பாக்குநீரிணையில் இந்திய மீனவர்கள் சுடப்படுவது ஏன்?

>> Tuesday 17 March 2015


வடக்கில் ஈழத்துக்கான போர் வலிமையடைந்தபோது வடக்குக் கடல் பிராயந்தியங்கள் அபாயகரமாக மாறியது. ஏறத்தால முப்பது வீதமான வடக்கு மக்கள் மீன்பிடி தொழிலை மேற்கொண்டிருந்தனர். கடலில் செல்லத் தடை விதிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரங்கள் அடியோடு சாய்க்கப்பட்டது. பாரம்பரியமாக செய்துவந்த மீன்பிடித்துக்தொழிலை விடுத்து வேறுதொழிலுக்கும் வறுமைக்கும் தள்ளப்பட்டனர். கிட்டதட்ட இருவது வருடங்குளுக்கு மேலாக கடலில் மீன்பிடிக்க மறுக்கப்பட்டனர். 1990 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இத்தடை 1995ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தை காலங்கலிலும் 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் அப்போதைய ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட மோதல் தவிர்ப்பு ஒப்பந்த காலத்தின் தொடர்ச்சியாக 2006 வரையான காலப்பகுதியிலும் வடக்கு மீனவர்கள் பகுதியளவான ஆழ்கடல் மீன்பிடிக்கு அரசாங்கத்தினால் கடும்கொடுபிடிகளுடன் அனுமதிக்கப்பட்டனர். 2009ஆம் ஆண்டு இறுதி மோதல்கள் முடிவுக்கு வந்தபின்னர் முழுத்தடையும் நீக்கப்பட்டது. வடக்கு மீனவர்கள் சுதந்திரமாக பழையபடி மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டனர்.

பாக்குநீரிணை பகுதியான வடபகுதி கடலில் ஏராளமான செழிப்பான மீன்கள் கொத்துக்கொத்தாக கிடைக்கும். வடக்கு மீனவர்கள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியிலும் தென்பகுதி மீனவர்கள் அரசாங்கத்தின் அனுமதியுடன் பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பில் வடபகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படிருன்தனர். ஆனால் வடபகுதி மீனவர்கள் எந்த சலுகையுடனும் அவர்களின் சொந்தப் பகுதிகளில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்தக் காலப்பகுதியில் இந்திய மீனவர்களும் இலங்கை வடக்கு கடல் எல்லைகளில் ஊடுருவி அத்துமீறி மீன்பிடித்தனர். சில சமயம் அல்ல பலசமயம் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் அச்சுறுத்தப்பட்டனர், சேதப்படுத்தப் பட்டனர்,கைது செய்படனர், சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மோதல்கள் முடிந்து பரவசத்துடன் மீன்பிடிக்கவந்த பாரம்பரிய வடபகுதி மக்கள் தென் இலங்கை மீனவர்களின் தலையிடுகளினாலும் இந்திய மீனவர்களின் அத்து மீறல்களினாலும் அவதிப்பட்டனர். எக்கச்சக்க வலிகளை இழப்புகளைத் தாண்டி இறுதியில் மீன்பிடிக்க வரும்போது முகம்கொடுக்கும் பிரச்சனைகள் வடபகுதி மீனவர்களை ரொம்பவே எரிச்சல் படுத்தின. ஈழப்போர் ஆரம்பிக்கபட முன்பும் ஆரம்ப காலங்களிலும் இதே முரண்பாடுகளை இந்தியர்கலோடு வடபகுதி மீனவர்கள் கொண்டிருந்தனர். அவர்களுக்கிடையே தனிப்பட்ட உறவுமுறைகள் இருந்தபோதும் பொருளாதாரம் என்று வரும்போது இருவரும் முட்டிமோதிகொண்டனர். இன்றுவரை அதன் தாக்கங்கள் முரண்பாடுகள் தொடர்கின்றன.

வடபகுதியில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் மீனர்கள் தங்களுடைய கடற்பரப்பை ஆழமாக நேசித்தனர். தமக்குதானே பல கடப்பாடுகளை இட்டுக்கொண்டனர். பாரிய மடிகளைப் பயன்படுத்தி தொழில் செய்யும் ஆழ்கடல் இழுவைப்படகு முறை, இலை குழைகளைப் பயன்படுத்தி ஆழம் குறைந்த கடற்பரப்பில் கணவாய், இறால்களைப் பிடிக்கும் முறை, தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் முறை உள்ளிட்ட பல முறையற்ற மீன்பிடி முறைகளை தடை செய்திருக்கின்றார்கள். இந்த முறைகளினால் அதிகளவான மீன்களை மட்டட்டு பிடிக்க முடியும். ஆனால், அந்த முறைகள், கடற்பாறைகள், கடற்பாசிகள், பிளாந்தன்கள் உள்ளிட்ட மீன் விருத்திக்கு அவசியமான வளங்களை கொடூரமாக சிதைத்துவிடும். இவாறான முறைகளை கண்டிப்புடன் தடைசெய்து சாதரண முறையில் வடபகுதி மீனவர்கள் மீன்படித்து வந்தனர் வருகின்றனர். 

அத்துமீறும் இந்திய மீனவர்கள் இதற்கு நேர்மாறாக பாரிய இயந்திர படகுகளில் ரோலர்கள் மூலம் மீன்பிடிக்கின்றனர். இதனை எந்த வைகையிலும் ஏற்றுகொள்ள முடியாது என்பதில் இலங்கை அரசாங்கமும் வடபகுதி மீனவர்களும் உறுதியாக இருகின்றார்கள். பலதடவை இலங்கை கடற்படையினாறால் தாக்குதலுக்கு உள்ளான இந்திய மீனவர்கள் மீண்டும் மீண்டும் இலங்கை எல்லைக்குள் ஊடுருவுகின்றனர். வடபகு மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துக்கு முறையிட்டுக் கொண்டிருகின்றனர். இலங்கை கடற்படை அத்து மீறும் இந்தியர்களை பாரபச்சம் பார்காமல் சுடத் தொடங்கி விட்டனர். இப்படி சுடப்படும் மீனவர்கள் தொடர்பாக தென் இந்தியாவில் காடப்படும் ஊடக விம்பம் விநோதமானது. தமிழர்களை கண்டால் சிங்களவனுக்கு பிடிக்காது அதனாலே சுடுகின்றனர் என்கிறனர். அப்படியே தமிழ்நாட்டு மாநில அரசு இந்திய மக்களிடையே அதன் வலிகளை வைத்து அரசியல் செய்கின்றனர்.

தமிழர்களை தொடர்ந்தும் சென்டிமென்ட்களினால் ஏமாற்ற முடியும் என்பதில் சந்தேகமேயில்லை. அதையே தமிழக அரசியல்வாதிகள் தொடர்ந்தும் பாரபச்சமின்றி செய்கின்றனர். அறிவியல் ரீதியாக இதனை, இப்பிரச்சனையை சிந்திப்பவர்கள், புரிந்து கொண்டவர்கள் தமிழகத்தில் மிகக்குறைவு. அவர்களின் குரல்கள் ஒலிக்கவும் விடப்படுவதில்லை,மறைக்கப்படுகின்றன.

எல்லாமே பொருளாதார நலன்களை சார்ந்தே இயங்குகின்றன. உறவு,பாசம்,தொப்புள்க்கொடி உறவு என்று சொலிக்கொண்டு நமக்கு நாமே போலி விம்பங்களை கட்டமைக்கின்றோம். ஆனால் யாதர்த்தமா வாழ்க்கை மிகமோசமானதாக இருக்கிறது. எல்லாமே போட்டி, கொஞ்சம் அசந்தால் மனிதனை மனிதனே பொரித்துச் சாப்பிடுவார்கள்.

அண்மையில் ஒளிப்பரப்பப்பட்ட தந்தி தொலைகாட்சியின் பிரத்யேக ரணில் விக்ரமசிங்கவினுடையை பேட்டியில் இது தொடர்பான கேள்விகள் எழுப்பட்டன. இந்திய மீனவர்கள் சுடப்படுவது  நியாயமா என்று கேட்கப்பட்டது. அதற்கு ரணில் விக்ரமசிங்க கொடுத்த பதில்கள் சுவாரசியமானது. ஒருவரினுடைய வீட்டில் கொள்ளையிட வரும்போது தற்பாதுகாப்புக்கு அவர்களை கொள்ள முடியும் என்று சட்டம் சொல்கின்றது. எமது நாட்டுக்குள்ளே நுழைந்து மீன்களை கொள்ளையிடும்போது நாங்கள் என்ன செய்முடியும்? இப்படி ரணில் விக்ரமசிங்கவின் பதில் அமைத்திருந்தது.  தொடர்ந்தும் உயிர்பலிகள் தொடருமா? தீர்வு எப்படி இருக்கும்?




Comments

1 கருத்துக்கள்:

மெக்னேஷ் திருமுருகன் 18 March 2015 at 07:16  

தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டுவது என்பது தவறான ஒன்றே . அவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொல்வது அதைவிட தவறானதொன்று . நாட்டை ஆள்பவர்களுக்கு மனதில் , ஏதோ நாடு என்பது இவர்களின் பாட்டன்வழிச்சொத்து என்ற பிரம்மை வந்துவிடும் போலிருக்கிறது . இந்த பூமி அனைத்திற்கும் பொதுவானவள் . முட்டாள் மனிதர்கள் அதைக்கூறுபோட்டு எனக்குதான் சொந்தம் என்று பீற்றிக்கொள்ள என்ன உரிமை இருக்கிறது . உயிர்கள் பிறப்பது ஒரு அரிய செயல் . அது மனிதனை மீறியதொரு சக்தி ஆனால் இவர்களின் பிரிவினைக்காக ஒவ்வொரு உயிர்களும் கொல்லப்படவது ஏற்றுக்கொள்ளவே முடியாது .

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP