஞ்சல் மூலமே தமது கருத்துகளை பரிமாறி டிஸ்கஷனை ஆரோக்கியமாக கொன்றுசென்றுள்ளனர். ஏழு நிமிடகளுகுள் உள்ளான இவ்குறும்படத்தை ஹாலிவூட் நேர்த்திக்கு மிகக்குறுகிய budgetடில் உருவாகியுள்ளார்கள். அட்டகாசம்...

Business

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP