ஃபேஸ்புக் + சாட் + காதல் + பிரச்சனைகள்

>> Sunday 22 February 2015

ஃபேஸ்புக் புரட்சியில் வாழும் இந்த தலைமுறை ஒருவகையில் கொடுத்து வைத்தவர்கள்தான். கடுமையான கட்டுகோப்புக்களுடன் பெண்வாசனைகளின்றி துரதிர்ஷ்டமாக வாழ்ந்த அல்லது வழ்ந்துகொண்டிருக்கும் பல இளைஞர்களுக்கு மிகப்பெரிய கிளுகிளுப்பான விடிவைத் தந்தது பேஸ்புக். பாய்ஸ் ஸ்கூலில் படித்து எந்தவித பருவபெண்ளுடனும் பேசிபழகாமல், நாலடிக்குள்ளே எந்தவித வேற்று பெண்களையும் சந்திக்காமல் முடங்கிய எல்லா பயலுகளுக்கும் மிகப்பெரும் மீட்சியை தந்தது ஃபேஸ்புக் ஃபேஸ்புக்....
பல காதல் ஜோடிகள் ஃபேஸ்புக்கினால் இணைந்தும் திருமணத்திற்கும், சொர்கக்திற்கும் அதான் ஓய் தற்கொலைகளுக்கும் சர்வசாரணமாக போய்வந்துளார்கள். இந்த தலைமுறையில் பலஜோடிகள் ஃபேஸ்புக் மூலம் இணைந்தாலும்  அவர்களுக்கிடையே இசகுபிசகான பிரச்சனைகள் வருதவதற்கு முக்கிய கராணமாக பாழாப்போன ஃபேஸ்புக்கும் இருந்து தொலைப்பது மிகப்பெரிய சோகம் கலந்த உண்மை.

நம்ம ஊரில் அதிகமாக பெண்களுடன் பழகவோ கதைகவோ ஜொள்ளுவிடவோ சந்தர்பங்கள் கிடைப்பது மிக அரிதிலும் அரிது. பதின்ம வயதுகளில் பயைன்களுக்கு மீசையரும்பி சில வினோத வழமையான ஹார்மோன்கள் வழமையான அளவில் சுரக்க அதிகம் பெண்கள் விஷயத்தில் சுறுசுறுப்படைவார்கள். பெண்களுக்கும் இப்படியெல்லாம் ஆகாத ப்ரோ என்று கேக்க கூடாது, கண்டிப்பா ஆகும் எதிர்பால் இனத்தின்மீது ஈர்ப்பு வருவது இயற்கைதானே. ஆண்களுக்கு இதுகொஞ்சம் அதிகமாகவேயாகும் அல்லது அவர்கள் அந்த உணர்வுகளை வெளிக்காட்டி கொள்கிறார்கள். 

உயர்தர ஸ்கூல்படிப்புக்கள் ஒருமாதிரி கரையொதுங்க பல பெண்கள் ஃபேஸ்புக்கு நுழைவார்கள் முதலில் ப்ரோபைல் பிக்ஸரை பூக்கள், டேடிபியர், சமந்தா,கஜோல் என்று அட்டகாசமாக அமோகமாக ஆரம்பிப்பார்கள். ஏற்கவே ஃபேஸ்புக்கணக்கு ஆரம்பித்து காஞ்சு வறண்டு ஒரு பெண்ணையாவது ஃபேஸ்புக் பிரண்டாக்கி ஜொள்ளு விடமுடியாத என்ற நட்பசையில் பையன்கள்தரப்பில் மிகப்பெரிய கும்பல் காத்துகிடக்கும். எங்கையாவது ஒரு பெண் ப்ரோபைல் பிக்ஸரை கண்டால் ரீக்குவஸ்ட் கொடுத்தேயாகவேண்டும் என்று கைகால் முதல் எல்லா பாகங்களும் நடுங்க ஆரம்பிக்கும் அந்த ஜிம்பிலிகும்பா குரூப்புக்கு. இதில் சில அங்கிள்ஸ்சும் உள்ளடங்கம்.

என்னதான் தலைகீழாகவோ சைட்டாகவோ உருண்டுபிரண்டு நின்று பெண்களுக்கு ரிக்குவஸ்ட் கொடுத்தாலும் சாதகமான சமிச்சைகள் கிடைப்பது அணில்கொம்புதான். பையன்கள் எப்போதும் பெரும்பாலும் சொந்த ப்ரோபைல் பிக்ஸரை போடுவார்கள், தெரிந்த பெண்கள் ரிக்குவஸ்ட் அக்செப்ட் செய்வார்கள் உண்மையில் யார் நம்ம ரிக்குவஸ்ட்டை அக்செப்ட் செய்தார்கள் என்பதே பையன்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களை பொறுத்தவரை அந்த பெண்ணின் ப்ரோபைல் பிக்ஸரில் இருக்கும் நடிகைபோலவோ டெடியர்போலவோ சாரு ஸ்டைலில் “பேர் அழகியாக” இருப்பர்கள் என்று கற்பனை குதிரை சைனாக்காரன் போட்ட காப்பெட் ரோடில் தலைதெறிக்க கனைத்துக்கொண்டு ஓடும். 
ஆனால் சாட்டில் பையன்கள் “ஹாய்” போட்டாலும் ரிப்ளேவருவது சிக்கலே, அப்படி ரிப்ளே வந்தாலும் ஃபேக் ஐடியாக இருக்குமே என்ற பயமும் சேர்ந்தேவரும். கடுமையாக தவமிருந்து எல்லா பெண்பெயரில் இருக்கும் ஐடிகளுக்கும் ரிக்குவஸ்ட் கொடுத்து அவர்கள் போடுகின்ற எல்லா ஸ்டேட்டஸ்களுக்கும் பாரபட்சமின்றி லைக், Nice,Cute,Wow என்று மனசாட்சியேயில்லாமல் கமெண்ட் செய்து சாட்டிங்கில் நூதனமாக நுழைந்து வெற்றியும் கண்டு செல் நம்பரும் பெற்றுகொள்ளும் வீரதீரர்களும் இருகின்றார்கள். சிலர் ஆசையாக கடலைபோட்ட பெண்களின் சொந்த போட்டோவை தப்பிதவறி பார்த்து விகிர்த்து ஜன்னிவந்து அரண்டு ஓடியவர்களும் இருகின்றார்கள்.

அதிகம் மார்க்வேண்டி அதிகம் டியூட்டரியில் ஃபேமஸான “இந்தப்பயல் எஞ்சினியரிங் என்டர் பண்ணிடுவான்”.. “டாக்டராகிவிடுவான்” என்று விளிக்கப்படும் பையன்களுக்கு ஜோலியே தேவையில்லை ரீக்குவஸ்ட் கொடுத்தால் மட்டும்போதும் அணைத்து பெண்களும் படபடவேண்டு அப்செட் செய்வார்கள். சில சமயம் ரீக்குவஸ்ட்டே கொடுக்கத்தேவையில்லை பெண்களே ரீக்குவஸ்ட்டும் கொடுத்து ஹாய் கூட போடுவார்கள்.

“நீங்க சமர்த்தா கிளாஸ்ல இருப்பீங்க.. நல்லா படிப்பீங்க..” என்று பெண்களே சாட்டில் வருவார்கள். இதையே மிகப்பெரிய நோபல் சாதனையாக (பின்ன இல்லையா?) அன்றைய பசங்க மீடிங்கில் வட்டமேசை மாகாநாடாக கதைக்கப்படும். என்னோடு அவள் கதைச்சாள்டா.. என்னை அப்படி சொன்னாள்டா என்று பலரை வியப்பில் ,வெறுப்பில்,கடுப்பில் ஆழ்த்தும் சம்பவங்கள் அரங்கேறும். அன்றே சில பயல்கள் மிச்ச நண்பர்களின் பிரண்ட் லிஸ்ட்டில் நுழைந்து கண்ணில் படும் அணைத்து பெண் ஐடிகளுக்கும் கோரஸாக ரீக்குவஸ்ட் கொடுக்கப்பார்கள். இப்படி எக்கச்சக்கமாக வந்துதொலையும் ரீக்குவஸ்ட்களை பலபெண்கள் அக்செப்ட்டும் செய்யமாட்டார்கள் டிலீட்டும் செய்ய மாட்டார்கள் தங்கள் நண்பிகளுக்கு பெருமையாக காட்டுவார்கள் “இங்க பாரேன் எனக்கு எவ்வளவு ரீக்குவஸ்ட்.. இவன் கொடுத்திருக்கிறான் அவன் கொடுத்திருக்கிறான் ரீக்குவஸ்ட்டை அக்செப்ட் செய்ய சொல்லி ஒரு பாய் எனக்கு இப்படி மெசேஜ்பண்ணியிருக்கிறான் என்றெல்லாம் கதைத்துதிரிவார்கள். இதில் இவர்களுக்கு பெருமை.

இப்படியே கொஞ்சகாலம்போக பல்கலைக்கழகம்,மேற்படிப்பு, வேலையென்று போய்விடுவார்கள். ஆரம்பத்தில் சமந்தா கஜோல் என்று ப்ரோபைல் பிக்ஸர் போட்டுகொண்டு திரிந்த பெண்கள் நெய்பாலிஷ் அடித்த கையை போடுவார்கள் அப்புறம் சொந்த படத்தை எடிட்செய்யாது போடுவார்கள், கொஞ்சகாலம் போக சொந்த போட்டேவையே பயமின்றி போடுவார்கள். சிலருக்கு நல்ல இணைய நட்புகள் கிடைக்கும் அது ஒரு வரமாகவிருக்கும். ஃபேஸ்புக்கிள் அறிமுகமாகி நல்ல காதல்களும் உருவாகும். சிலது துஷ்பிரயோகத்தில் முடியும், சிலது விடலை விளையாட்டாக முடியும், சிலது தற்கொலைகளில் முடியும்.

இப்போதைய காதலர்கள் தங்கள் காதலன்,காதலியின் பேஸ்புக்கில் நுழைவது வழக்கம்தானே. அப்படியாக நுழையும்போது பேஸ்புக் மெசேஜ்ஜிலிருக்கும் பழைய மெசஜ்களை பார்த்து கடுப்பாவது வழக்கம் பலருக்கு தங்கள் காதலன்,காதலி சாட்டில் வேறு பையனோடோ பெண்னோடோ கதைப்பதை கடுமையாக எதிர்க்கிறார்கள். கடுமையான மணமுறிவுகளை அது உற்பத்திசெய்கின்றது.

ஏன் அப்படி கதைத்தாய் இப்படி கதைத்தாய் அவன் யார் இவன்யார் என்று பல கேள்விகள் துளைத்தெடுக்கும். இதனாலே பலபெண்கள் ஃபேஸ்புக்கை விட்டே போய்விடுகின்றார்கள். ஃபேஸ்புக்கில் சாட்டில் உள்ள மெசேஜ்கள் உண்மையில் விவாததிற்கு உட்ப்படுத்தப்பட வேண்டியவையா??

ஒவ்வொரு மனநிலையிலும் ஒவ்வொரு வகையான சாட்கள் உருவாகப்படுகின்றன சில சமயம் நகைச்சுவையில், சில சமயம் சீரியஸ்சாக, சில சமயம் வெறுப்பாக இப்படி பலகோணங்களில் உருவாக்கப்படும். வெளியிலிருந்து புதிதாக சாட்டில் உள்ள மெசேஜ்களை பார்க்கும் நபருக்கும் இந்த விடயங்கள் புரியவாய்ப்பில்லை பிழையான புரிதல்களையே உருவாகும். நேரில் சந்தித்து நண்பர்களுடன் அரட்டையடிக்கும்போது வெளிப்படும் வார்த்தைகள் காற்றில் கரைந்துவிடும். ஆனால் சாட்டில் அப்படி அரட்டைகள் உருவாக்கும்போது அதை படிக்கும் வேறு ஒருவருக்கு அந்த அரட்டைகளின் அப்போதைய நிலைமை புரியாது.

காதலென்பது சுயநலம் கலந்த ஓர் அன்புதானே. தன்னோடு மட்டுமே நெருக்கமாகவிருக்க வேண்டும்மென்று கருதப்படுவதுதானே காதல். சில நண்பிகளுடனோ, நண்பர்களுடனோ சாட்டில் தொடர்ந்து அரட்டையடிகும்போது அவர்கள் காதலனுக்கோ காதலிக்கோ தேவையற்ற தலைவலியைத்தரும். இது சந்தேகத்தால் வருவதல்ல அதிமிகை கூடிய அன்பினால் உருவாகும் நெருடலே. ஃபேஸ்புக் சாட் தொடர்பான கேள்விகளை எதிர்கொள்ளும்போது வீண் விவாத பிரச்சனைகளையும் கடும் மன முறிவுகளையும் ஏற்படுத்தும். “நீ ஏன் அப்படி பதிலளித்தாய்?” “அவன் or அவள்  சொன்னதுக்கு இப்படியா ஈஈஈ என்று இளிப்பாய்?” இப்படி பல கேள்விகள் உருவாகி மிகப்பெரிய ஜெமசங்காரம் உருவாகும்.

நீ இப்படி சாட் செய்வாதல் தன் தரப்பில் ஏற்படும் அழுத்தங்களை சொல்லும்போது எதிர்தரப்பினருக்கு வேடிக்கையாகவிருக்கும். இந்த சின்ன சுண்டக்காய் மாட்டருக்கு இப்படியா? உண்மையில் சாட் செயதவர் எந்த தப்பான கண்ணோட்டத்துடனும் சாட் புரிந்திருக்க மாட்டார், அவர் சொல்லும் நியாயங்கள் மற்றவர்கள் தரப்பில் புரியாது அந்த சுயநல அன்பு விடாது. இந்த சுண்டக்காய் விவாதங்கள் காதல் ஜோடிகளின் பிரிவுகளை அதிகம் தோற்றுவிக்கின்றது. இதிலிருந்து தவிர்துகொள்ள இப்படியான கேள்விகளை எதிர்கொள்ளும்போது மௌனமாகவிருப்பதே சாலச்சிறந்தது. உங்கள் காதல் வெற்றிகராமாக இயங்கிக்கொண்திருந்தால் எதிர்ப்பால் இனத்துடன் சாட் செய்வதை தவிர்த்துவிடுங்கள். அதைவிட முக்கியம் உங்கள் காதல் சக்சஸ்சாகியவுடன் முதல்வேலையாக . ஃபேஸ்புக் சாட்டில் உள்ள பழைய மெசேஜ்களை அழித்துவிடுங்கள். வெற்றி நமக்கே..


Comments

1 கருத்துக்கள்:

Arulnatha 22 February 2015 at 12:15  

//இது சந்தேகத்தால் வருவதல்ல அதிமிகை கூடிய அன்பினால் உருவாகும் நெருடலே//
அன்பினால் நெருடல் உருவாக முடியாது. பொறாமையால் தான் நெருடல் உருவாகும்.

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP