அனேகன்

>> Tuesday 17 February 2015

கனா கண்டேன், அயன், கோ, மாற்றான் இந்த வரிசையில் இப்போது அனேகன். K.V ஆனந்தின் படங்களை தொடர்ச்சியாக பார்பவர்களுக்கு ஒன்று புரியும் வில்லன் கேரக்டரின் வலிமை, ஹீரோவை விட வில்லன் பாத்திரந்தின் வலிமை சார்ந்த கட்டமைப்புகள் அதிகமாக இருக்கும். அட்டகாசமான அதகளமான வில்லன் பாத்திரங்களை சுபா, K.V ஆனந்தின் கூட்டணியில்தான் பார்க்கமுடியும். ஆரம்ப காலத்தில் K.V ஆனந்த் பத்திரிகை புகைப்பட நிருபராக பணியாற்றும்போதே இரட்டை எழுத்தாளர்கள் சுபா (சுரேஷ், பாலகிருஷ்ணன்) கூட்டணியோடு நெருக்காமான நட்பை கொண்டிருந்தார். 
                                  சுபா
சுபாவின் நாவல்களின் ரசிகர்களுக்கு இது நன்கு தெரிந்திருக்கும். நரேன் வைஜெயந்தி வரும் துப்பறியும் கதைகளில் சில வர்ணனைகளில் சில காட்சிகளை விவரிக்கும்போது K.Vஆனந்திடம் கமராவை கொடுத்துவிட்டால் அட்டகாசமாக படம் பிடித்து காட்டுவார் என்றெல்லாம் வரும். கனா கண்டேன் திரைப்படத்துடன் இயக்குனராக அறிமுகமாகிய K.Vஆனந்த் கதை,திரைக்கதைகளை பின்னும்போது கற்பனைத்திறன் கூடிய சுபா கூட்டணியோடு கைகோர்த்தார். பெரும்பாலும் மூவரும் பெசன்ட் நகரிலிருக்கும் நண்பரின் கெஸ்ட் ஹவுசில் தங்கி கதை விவாதத்தில் ஈடுபடுவார்கள். இவர்கள் கூட்டணியோடு உருவாகிய அனைத்து திரைக்கதைகளும் அட்டகாசமானதாகத்தான் இருந்தது. மாற்றான் சில பேருக்கு பிடிக்கவில்லை. உணவுதொழினுட்ப மோசடிகள் பற்றியும் நடந்த சில நிஜமான சம்பவங்களையும் உள்ளடக்கிய படம் மாற்றான். ஆனால் சஸ்பென்ஸ் நடுவிலே உடைவதனால் பலபேருக்கு திருப்திகரமாக இருக்கவில்லை.

கனா கண்டேன் ப்ரிதுவிராஜின் வில்லன் கேரக்டரை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது, மிகமிக ரசித்து ரசித்து பின்னப்பட்ட கேரக்டர், அந்த கேரக்டரில் நடிக்க கச்சிதமான ஒரு நடிகரை தேடி தேடி (சூரியாவிடம் கூட அணுகியிருந்தார்) பலர் நடிக்க தயக்கம்காட்டி இறுதியில் ப்ரிதுவிராஜ் அட்டகாசமாக நடித்து கொடுத்திருந்தார். கனா கண்டேன் தெளிவான படைப்பு. அதற்கு பிற்பாடுவந்த அயன் நிறைய மசாலா கலந்த வெகுஜன மக்களை கவரும் திரைப்படம். அயனின் வெற்றி மிகப்பிரமாண்டமாக இருந்தது அதே பாணியில் தொடர்ந்து கோ வந்தது நக்சல்பாரிகளை தவறாக சித்தரித்ததாக சர்ச்சைகளும் வந்தது. அது உண்மையும் கூட. கோவின் பெரும் வணிக வெற்றிக்குப்பின் K.Vஆனந்தின் மீதான எதிர்பார்ப்பு காட்டுக்கடங்காமல் எகிரியது.

இப்போது வந்த அனேகன் சந்தேகம் இல்லை சூப்பர்ஹிட்தான்.சுபா, k.v ஆனந்தின் கூட்டணி இவர்களின் கூட்டணிக்காக சந்தேகம் இல்லாமல் தியட்டர்ருக்கு செல்லலாம் நல்லதொரு பொழுதுபோக்கு படம் கிடைக்கும். சரி அனேகன் பக்கம் வருவோம்.
வீடியோ கேம் தயாரிக்கும் மிக பிரமாண்டமான ஐடி கம்பனி, அதில் வேலை செய்பவர்களுகக்கு கற்பனைதிறன் அதிகரிக்க ஒருவித மாத்திரைகள் கொடுக்க அதன் வீரியம் உச்ச கட்டத்துக்கு சென்று மறுஜென்ம நினைவுகளை கொண்டுவர கதை பறக்கின்றது. மொத்தமாக மூன்று மறுஜென்மம் வருகின்றது. திரைகக்தையில் ஏகப்பட்ட குழப்பங்கள் என்று சிலர் சொல்வதை காது வழியாக கேட்டேன். ஆனால் படம் பார்க்கும்போது அப்படியொன்றும் குழப்பகரமாக இல்லை. பர்மாவில் நடக்கும் காட்சிகள் எல்லாம் அட்டகாசமாக ஷெட்போட்டு எடுத்திருகின்றார்கள். அடிக்கடி சாங்க்ஸ் வருவதுதான் எரிச்சல்கலையும் படத்தின் நீளத்தையும் அநாவசியமாக அதிகிரிக்கின்றது.

கார்த்திக்கின் நடிப்பை சொல்ல தேவையில்லை மனுஷன் செமையாக தனக்கு உரிய பாணியால் மிரட்டுகின்றார் கார்த்திக்குக்காகவே இந்த ரோல் ரசித்து ரசித்து பின்னப்பட்டதாக தோன்றுகின்றது. தனக்கே உரிய பாணியில் அதகளம் செய்கின்றார். கிளைமாக்ஸில் வரும் கார்த்திக்கின் நடிப்பு  அதியுச்சம். இந்த பழைய கார்த்திகை பார்த்து எவ்வளவு நாள்! Dying is not the end, i will come back for you என்று சொல்வதில் மிரட்டல்.
தனுஷை பொருத்தளவில் இது தனுஷ்படம் என்று சொல்லக்கூடிய இடம் காளியாக வரும் ரோல்தான். சுருட்டை மூடியுடன் குப்பத்து பையனாக வித்தியாசமான தனுஷை பார்க்க முடிகின்றது. காதல்கொண்டேன், ஆடுகளம்,மயக்கம் என்ன போன்ற வழைமையான நடிப்பில் இருந்து வேறுபட்ட நடிப்பை காட்டுகின்றார். எச்சில் துப்பி காத்துல ஆடவிட்டா காயம் சரியாக போயிடும் என்று சொல்லும் இடங்கள் நச். ஹீரோயினை சுத்திதான் இந்த கதை மொத்தமே நகருகின்றது அந்த ரோலில் நடித்த அமைரா வெளுத்துவேண்டி நடிச்சுதான் இருக்கின்றார் ஆனால் ஏதோ ஒன்று குறையுற பீலிங்!. 

ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களும் பின்னனி இசையும் கேட்க நல்லாத்தான் இருக்கிறது. ஒளிப்பதிவும் ஆட் டிரக்ஷனும் பக்கா. எடிட்டிங்தான் எசகுபிசகாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் நீளத்தை சுருக்கியிருக்கலாம். க்ளைமாக்ஸ்க்கு நெருக்கமாக வரும் மெலடி சோகப்பாட்டு ஏன்தான் கத்தரிபோடாமல் வச்சு இருகின்றாங்களோ தெரியவில்லை. பாரபட்சம் பார்க்காமல் தூக்கியிருக்லாம் மொத்தத்தில் இது தனுஷ் படமில்லை k.v ஆனந்த், கார்த்திக்கின் படம். கண்டிப்பா மிஸ் பண்ணாமல் என்ஜாய்பண்ணி பார்க்க வேண்டிய படம்.
 
பி.கு – 1. லாஜிக் ஓட்டைகள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன.
2. க்ளைமாக்ஸ் சீனில் போலிஸ் மறக்காமல் வருகின்றது. இதையே அயன் படத்தில் நக்கல் செய்து இருப்பார் K.V ஆனந்த். இந்த சீனை அனேகனில் வைப்பதை தவிர்க்க முடியவில்லை போலும்.



Comments

0 கருத்துக்கள்:

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP