Camp X-Ray (2014) - விமர்சனம்

>> Wednesday 11 March 2015


“கிறிஸ்டென் ஸ்டீவர்ட்” பற்றி தெரியாதவர்கள் ஹொலிவூட் சினிமா பிரியர்களாக இருக்க முடியாது. Twilight  சீரிஸில் நடித்து எக்கச்சக்க இளம் ரசிகர்களை கட்டிப்போட்டவர். இயல்பான அழகும் மினுங்கும் பொன்நிற முடியும் எக்ஸ்ரா பிளஸ்பாயின்ஸ். இன்பப் படவைக்கும் கிறிஸ்டென் ஸ்டீவர்ட்டின் அசரடிக்கும் அழகுக்கும் நடிப்புக்கும் நானும் வீழ்த்தப்படாமல் தப்பவில்லை. அந்த அடிப்படையிலே “கேம்ப் எஸ்ரே” திரைப்படத்தை பார்க்க முனைந்தேன்.
கிறிஸ்டென் ஸ்டீவர்ட்
அமெரிக்க இராணுவப்பெண்ணின் பார்வையில் ஒரு சிக்கலான உளவியல் அணுகளோடு இந்தப்படம் நமக்கருகில் மென்மையாக ஆர்பாட்டம் இல்லாமல் பேசுகின்றது. “எமி கோல்” ப்ளோரிடாவில் உள்ள சிறிய டவுனில் இருந்து அமெரிக்க இராணுவத்தில் இணைந்த இளம்பெண். இதுவரை அமெரிக்காவை தவிர வெளிதேசம் எங்கேயும் பயணம் செய்ததில்லை. முதல் பணிநிமிர்த்தமாக ஈராக்குக்கு வருக்கின்றாள். அபாயகரமான போர்முனையில் ஆயுதங்களோடு போரிடும் பணியில்லை. சிறைபடிக்கப்பட்ட கைதிகளை Guantanamo Bay சிறைச்சாலையில் கவினிக்கும் பொறுப்பு. குறிப்பிட்ட சில மாதங்களுக்கு ஒருமுறை அணைத்து கார்ட்சையும் புதிதாக மாற்றுவார்கள். அவள் வந்து சேர்ந்த குழாமில் இவளும் இன்னுமொருத்தியே பெண்கள். மிகவும் தனித்துவிடப்பட்ட சூழலில் ஆண்களுக்கு மத்தியில் தனியொருத்தியாக இயங்கவேண்டிய சிக்கலான நிர்பந்தங்கள்.

சிறைபிடித்து வைக்கப்பட்ட கைதிகள் அனைவரும் முஸ்லிம்கள். 9/11 தாக்குதலுக்கு பிற்பாடு கைதுசெய்யப்பட்டவர்கள். பெண்களை விரும்பாத முரட்டு சுபாவம் உடையவர்களாக பெரும்பாலனவர்கள் இருக்கின்றார்கள். எமி தனியொரு பெண்ணாக இவர்களுக்கு இடையில் பாணியாற்றுகின்றாள். லைபரியில் இருந்து நூல்களை கைதிகளுக்கு அடிக்கடி வழங்கும் வேலையில் ஈடுபட நேர்கின்றது அப்போதுதான் “அலி அமீர்” என்ற சிறைக்கைதி எமிக்கு அறிமுகமாகின்றான்.

அலி அமீர் ஜேர்மணியில் வளர்ந்தவன். எட்டு வருடங்களாக இதே சிறையில் இருப்பவன். யூனிவேர்சிட்டியில் படித்தவன். ஆங்கிலம் சரளமாக பேசக்கூடியவன் ரொம்பவே வாசிப்பில் ஈடுபாடுகொண்டவன். ஒரு குறிப்பட்ட புஸ்தங்களே சுழச்சியில் கைதிகளுக்கு கொடுக்கப் படுகின்றன. இருந்த அணைத்து புஸ்தகங்களையும் வாசித்து தள்ளிவிட்டு திரும்ப திருப்ப அதே புஸ்தகங்களை சலிப்புத்தட்ட வாசித்துக்கொண்டு இருக்கின்றான் அமீர். ஹரிபோட்டர் பிரியரான அமீர் அணைத்து சீரிசையும் வாசித்துவிட்டு புதிதாக வந்த ஹரிபோட்டர் நாவலுக்கு காத்திருக்கின்றான். எமியிடம் அதனை நூலகத்திலிருந்து எடுத்து தரும்படி அடிக்கடி கேட்கின்றான். தீவிரவாதம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட கைதி ஒருவனிடமிருந்து ஹரிபோட்டர் நாவல் தொடர்பான ஆர்வங்கள் எமியை ஆச்சரியப்பட்ட வைக்கின்றது. எமிக்கும் அமீர்க்குமான உறவு கசப்பாக ஆரம்பித்தாலும் போக போக இருவருக்கும் இடையில் மென்மையான நடப்பு சார்ந்த ஸ்பரிசமான உறவாக வலுப்பெருகின்றது. இதனை மிக நுட்பமாக படமாக்கியிருப்பார்கள்.


ஆரம்பத்தில் நன்றாக போய்கொண்டிருந்த பணி, மேல் அதிகாரி சார்ஜன்ட் ஒருவனுடன் இசகுபிசகா முரண்பட நேர்கின்றது. அதிலிருந்து அவளின் பணி சிக்கலாக மாறுகின்றது. அதிகம் தனிமையில் தன்னை பொருத்திக்கொள்ளப்பட வைக்கப்படுகின்றாள். இந்த நேரத்தில் அமீருடனான வினோத நட்பு இன்னும் இருக்கமடைய செய்கின்றது. இராணுவ வீர்களுக்கும் கைதிகளுக்கும் இடையிலான உறவாடும் முறைதொடர்பான விதியிலிருந்து விலகியே அமீருடன் பழகநேர்கின்றது. படம் இறுதிக்கட்டத்தை எஞ்சும்போது அமீர் தங்களை அமெரிக்கர்கள் நடத்தும் விதத்தை பற்றிபேசும் உரையாடல்கள்  மிகமுக்கியமானவை. 

மிக சாதாரணமாக நேர்கோட்டு கதையமைப்பில் இயல்பாக படம் நகர்கின்றது. தப்பிதவறிகூட துப்பாக்கிகளை கூட அருக்கில் காட்டவில்லை. ஒரு சின்ன வெடிச்சத்தத்தை கூட படத்தில் கேட்க முடியவில்லை என்பது விசேஷம். மிக நுணுக்கமாக இளம் இராணுவ வீரர்களில் உளவியல் வெளிப்பாடுகளை மட்டுமே கேம்ப் எஸ்ரே பதிவு செய்கின்றது.


எமியாக நடித்தவர் கிறிஸ்டென் ஸ்டீவர்ட் இவரின் நடிப்பை பற்றி விவரிக்கவே தேவயில்லை அட்டகாசமாக அழுத்தமாக நடித்திருந்தார். தூக்கிபோட்ட கொண்டையும் இராணுவ உடையுமாக வித்தியாசமான கிறிஸ்டென் ஸ்டீவரை படம் நெடுகிலும் பார்க்க முடியும். அலி அமீராக நடித்தவர் A Separation ஈரானிய திரைப்படத்தில் நடித்து நமக்கு பரிச்சியமான Peyman Moaadi

2014 Sundance Film Festival ல் வெளியிடப்பட்ட இப்படம் அலுப்புதட்டக்கூடிய படமாக இருப்பதாக பலர் விசனம் தெரிவிகின்றார்கள். நீங்கள் அக்சன் பிரியர்களாக இருந்தால் கண்டிப்பாக படம் பிடிக்காமல்தான் போகும். அவர்கள் தவிர்த்து விடுவது நல்லது.

Guantanamo Bay சிறைச்சாலை தொடர்பாக National GeographicInside Guantanamo ஆவணப்படத்தை 2009ல் தயாரித்திருந்தது. அந்த ஆவணப்படத்தில் இருந்து பலவிடயங்கள் இத்திரைப்படதில் கையாளப்பட்டுள்ளது. திரைப்படம் முழுவதும் யதார்த்தமாக இருக்க அதுவே காரணம்.

Directed by - Peter Sattler
Music by - Jess Stroup

                              டிரைலர்



 


Comments

1 கருத்துக்கள்:

மெக்னேஷ் திருமுருகன் 11 March 2015 at 20:49  

நேரமே கிடைக்காத காரணத்தினால் படங்கள் பார்க்கவே முடிவதில்லை சகோ ! பார்க்கலாம் . எல்லாம் வாட்ச்லிஸ்டில் வைத்திருக்கிறேன்.

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP