Captain Phillips - ஓர் பார்வை

>> Friday 20 March 2015

கடற்கொள்ளை என்றவுடன் இயல்பாக நமக்கு நினைவு வருவது சோமாலியா. ஏடன் வளைகுடா பகுதியில் அதிகமாக சரக்கு கப்பல்கள் கடத்தப்படுவதும் கப்பம் கொடுக்கப்பட்டு மீட்கப்படுவதும் தினசரி செய்தியில் நாம் படித்து உச்சுக் கொட்டியவைதான். நிஜமாக 2009இல் ஏறக்குறைய கடத்தப்பட்ட அமெரிக்காவுக்கு சொந்தமான கப்பல் எம்.வி.மேர்ஸ் அலபாமா. அதன் கப்டன் ரிச்சர்ட் பிலிப்ஸ் தான் சந்தித்த மோசமான கடத்தல் அனுபவத்தை தொகுத்து புஸ்தகமாக வெளியிட்டார். பில்லி ரே அந்த புஸ்தகத்தை தழுவி திரைக்கதை எழுத Paul Greengrass இனால் இயக்கப்பட்டு வெளியாகிய திரைப்படம் Captain Phillips.

என்னதான் ஆபத்தான பயணமாக இருந்தாலும் சரக்கு கப்பலில் பாதுகாப்புக்குகூட ஆயுதங்கள் வைத்திருக்க முடியாது. இப்படி ஆயுதங்கள் இல்லாமல் அப்பாவித்தனமாக ஏக்கச்சக்க பொருட்களுடன் சிக்கும் கப்பல்களை நைஸாக கடத்துவது சோமாலியர்களின் வாடிக்கை. சோமாலியர்களுக்கு ஏகப்பட்ட வறுமை அவர்களின் வளங்களை மேற்கத்திய நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு கொள்ளையடிகின்றன, உள்நாட்டு சண்டைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை இந்தக் கெடுபிடிக்குள் அவர்ளின் கடல் எல்லையில் ஊடுருவி மீன்களை அமெரிக்க கப்பல்கள் அபேஸ் செய்து விடுகின்றன. பொறுத்துப் பார்த்த சோமாலியர்கள் பணத்துக்காக கடற்கொள்ளையில் குதித்தனர். பெரும்பாலும் இந்தக் கொள்ளையில் ஈடுபடுவது நொந்துபோன சோமாலிய மீனவர்களே. இவர்களுக்கு தலைவர்கள் இருப்பார்கள் பெரும்பாலான டாலர்களை அவர்கள் சுருட்டிவிடுவார்கள். உயிரை பணயம் வைத்து கடத்ததுவர்களின் வாழ்க்கை மேன்பட்டதாக தெரியவில்லை. அவர்கள் மறுபடி மறுபடி கப்பல்களை கடத்த கிளம்புகின்றார்கள்.

ஓமன் நாட்டில் இருந்து 24,500 டன் சரக்கு மற்றும் 20 கப்பல் ஊழியர்களோடு அலபாமா கப்பல் கென்யாவை நோக்கி பயணிக்கின்றது. அதன் கப்படன் ரிச்சர்ட் பிலிப்ஸ் ஏடன் வளைகுடா வழியாக செல்லவேண்டும் என்றபோதே உஷாராகி விடுகின்றார், அடிவயிற்றில் கொஞ்சம் பயத்தோடு கட்டுக்கோப்பாக கப்பலை வழிநடத்திச் செல்கின்றார். பயந்ததுபோல் இரண்டு படகுகளில் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிகளோடு பின்தொடர்ந்து வருகின்றார்கள், கப்பலில் பதற்றம் அதிகரிக்கின்றது. ராடரில் அவர்கள் வேகம் வேகமாக நெருங்குவது தெரிகின்றது. அவர்கள் நிச்சயம் வயலசில் கப்பலில் பேசுவதை ஓட்டுக் கேட்பார்கள் என்று தெரியும். ரிச்சர்ட் பிலிப்ஸ் அமெரிக்க நேவியுடன் கதைப்பதுபோலவும் அவர்கள் ஐந்து நிமிடத்தில் ஹெலிகாப்டரில் வந்து தாக்கபோவதாகவும் தெரிவிப்பதுபோல உடாஸ் விட்டுப் பார்கின்றார். இதை அவதானித்த கொளையர்களில் ஒரு படகு நிஜம் என்று நம்பி தப்பித்தோம் பிழைத்தோமென்று யூ-டேர்ன் அடித்து ஓடுகின்றது. மற்றப்படகில் வந்தவர்கள் இந்த பாச்சா நம்கிட்ட பலிக்காதென்று விடாமல் கலைகின்றனர்.

ரொம்ப அருகில் நெருங்கிய கடற்கொள்ளையர்களை சமாளிக்க முடியவில்லை. அட்டகாசமாக கப்பலில் தாவி நுழைந்து வந்துவிடுகின்றார்கள். கப்பல் பணியாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கப்பலின் பலபகுதியில் மறைந்து இருகின்றார்கள். கொள்ளையர்கள் நான்கு பேர்கள் கையிலும் ஏகே-47 துப்பாக்கிகள். ரிச்சர்ட் பிலிப்ஸ் கொள்ளைக்கூட்ட தலைவன் முசியுடன் பேச்சுவார்த்தை நடத்திப்பார்கின்றார். தங்களிடம் முப்பதாயிரம் அமெரிக்க டொலர்கள் இருப்பதாகவும் அதை எடுத்துக்கொண்டு போகச் சொல்கின்றார். அவர்கள் தங்களை பார்த்தால் பிச்சைகாரர்போலாவா இருக்கீது அடிங்கொய்யால.. நமக்கு பில்லியன் டொலர்கள் வேணும் என்கின்றனர். கப்பல் பணியாளர்கள் எங்கே ஒளித்து இருக்கின்றார்கள் என்று சுத்தித் தேடும்போது ஒருவனுக்கு காலில் கண்ணாடித் துகள்கள் கிழித்துவிடுகின்றன. இந்த நேரத்தில் வசமாக கொள்ளைகூட்டத் தலைவனை கப்பல் பணியாளர்கள் மடக்கி பிடித்து விடுகின்றனர்.

முப்பாதாயிரம் டொலர்களும் சோமாலியாவுக்குபோக படகும் தருகின்றோம் அப்படியே கிளம்பச் சொல்கின்றனர். சரியேன்று கிளம்பும்போது வசமாக ரிச்சர்ட் பிலிப்சையும் அந்த படகில் தள்ளிக்கொண்டு அதாவது கடத்திக்கொண்டு சோமாலிய கிளம்புகின்றனர். ஒரு கணத்தில் சூழ்நிலைகள் அப்படியே மாறுகின்றது. அப்புறம் எப்படி ரிச்சர்ட் பிலிப்சை மீட்டனர் என்பதே மீதிக்கதை.

அட்டகாசமாக எழுதப்பட்ட திரைக்கதை படம் முடியும்வரை சலிப்பூட்டாமல் வைத்திருகின்றது. நலிவடைந்த பொருளாதாரத்தில் சிக்கி நொந்துபோன சோமாலியர்களை இயல்பாக படம் பித்துள்ளனர். மயிர்கூச்செறியும் அக்சன் மசாலாக்கள் இல்லை(வழமையான டாம் ஹாங்ஸ்ன் படங்கள் போலவே). வசனங்கள் ரொம்பவே பிடிக்கின்றன. நாங்கள் அல்கொய்தா இல்லை எந்த கோரிக்கையும் வைக்கப்போவதும் இல்லை, யாரையும் கொல்லவும் மாட்டடோம் எங்களுக்கு வேண்டியது அமெரிக்க டாலர்கள் இது வெறும்  பிசினஸ் அப்படின்னு கொளையர்கள் அடிக்கடி சொல்கின்ற வசனங்கள் கவனிக்க வைகின்றது.

போனமுறை கடத்திய கப்பலில் இருந்து ஆறு மில்லியன் டொலர்கள் சுளையாகக் கிடைத்தது என்கிறான் முசி. அப்புறம் ஏன் இன்னும் இங்க அலைஞ்சிட்டு இருக்குறீங்க என்று ரிச்சர்ட் பிலிப்ஸ் வினவ அவர்களிடம் பதில் இல்லை. உண்மையில் அவர்கள் தலைவர்கள் உரிஞ்சி விடுகின்றனர். சோமாலியர்களின் வறுமைகள் அவர்களின் பின்னணிகள் தொடர்பாக பெரிதாக படத்தில் பேசப்படவில்லை ஒன்று இரண்டு வாசங்களே சாக்குக்கு வருகின்றன அவ்வளவுதான். மற்றபடி அமெரிக்க தேசியவாதம்தான்.

ரிச்சர்ட் பிலிப்ஸ்சாக நடித்தவர் நமக்கு ரொம்பவே பிடிக்கும் நடிகர் டாம் ஹாங்ஸ்ன். இவரின் நடிப்பைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை ஐந்து முறை ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டு இரண்டு முறை ஆஸ்காரை தட்டிச்சென்றவர். இறுதிக்காட்சியில் நர்சுடன் உரையாடும்போது அதிர்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் பல்வேறு உணர்சிகளை வெளிபடுத்தத் துடித்தல் என்று அட்டகாசமாக ஸ்கோர் செய்துள்ளார். இது மட்டும் அல்ல படம் முழுக்க இவரின் நடிபாற்றல்தான் செறிவாக செறிந்துள்ளது. சோமாலிய கடற்கொள்ளையர்களின் தலைவனாக நடித்திருப்பவர் பர்கத் அப்ரி இவரின் நடிப்பும் டாம் ஹாங்ஸ்னுக்கு சளைத்தது இல்லை. படத்தின் இசை பதற்றத்தில் தொடர்ந்தும் வைத்திருக்க அடக்சமாக உதவுகின்றது. (குறுந்தாடியுடன் டாம் ஹாங்ஸ்னை பார்க்க சாட்சாத் சாரு நிவேதிதாவை பார்த்ததுபோல் இருக்கிறது... எனக்கு மட்டும் தானா?) உண்மை சம்பவத்தை இயல்பாக. படமாக்கி இருகின்றார்கள் கண்டிப்பாக பார்கலாம்.

                               டிரைலர்




Comments

2 கருத்துக்கள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) 5 April 2015 at 04:53  

நான் மிக ரசித்த படங்களில் ஒன்று!
தமிழில் இப்படி, கதாநாயகி இல்லாமல்
படமெப்போ எடுப்பார்கள் என ஏங்க வைத்த மற்றும் ஒரு படம்.
நல்ல விமர்சனமும், ரசிப்பும்

Annogen 5 April 2015 at 17:05  

நன்றி...  உண்மையான சம்பவங்களை மிகையற்ற புனைவுகளுடன் படிமமாக்கப்பட்ட திரைப்படம். தமிழில் இப்படி இல்லாமல் இருப்பது பாரிய வெற்றிடம்தான்.

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP