பாரதப் பிரதமரின் சுவாரசிய யாழ்ப்பாண பயணம்

>> Sunday 15 March 2015

பொதுவாக சிங்களவர்களுக்கு இந்தியர்களை கண்டாலே ஆகாது. கரப்பான்பூச்சியை கண்டதுபோல் முகம் சுளிப்பார்கள். அதுவும் இந்திய கிரிக்கெட் அணியை கண்டாலே அவர்கள் முகம் சிவந்து ஜிவ்வென்று எகிறும். தமிழ் நாட்டு பிளேயர்களை கண்டால் ஒருபடிமேல போய் இனவாதங்கள் வாயிலிருந்து சீரும். சிங்களவர்கள் மத்தியில் படிப்பதால் இந்தமாதி சமாச்சாரங்களை அதிகம் காணவேண்டிய நிர்பந்தம். இதனாலே சிங்கள நண்பர்களுடன் கிரிக்கெட் பார்ப்பதை தவிர்பேன். இந்தனை காழ்ப்புணர்வு இந்தியாமேல் இருந்தாலும் போலிவூட் சினிமாவை மட்டும் இரகசியமாக பார்ப்பார்கள். அதிலும் சிங்களப் பெண்களுக்கு ஷாருக்கான்மீது மட்டட்ட வினோதக் காதால். நிற்க இப்போ ஏன் இது எல்லாம்?.. சரி விஷயத்துக்கு வருவோம்.

இந்தியப் பிரதமர் மோடியின் விஜயம் இந்தியாவுக்கு மகிழ்ச்சிதரும் வகையில் சிக்கலின்றி நடந்து முடிந்தது. 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி மேற்கொண்ட இலங்கை பயணத்தின் போதுதான் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது தயாரிக்கப்பட்ட விடயங்களைத் தான் இந்திய இலங்கை ஒப்பந்தமாக ராஜீவ்,ஜே.ஆர் 1987இல் கைச்சாத்திட்டனர். தமிழர்கள் ஒருமனதாக இந்திய இலங்கை சமாதான ஒப்பந்த்தை ஏற்றுக்கொண்டாலும் சிங்கள பெளத்த இனவாதிகளுக்கு எரிச்சலை ரொம்பவே கொடுத்தது. இலங்கை உள்விடயங்களில் தலையிட்டது கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதன் வெளிப்பாடாக ஒப்பந்தம் கைசாதிட்டுவிட்டு ராஜீவ்காந்தி திரும்பும் வேளையில் அணிவகுப்பு மரியாதையின்போது இலங்கை கடற்டை சிப்பாயால் பிரடியில் துப்பாக்கியால் தாக்பட்டார். இதனால் 28 வருடங்கள் புறகணிக்கப்பட்ட அரசுமுறை பயணத்தை மோடி மீள் உயிர்கொடுத்தார்.

பெரும் இடைவெளிகளிகயான 28 வருடங்கள் பின் தற்போதைய பிரதமர் மோடி இலங்கைக்கு இயல்பாக வந்தடைந்தார். தென் இலங்கையில் பலநிகழ்வுகள் சந்திப்புகளையும் மன்னார் ரயில் சேவையையும் ஆரம்பித்து வையத்துக்கொண்டு நேற்று முதல் தடவையாக யாழ்பாணம் வந்தடைந்தார். இந்தியப் பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணம் முதல் தடவையாக வந்தடைந்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ததாக அமைத்தது. யாழ்ப்பாணத்தை சேர்த்தவன் என்ற முறையில் எனக்கு இன்னும் சுவாரசியமாக கவனிக்க வைத்தது. 

மோடியின் வருகையை அடுத்து யாழ் வீதிகள் இரவோடு இரவாக சுத்தமாக கழுவப்பட்டன, யாழ் மாநாகர சபையின் தீயணைப்பு வண்டிகள் இந்த வேலையபார்த்தது. நான்கு இந்திய ஹெலிகாப்டர்கள் ஊடக யாழ்.மத்திய கல்லூரி விளையாட்டு திடலில் தரையிறங்கி அதன் அருகிலுள்ள யாழ் நூலகத்துக்கு 1.30 அளவில் காரில் சென்றடைந்தார். இந்திய பாதுகாப்பு படையினர் இந்தமுறை இலங்கை படையினரை நம்பாமல் தாங்களே அதிக அக்கறையுடன் பிரதமரை சுற்றிச் சுற்றி வந்தனர். நூலக வாயிலில் தமிழர்களின் பாரம்பரிய முறையில் வரவேற்க வைக்கப்பட்டிருந்த மாலைகள், சந்தனம் மற்றும் அணைத்து இதர பொருட்களும் இந்திய பாதுகாப்பு படையினரால் சல்லடையிடப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அதிலும் மாலையில் உள்ள பூக்களின் இதழ்கள் ஒவ்வென்றாக நுணுக்கமாக பிரித்துப் பார்கப்பட்டது. சந்தனப்பொட்டு மோடியின் நெற்றியில் வைக்கப்பட முதலில் அனுமதிக்கப்படவில்லை. இரசாயன நச்சுப்பொருட்கள் கலக்கப்பட்டு இருக்கலாமே என்ற சந்தேகம் ஹொலிவூட் பாணியில் அவர்களுக்கு வலுத்தது. அதன் முக்கியத்துவம் வலியுருத்தப்பட கடைசியில் ஒருமனதாக இந்திய படையினர்களால் அனுமதிக்கப்பட்டது.

செய்தி சேகரிப்புக்காக வந்திருந்த பெரும் எண்ணிக்கையான ஊகடவியலாளார்கள், புகைப்பட நிருபர்கள் நூலகத்திற்கு செல்ல அனுமதிக்படவில்லை. நூலக பணியாளர்கள் மற்றும் சில அதிகாரிகள் மட்டுமே மோடியின் உரையினை செவிமடுக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். “இந்தியப் பிரதமராக நான் இருப்பதுடன் யாழ்ப்பாணத்திற்கு முதல் தடவையாக வந்ததையடுத்து நான் மிகவும் மகிழ்கின்றேன், இலங்கைக்கு நான் வருகைதந்ததுக்கு காரணம் யாழ்ப்பாணம் வருகை தருவதற்கே, யாழ்ப்பாணம் தனித்துவமானதும் புதிய ஸ்பரிசங்களை தரக்கூடியது. இந்த நிகழ்வு எனக்கு புதிய திருப்தியையும் சகோதரத் தன்மையையும் தந்துள்ளது” என்று யாழ்.நூலக கலாசார நிலையத்துக்கு அடிக்கல் நாடும்போது தெரிவித்தார். உரையாற்றும்போது இருகையை கூப்பி தமிழில் வணக்கம் சொன்னது பார்வையாளர்களை ரொம்பவே கவர்ந்தது
.
யாழ்ப்பாணத்தின் இறுதி நிகழ்வாக இளவாலையில் அமைத்துள்ள இந்திய வீட்டு திட்டத்தில் மோடி கலந்துகொண்டார். வீதி கரையோரங்களில் வாழை மரங்கள், தோரணங்கள் மிக விமர்சையாக கட்டப்பட்டு சுவாரசியமான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. இந்திய கொடிகளை தமிழர்கள் கையில் பிடித்து மோடிக்கு உச்சாகமாக அசைத்து இன்ப வரவேற்பு கொடுத்தனர். இறுதியாக இந்தியமக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட வீடுகளை பாதிக்கப்பட்ட மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போது மிக உருக்கமாக தனது உரையை ஆரம்பித்தார். இந்த நிகழ்வு எனக்கு கண்ணீரை வரவழைக்கும் நிகழ்வாக உள்ளது.. யாழ்ப்பாண மக்களுடைய வாழ்க்கை பாதுகாப்பானதாகவும் சுகம் நிறைந்தாகவும் அமைய வாழ்த்துக்கள் கூறுவதாக தெரிவித்தார். இந்திய நிதியில் முழுமையாக நாலாயிரம் வீடுகள் ஊவாவில் அமைக்கப்படவுள்ளன. இளவாலையில் 361 வீடுகள் அமைக்கப்படவுள்ளன, இதில் 12 வீடுகளுக்கு மட்டுமே மோடி உறுதிபத்திரத்தை வழங்கினார்.

கீரிமலையில் உள்ள வரலாற்று புகழ்மிக்க நகுலேஸ்வரன் ஆலயத்துக்கு சென்று மிகபயபக்தியுடன் வழிபாட்டில் ஈடுபட்டார் மோடி. வழமையாக யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயத்துக்கு மேலாடையுடன் யாரும் நுழைய முடியாது(ஆனானப்பட்ட மஹிந்தரே மேலாடை இன்றியே இதுக்களின் ஆலயங்கள் வருவார்). இந்து சமய கலாச்சாரங்களை கடுமையாக ஆரோக்கியமாக பின்பற்றும் யாழில் இந்திய பிரதமரும் அவர்களின் பாதுகாப்பு படையினரும் மேலாடைகளுடன் அனுமதிக்கப்பட்டனர்.

இலங்கை இராணுவத்தை மோடியருகிலே இந்திய இராணுவம் அனுமதிக்கவில்லை முழுமையாக இந்திய இராணுவமே செயல்பட்டது. இலங்கை இராணுவத்தினர் மௌனமாக கையைகட்டிகொண்டு தள்ளி நிற்றனர் அல்லது நிற்க வைக்கப்பட்டனர். வெளிப்படையாக தெரியும் வகையில் எந்த பாதுகாப்பு ஆயுதங்களையும் அர்ஜுன் படங்களில் காட்டுவதுபோல் இந்திய பாதுகாப்பு பிரிவினர் வைத்திருக்கவில்லை.

மோடியின் உரைகள் அனைத்தும் இந்திமொழியிலே இடம்பெற்றது. அவை தமிழில் மொழிபெயர்கப்பட்டது. ஆங்கில மொழி தெரிந்திருந்தாலும் உரையாடல்களில் ஆங்கிலத்தை உபயோகிக்கவில்லை. இந்திய இறையான்மைகளை மோடி விட்டும் கொடுக்கவில்லை. மிக இயல்பாக மோடிகலந்து கொண்ட நிகழ்வுகள் யாழ்மக்களை இயல்பாக கவர்ந்தது.





Comments

3 கருத்துக்கள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) 5 April 2015 at 05:01  

//சிங்களப் பெண்களுக்கு ஷாருக்கான்மீது மட்டட்ட வினோதக் காதால்//(மட்டற்ற , காதல்)
அப்படியா? என் மருமகமொருவன் சாருக்கானை- திருநங்கை போல் என்பான். அதனாலா?(பொதுவாக திருநங்கைகளுடன் பெண்கள் இயல்பாகப் பழகுவார்கள்)
கவனித்திருப்பீர்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) 5 April 2015 at 05:04  

என் அறிவுக்கெட்டியவரை யாழுக்கு பிரதமர்களை வர விடுவதேயில்லை.
இங்கிலாந்து, இந்தியப் பிரதமர்கள் அந்த விதிகளை உடைத்தவர்கள்.
அந்த வகையில் இந்நிகழ்வுகள் அதன் விளைவுகளை ஆயாமல் எனக்கு மகிழ்வளித்தவை.

Annogen 5 April 2015 at 17:13  

//யோகன் பாரிஸ்// ஹிஹி.. பெண்தன்மை வாய்ந்த ஆண்களை அநேகமான பெண்களுக்கு பிடிக்கும் என்பது உண்மைதான். யஸ்டின் பீபர் பல பெண்களுக்கு பிடிப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.

ஆமாம்.... அந்நிய நாட்டுத் தலைவர்கள் எமது பிரதேசங்களுக்கு வருகைதந்தது மகிழ்ச்சிதான்.

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP