Lego Batman - அனிமேஷன்

>> Friday 6 March 2015


பேட்மேன் கார்ட்டூன் ரசிகர்கள் தவறவிடக்கூடாத அனிமேஷன் திரைப்படம் Lego Batman. Lego series பார்பவர்களுக்கு அதன் சுவாரசியங்களும் நையாண்டிகளும் நன்றாக தெரிந்திருக்கும். அந்த lego வரிசையில் வந்த எல்லா அனிமேஷன்களும் ரசிக்ககூடியவை.

சிறுவயதில் “பில்டிங் ப்ளாக்ஸ்” விளையாடும்போது ஏற்பட்ட அதே கிளிர்பூட்டும் அந்த வினோத சுவாரசிய உன்னத அனுபவத்தை மறுபடியும் Leog சீரிஸில் பார்க்கும்போது பெற்றுகொள்ள முடிந்தது. அதே டெம்பிளட் அதே வடிவமைப்புடன் அதே அட்மொஸ்பியர் தரும் கதாபாத்திரங்களின் உச்சகட்ட வடிவமைபுக்கள். எல்லாமே மிகக்கச்சிதம்.

2013 ஆம் ஆண்டு வந்த lego movie சீரிஸின் வெளியீடு “Lego Batman”. நிறைய எச்கச்சக்கமான நமக்கு பரிச்சியமான DC super heros பேட்மேனுடன் வருகின்றார்கள். அது மட்டுமல்ல வழமையாக நமக்கு தெரிந்த னைத்து வில்லன்களும் வருகின்றார்கள். இது முழுக்க முழுக்க பேட்மேனை மையமாக கொண்டு நகரும் கதை அப்படினா கண்டிப்பா ஜோக்கர் இருப்பான்னு நீங்கள் ஊகிக்கும் ஊகம் சரி. ஆமா ஜோக்கர்தான் மெயின் வில்லன். சூப்பர்மேன் கூட அடிக்கடி வந்துபோகின்றார். அவருடைய முக்கிய வில்லன் லெக்ஸ் லுதரும் அட்டகாசமாக வருகின்றார். இந்த தடவை ஜோக்கரும் லெக்ஸ் லுதரும் இணைகின்றனர்.


பேட்மேன் ராபினுடன் வருகின்றார். ப்ரூஸ் வேயின்க்கும் லெக்ஸ் லுதருக்கும் Man of the Year award விருது பரிந்துரைகப்படுகின்றது. லெக்ஸ் தனக்குதான் கிடைக்கபோகுது என்று குஜாலாக இருக்க நாம எதிர்பாத்தபடி ப்ருஸ்க்கு விருது கிடைகின்றது. லெக்ஸ் கடுப்படைகின்றான். அந்த நேரத்தில் ஜோக்கர் விருதுவழங்கும் அரங்குக்கு அட்டகாசமாக தனக்குரிய ஸ்டைலில் அறிமுகமாகின்றான். ஜோக்கரோடு நமக்கு பரிச்சியமான Riddler, Harley Quinn, Penguin, Two-Face,Poison Ivy, Bane, Catwoman வில்லன்களும் வருகின்றார்கள். வழமையான பட்மேன் கார்டூன்களை பார்பவர்களுக்கு இவர்களுடைய தனிப்பட்ட குணாதிசயங்கள் பற்றி நன்கு தெரிந்திருக்கும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அட்டகாசமாக அறிமுகமாகிய ஜோக்கர்குழாம் விருதையும் இருகின்ற பணத்தையும் ஜிம்ஸ்சையும் கொள்ளையடித்துகொண்டு ஓடுகின்றார்கள். ப்ரூஸ் உடனே பட்மேன் அவதாரம் எடுத்து தனது வேட்டையை ஆரம்பிக்கின்றான். பேட்மேனின் அக்ன் சரவெடிகள் பறக்கின்றன.ஜோக்கரைத்தவிர அனைத்து வில்லன்களையும் பந்தாடி பிடித்துவிடுகின்றான். ஜோக்கர் எந்திர படகில் எஸ்கேப்பாகி விடுகின்றான். ராபின் ஹெலிகாப்டரில் வந்து பட்மேன்க்கு உதவி செய்கின்றான். ஜோக்கர் மட்டும் மிஸ்ஸிங். மற்றவர்களை ஜெயிலில் போட்டாகிவிட்டது.


லெக்ஸ் இந்தமுறை அமெரிக்க ஜனாதிபதிதேர்தலில் போட்டியிடுகின்றான். ஆனால் மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைய. என்ன செய்து மக்களின் செல்வாக்கை காட்டியெலுப்பலாமென்று ஜோசிக்க ஒரு ஐடியா கிடைகின்றது. அது ஜோக்கரின் உதவி, ஜோக்கரின் வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரியும் ஜோக்கர் அடிப்படையில் ஒரு இரசாயனவியலாளன். ஒரு கெமிக்கல் தொழிற்சாலையில் வேலைபார்த்து கடும்வறுமையில் மனைவியின் பிரசவநேரத்தில் பணமில்லாமல் கஷ்டபட்டு கொண்டிருக்கும்போது அந்த கெமிக்கல் கம்பனியை கொள்ளையிட ஒரு கூட்டம் இவனை நாட, பணத்துக்காக வேறுவழியின்றி அவர்களுடன் இணைந்து அவர்களுக்கு வழிகாட்டசென்று தவறி ஒரு கெமிக்கல் டாங்கில் விழுந்து மனம்பிறழ்ந்து அந்த நேரத்தில் மனைவி ஷாக் அடிச்சி இறக்க அனைத்து அழுத்தங்களினாலும் இப்படி கொடூர சைக்கோ வில்லனானான். ஜோக்கரினால் விதம்விதமான் இரசாயன வாயுக்களை தயாரிக்க முடியும். அந்த வாயுக்களைகொண்டு மக்களின் மனதை மாற்றலாம். அதுமட்டுமல்லாமல் தனக்கு தலையிடிகளை தரும் பேட்மேன், சூப்பர்மேனையும் அழிக்க நினைக்கின்றான். சூப்பர்மேனை அழிக்க கிரிப்டன் தேவை. அதனை தயாரிக்க ஜோக்கரினால் மட்டுமே முடியும். எனவே ஜெயிலுக்குசென்று ஜோக்கரை மீட்கின்றான். ஜோக்கர் தனது கூட்டாளிகளை விடுவித்துவிட்டு லெக்ஸ்சுடன் ஹெலிகாப்டரில் தப்பிக்கின்றான்.


ஜோகர்ரும் லெஸ்சும் இணைந்து கிரிப்டனையும் இரகசியவாயுக்களையும் தயாரிக்;கின்றார்கள். மறுபடியும் பேட்மேன்னும், ராபினும் ஜோக்கரை தேடி ஜோக்கரின் இடமான அர்ஹகம் போகின்றார்கள். திரும்பவும் மோதல்கள் வருகின்றன. அனைத்து வில்லன்களும் வாகனங்களில் தப்பிக்கின்றார்கள். மறுபடியும் ஜோக்கரை தவிர அனைவரையும் பிடிகின்றார்கள். திரும்பவும் ஜெயிலில் போட்டாகிவிட்டது. ஜோக்கர் அங்கு இல்லை இவர்களை திசைதிருப்பிவிட்டு ஜோக்கர் கிரேட்எஸ்கேப். அங்கிருக்கும் தடயங்ககளை வைத்துப்பார்க்கும்போது லெக்ஸ் ஜோக்கரோடு இருப்பது புலனாகின்றது. ஜோக்கர் ஜெயிலில் இருந்து தப்பிக்க லெக்ஸ்தான் உதவி செய்தது பேட்மேனுக்கு தெரியவருகின்றது.

ஓடும் வாகனத்தில் ஜோக்கரும் லெக்ஸ்சும் கிரிப்டனை தயாரிக்கின்றார்கள். பேட்மேன் மோம்பம் பிடித்து அங்கேயும் வருகின்றான். அங்கேயும் மோதல் பறக்கின்றது. கிரிப்டனை பேட்மேன் கவர்ந்து வந்துவிடுகின்றார். தனது இடத்தில் பத்திரமாக பத்திரமாக வைக்கின்றார். அங்கே எக்கசக்கமான கிரிப்டனை பேட்மேன் பத்திரமாக வைத்திருப்பதை பார்த்துவிட்டு ராபின் “ஏன் இத்தனை கிரிப்டன் இங்கே ஒளித்துவைதிகின்றீர்கள்” என்று கேக்கின்றான், சில சமயம் சூப்பர்மேன் கெட்ட மனிதனாக மாறிவிட்டால் இதனை உபயோகித்து அழிக்காதான் என்று சொல்கின்றான் பேட்மேன். பேட்மேன் இடத்திற்கே ஜோக்கரும் லெக்ஸ்சும் வந்து ஜெர்கொடுத்து நேரடியாக மோதுகின்றனர். பட்மேனின் இடத்தை சர்வநாசம் செய்துவிட்டு இருகின்ற அனைத்து கிரிப்டனகளையும் அளிக்கொண்டு ஜாலியாக போகின்றார்கள். செம அடிவேண்டிய பேட்மேன், ராபினுக்கு சூப்பர்மேன் வந்து கொஞ்சம் உதவிசெய்கின்றார். பேட்மேனுக்கு சூப்பர்மேனை பிடித்தாலும் அவரிடம் உதவிகளை கேற்பது பிடிக்காது. அவரின் ஈகோ விடாது ஒருவகையில் சூப்பர்மேன் மீது பொறாமையும் கூட. இதனை நச்சுவையாக வெளிப்படுத்தியிருந்தது இந்த அனிமேஷன் சீரிஸில்.

இப்படியாக சூடுபிடிக்கும் கதையில் அடுத்துவரும் திருப்பங்கள் செமையாக கொண்டுசெல்கின்றன. அப்புறம் என்னாச்சு என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்க. கடைசி கிளைமாக்ஸ் சண்டையில் ஜோக்கரின்  அட்டகாசத்தை சமாளிக்க Justice League டீமையே கூப்பிட வேண்டியதாகின்றது. ப்ளாஷ், கிரீன்-லன்டர், வோண்டர்வுமன் வருகின்றார்கள் கடைசி நேரதில். ஆனால் இது முழுக்க முழுக்க பேட்மேன் களம்.

வழமையாக பேட்மேன் கார்டூன்களில் வரும் அழுத்தமான பின்னி Lego Batman சீரிஸில் இல்லை. இதில் நகைச்சுவைதன்மை அதிகமாக இருக்கும். முற்றிலும் வித்தியாசமான ஜாலியான பேட்மேனை பார்கலாம். பேட்மேனை பற்றி தெரிந்தவர்களுக்குதான் இந்த அனிமேஷன் புரியும் என்று இல்லை, அனைவரும் பார்கலாம். ஆரம்பத்தில் Lego Batman சீரிஸ் Video game ஆகா வெளிவந்து சக்கை போடு போட்டது, பிற்பாடு அமிமேஷன் கார்ட்டூனாக வந்துள்ளது.  இந்த அனிமேஷன் படத்தை Jon Burton இயக்கியிருந்தார். ப்ளூரே டிஸ்க்கில் மாத்திரமே வெளியிடப்பட்டது. உங்களுடைய வீட்டில் கார்ட்டூன் பிரியர்கள், குட்டிஸ் இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு இந்த Lego Batman பிடிக்கும். கண்டிப்பாக பாருங்க.


                                டிரைலர்




Comments

0 கருத்துக்கள்:

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP