ஃபிகரை தியட்டருக்கு கூட்டிட்டு போறது எப்படி?

>> Saturday 11 April 2015


இதுவரை வந்த ஈழத்து குறும்பட கட்டுமானங்களில் இருந்து விலகி வெகுஜன மேன்போக்கு நகைச்சுவை கட்டமைப்பில் படிமாக்கப்பட்ட குறும்பட வரிசையில் இணையும் குறுந்திரைப்படம் “ஃபிகரை தியட்டருக்கு கூட்டிட்டு போறது எப்படி?” இறுக்கமான கலாச்சார விழுமிய கட்டமைப்புகளை வலிமையாகக்கொண்ட யாழ்ப்பாணப் பிரதேசங்களில் வாலிப் பெண்ணும் ஆணும் சாதாரணமாக இணைத்து இயல்பாக பின்னிப் பிணைந்து திரிவது இயற்கைக்கு முரணான விடயம். தமது காதல் இச்சைகளை பரிபூர்வமாக நேரில் தீர்த்துக்கொள்ள முகம்கொடுக்கும் சங்கடங்கள் பாரதூரமானவை. வவுனியா பிரதேசத்தை தாண்டி வெளியே நமது பார்வையை விரிக்கும்போது புலப்படும் விடயம் அங்குள்ள இளம் காதல் ஜோடிகளுக்கு கிடைக்கும் சுதந்திரம். ஒரே குடைக்குள் கடலை பார்த்துக்கொண்டு புரியும் இச்சைகள் வாலிப காதல் சுகத்தை தீர்த்துவைக்கும்.

யாழ்ப்பாண பிரதேசத்தில் வாழும் காதலர்களுக்கு தங்கள் காதலன்,காதலிகளோடு இயல்பாக நேரடியாக பேசமுடிவதே மிகபெரும் சவாலான மகத்துவமான விடயம். காதலனின் வலிந்த அழைப்புகளுக்கு சமரசம் செய்யமுடியாமல் ஆள்நடமாட்டம் குறைந்த ஒழுங்கைகளில் தஞ்சம் அடைவது சிலகாதலிகளின் வழமை. பெரும்பாலான காதலர்கள் இப்படி இணைவது மிகக்குறைவு என்று சொல்லலாம். அவர்கள் வாழ்ந்த வளர்க்கப்பட்ட சமுதாயம் அவர்களை உற்றுநோகும்விதம் பெண்களை பெண்கள் உடனும் ஆண்களை ஆண்கள் உடனும் தனித்துவமாக வைத்திருக்க விரும்புகிறது. அவ்வாறு அமையாத சந்தர்பத்தில் ஏடாகூடமா அவர்கள் மீது பார்வையை மையப்படுத்துகின்றது. அது பல கூப்பாடுகளையும் பயம் கொள்ளச்செய்யும் பின்விளைவுகளையும் ஏற்படுத்தி கொடுகின்றது. இதனாலே பல யாழ்காதல்கள் செல்லிடை தொலைபேசிகளுடனும், வாட்ஸாப் குறுஞ்செய்திகளுடன் பரிதவமாக இயங்குகின்றது.

இந்த விடயங்களின் மையக்கூறுகளை,வாலிபக் காதலர்களின் ஏக்கங்களை உள்வேண்டி வெகுஜன சினிமாக்களின் அபத்த நகச்சுவை உணர்வுகளுடன் குறும்படப் பாணியில் சுவாரசியம் தருகின்றது சிவராஜின் ஃபிகரை தியட்டருக்கு கூட்டிட்டுப் போறது எப்படி? குறும்படம். சாதாரண ஓர் இளம் ஜோடி காதலின் எளிய சுலழலும் விளையாட்டுகளில் சிக்கிக்கொண்டு செல்லிடை தொலைபேசியில் தமது காதல் மகத்துவ ஏக்கங்களை தீர்த்துக்கொள்கின்றனர். எப்பாடுபட்டாவது தனது காதலியை தியட்டருக்கு கூட்டிசெல்ல பாரியளவில் விருப்பப்படுகின்றான் காதலன். அவனுக்கு முன்னிற்கும் மிகப்பெரிய சவாலில் முதன்மையானது தனது காதலியை தன்னுடன் தியட்டருக்கு வர சம்மதிக்கவைப்பது. ஆரம்பத்தில் காதலி மிக முரண்டுபிடித்தாலும் தனது காதலனுக்கு உரிய அதீத கெஞ்சுதல்களால் அவளின் அடிப்படை பயத்தை போக்கி சம்மதிக்கவைக்கின்றான். அவளின் அடிப்படை பயத்தைபோக்க தன்னை மிகவலிமையானவனாக காதலிக்கு முன் ஓர் போலி விம்பத்தை கடமைகின்றான்.

நிஜத்துக்கும் அவன் கட்டமைத்த போலி விம்பங்களுகும் இடையிலான வேறுபாடுகள் மிகப்பெரிதாக இருந்தாலும் அதனை சாத்தியப்படுத்த சில திட்டமிடல்களை தனது கற்பனைகளளில் இணைத்து பொருத்திப் பார்கின்றான். அவன் கற்பனைகளே அவன் கற்பனை செய்த திட்டத்தின் முரண்பாடுகளை விழித்துக்காட்டுகின்றது. அவை சிரிப்பை வரவைக்கும் முகமாக திரைக்கதையில் சரியாகப் பின்னப்பட்டுள்ளது. அவை காட்சிப்படுத்திய நகைமுரண்களை பார்க்கும்போது இயல்பாக சிரிக்கத் தோன்றுகின்றது. இறுதியில் எப்படி தனது காதலியை தியட்டருக்கு கூட்டிச் செல்கின்றான் என்ற கலகலப்பான முடிவுடன் படம் நகர்கின்றது. அதை நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்க. வெறும் சிரிப்பை பார்வையார்களிடம் இருந்து வரவைப்பதே இக்குறும்படத்தின் நோக்கமாக இருப்பதினால் அதில் இக்குறும்படம் வெற்றிகண்டுவிடுகின்றது.

எழுதப்பட்ட வசங்கள் மிகக் கச்சிதமாக அமைத்து இருகின்றன. அவை சொல்லப்படும் இடங்களும் காலநிலமைக்கு ஏற்ப வசன உச்சரிப்புக்களும் நடிகர்களின் முகபாவனைகளும் சிக்கலின்றி மாறும் தொய்வற்ற போக்கு ஆழமாகக் கவருகின்றது. முக்கியமாக காதலன் காதலியாக நடித்த இருவரின் கதாப்பாத்திர தெரிவுகள் அட்டகாசம். காதலனாக நடித்த காண்டிபனும் காதலியாக நடித்த ஷாணாவும் செயற்கைத்தனங்கள் இன்றி யதார்த்தப்போக்குடன் தம்மை இணைத்துள்ளனர். இதுவரை பார்த்த குறும்படங்களில் நடித்த நடிகைகளுடன் ஒப்பிடும்போது ஷாணாவின் நடிப்பு, உடல் மொழிகள் ஊடாக பாவனைகளை வெளிபடுத்தும் வலுவான திறன்கள் மிகச்சிறந்த நடிகைக்கான அடித்தளத்தை தெளிவாக காட்டுகின்றது. 

மதீசனின் இசை கட்டமைப்புகள் குறும்பட திரைமொழியின் செறிவுகளை குறைக்காமல் தொய்வற்று கலகலப்பாக கொண்டு செல்ல பாரியளவில் முனைகின்றது. படத்தின் காட்சிக்கோர்ப்புக்கள் (editing), நிறச்சமநிலை (colour balancing) மிக நுணுக்கமான உருவாக்கப்பட்டுள்ளது. சிவராஜின் இத்திரைப்படம் கவனிக்கத்த ஈழத்து வெகுஜன குறும்பட வரிசையில் தன்னை இணைத்துள்ளது. அனுபவம் மிக்க இயக்கம்.

இன்னும் யூடூப்பில் வெளிவிடப் படவில்லை. வெளிவந்தவுடன் இணைப்பை இணைகின்றேன்.



Comments

0 கருத்துக்கள்:

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP