American Sniper (2014) - விமர்சனம்

>> Tuesday 24 March 2015

அமெரிக்கன் ஸ்னைப்பர் திரைப்படம் கடந்த ஆஸ்கார் பரிந்துரையில் இடம்பிடித்தபடம். படம் பார்க்கும்போது முள்ளம்தண்டுகள் ஜில்லிட்டது. மிக உண்மை விளிம்புக்கு அருகில் படமாக்கப்பட்டுள்ள மற்றுமொரு உன்னதமான படம். அமெரிக்க இராணுவத் தேசியவாதம் செறிவாக இருந்தாலும் அவை எவையும் உறுத்தவில்லை.

அமெரிக்கக் கடற்படையின் அதிரடிப் பிரிவான நேவி சீல்ஸ் (NAVY SEALS) படைபிரிவைச் சேர்ந்த கிறிஸ் கைல் என்று அழைக்கப்பட்ட தூரவிருந்து குறிபார்த்துச் சுடும் துப்பாகி வீரரின் உண்மையான வாழ்க்கையை  அவரே கைப்பட எழுதிய சுயசரிதையை அடிப்படையாக வைத்து, அந்தப் புத்தகத்தின் பெயரிலேயே பிரபல ஹாலிவூட் நடிகரும் இயக்குனருமான கிலின்ட் ஈஸ்ட்வூட் இனால் உருவாக்கப்பட்ட படம்தான் அமெரிக்கன் ஸ்னைப்பர். அவரின் சொந்தா வாழ்க்கை அதன் ஊடக அமெரிக்க நாட்டுப்பற்று,ஆழமான காதல் என்று திரைக்கதை அபத்தங்கள் இன்றி சுவாரசியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறுவயதில் தந்தையுடன் தூரவிருந்து குறிபார்த்து மிருகங்களை வேட்டையாடி கச்சிதமாக குறிபார்த்துச் சுடும் திறமையை வளர்த்துக் கொண்டவர் கிறிஸ் கைல். இளம்வயதில் Cow boy யாக சகோதரனுடன் வெட்டியாக ஜாலியாக சுத்தித்திரிகின்றார். ஒரு கட்டத்தில் அமெரிக்க தாய்நாட்டுக்கு தீவீரவாத அச்சுறுத்தல்கள் அதிகரிக்க இராணுவத்தில் இணைய கிளம்புகின்றார். இணையும்போது அவருக்கு மட்டும்தான் வயது அதிகம். கடும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. கடும் இராணுவவ் பயிற்சியின் இடையில் ஓர் பெண்ணுடன் காதலும் இயல்பாக அரும்புகின்றது. நேவி சீல்ஸ் பிரிவில் தூரவிருந்து குறிபார்த்துச் சுடும் திறமையில் மிகையாக ஜொலிகின்றார். அந்தப்பணியே கிறிஸ் கைலுக்கு வழங்கப்படுகின்றது. காதலும் திருமணத்தில் ஆர்பாட்டம் இல்லாமல் முடிகின்றது.


1999 தொடக்கம் 2009 வரை அவர் ஈராக் யுத்தத்தில் அமெரிக்க மரைன் அதிரடிப்படை வீரர்களுக்கு பக்கத்துணையாக குறிபார்த்துச் சுடும் வீரராகப் பணியாற்றுகின்றார். அமெரிக்க வீரர்கள் ஈராக் வீதிவழியே முன்னேறிச்செல்லும்போது தொலைவில் உயரமான கட்டிடத்தின் உச்சியில் சினைப்பர் துப்பாகியுடன் படுத்திருந்து முன்னேறிச்செல்லும் வீரர்களுக்கு பாதுகாப்பு வழங்குவார். அவர்களை நுணுக்காமாக கவனித்து அவர்களை ரகசியமாக தாக்கவரும் எதிராளிகளை விவேகமாக சுட்டுத்தள்ளுவார். அவரின் திறமையில் அதிக நமிக்கைவைத்து அவரின் குழு பயமின்றி நமக்கு மேலே ஆளிருக்கின்றான் எல்லாத்தையும் பாத்துக்கா என்ற தைரியத்தில் தயக்கம் இன்றி முன்னேறுகின்றார்கள்.

மிகவும்பொறுப்பான வேலையில் கிறிஸ் இருக்கின்றார். பலசமயம் தனது வீரர்களை காப்பாற்ற மனட் சாச்சியையும் ஒளித்துவைத்துக்கொண்டு கடமையில் ஈடுபடவேண்டிய நிர்ப்பந்தம். ஒருமுறை படை முன்னேறும் நடவடிக்கையில் முனையும்போது ஒரு முஸ்லிம் பெண்ணும் சிறுவனும் வருகின்றார்கள். கிறிஸ் அவர்களை சினைப்பர் துப்பாக்கியுடன் இணைக்கப்பட்ட தொலைநோக்கியில் நோக்கும்போது அந்தப் பெண் ஓர் வெடிகுண்டை சிறுவனிடம் கொடுத்து வீசச்சொல்லுகின்றாள். கிறிஸ் பாரபச்சம் பார்காமல் வீரர்களை காப்பாற்ற வெடிகுண்டை வீச முனையும் சிறுவனை சுட்டுத்தள்ளுகின்றான். சிறுவன் சாய்ந்துவிழ அழுதுகொண்டே அந்த வெடிகுண்டை எடுத்து வீசவரும் அந்தப் பெண்ணையும் சுட்டுத்தள்ளுகின்றான். உறையவைக்கும் காட்சியில் அதுவும் ஒன்று. இதனாலேயே கிறிஸின் குழுவில் இருக்கும் அணைத்து வீரர்களுக்கும் கிறிசை பிடித்து விடுகின்றது. இவன் இருக்கும் வரை நாம் சாகமாட்டோம் என்று தீவிரமாக கிறிஸின் குழாம் வீரர்கள் நம்புகின்றார்கள். இதனாலேயே ஈராக்கிய தீவிரவாதிகலுக்கு இவன்மீது எரிச்சல் அதிகரிக்கின்றது. "ரமாடியின் சாத்தான்" எனும் பெயரை அவர்கள் வைக்கின்றார்கள். கிறிசை கொல்வதற்கு ஈராக்கியத் தீவிரவாதிகள் முயல்கின்றார்கள் ஆனால் இறுதிவரை அவர்களால் அவனைக் கொல்ல முடியவில்லை.


விடுமுறைக்கு வீடுவரும்போது அவனின் குடும்பம் இயல்பாக காட்டப்படுகின்றது. போர் முனையில் கணவன் இருப்பதை எண்ணி துயர் அடையும் மனைவி வேலையை விடச்சொல்கின்றாள். ஆனால் தேசம்தான் முக்கியம் என்று மீண்டும் மீண்டும் போர்முனைக்குச் செல்கின்றார். மகனை அழைத்துக்கொண்டு டயர்மாற்றும் இடத்துக்குச் செல்லும்போது முன்னால் இராணுவ வீரன் ஒருவன் கிறிசை சந்திகின்றான். அவனை கிறிஸ் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. தன்னை யாரென்று கூறும் அந்த முன்னால் வீரர்,  இன்று உங்களால்த்தான் நான் உயிர் வாழ்கிறேன். உங்களுடன் ரமாடியில் ஒரு போர்க்களத்தில் நானும் ஈடுபட்டிருந்தேன். அங்கே என்னை நீங்கள் எதிரிகளிடமிருந்து கப்பாற்றினீர்கள். நான் இன்று எனது பிள்ளைகள், மனைவியுடன் வாழ மகிச்சியுடன் முடிகின்றதென்றால் அதற்கு நீங்கள்தான் காரணம். மிக்க நன்றி என்று சொல்லும் அவர் இறுதியாக குனிந்து கிறிஸின் மகனிடம் "உனது தகப்பனார் நிஜமான வீரன்" என்று சொல்லிவிட்டுப் போகின்றார். மிக இயல்பாக கண்கலங்கவைக்கும் வகையில் படமாக்கப் பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் இராணுவத்தில் இருந்து வீடுவரும் கிறிஸ்க்கு மனஉளைச்சல் அதிகரிக்கின்றது. போர் முனை கொடூர சம்பவங்கள் அழுத்தத்தை தூண்டுகின்றது. ஒரு மனோ தத்துவ நிபுணரின் ஆலோசனையினால் முன்னால் காயப்பட்ட இராணுவ வீரர்களின் சங்கத்துடன் இணந்து அவர்களுக்கு ஓய்வுநேரப் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார் கிறிஸ்.

2013 இல் அமெரிக்க ராணுவத்தின் முன்னைய வீரர்களுக்கான துப்பாக்கிச் சுடும் தளமொன்றில் அவரும் அவரது நண்பர் ஒருவரும் இன்னொரு அமெரிக்க வீரரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். கிட்டதட்ட 160 பேரை சுட்டுத்தள்ளியதாக அவரின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. உண்மையில் அதற்கும்மேல் எண்ணிக்கை இருக்கலாம் என்று சொல்லபப்டுகின்றது. உண்மையில் நடந்த சம்பவங்களை எப்படி பாடமாக்க வேண்டும் என்பதற்கு இந்தப்படம் சான்று. உறையவைக்கும் பலகாட்சிகள் படத்தில் உண்டு நீங்களே பார்த்து கண்டுகொள்க.

The Hurt Locker திரைப்படத்தைவிட இப்படம் என்னை இன்னும் கவர்ந்தது. உங்களையும் சந்தேகம் இல்லாமல் கவரும். அட்டகாசமான திரைப்படம். மிஸ் பண்ணவேண்டாம்.

                               




Comments

1 கருத்துக்கள்:

மெக்னேஷ் திருமுருகன் 25 March 2015 at 07:49  

ரொம்பநாளா பாக்கனும்னு நினைச்சிட்ருந்த படம் ப்ரோ . இனிதான் வாட்ச்லிஸ்ட்ல சேத்தனும் ...

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP