Wild Tales - அர்ஜென்டீன திரைப்படம்

>> Thursday 14 May 2015



Wild Tales ப்ளாக்கொமடி வகையைச்சார்ந்த அர்ஜென்டீன ஸ்பானிஷ் திரைப்படம். Damián Szifron என்பவரால் எழுதி இயக்கப்பட்ட இத்திரைப்படம் சிறந்த அந்நியமொழிக்காண ஆஸ்கார் பரிந்துரையில் இடம்பிடித்தது.

ஆறுகுறுங்கதைகளின் சேர்க்கையே படத்தின் மொத்தக்கதை. ஆறு கதைகளும் ஒவ்வொன்றும் முடிவடைய அடுத்த கதை தினித்துவமாக புதிதாக ஆரம்பிக்கும். தனிக்கதைகளுக்கிடையே எந்தவிதத் தனித் தொடர்பும் இல்லை. ஆனால் எடுத்தாளப்பட்டுள்ள கதையின் மையக்கரு மையம்கொள்கின்றது. அதியுச்ச மனித உணர்ச்சிபிளம்பு குமித்துசிதறும்போது வெளிப்படும் அக,புற செயல்பாடே படத்தின் மையக்கரு. தனித்தனி ஆறு குறும்படங்களாகக் கொள்ளலாம்.

முதாலவது கதை - Pasternak

பயணிகள் விமானம் ஓடுதளத்தைவிட்டு ஆகாயத்தில் சுதந்திரமாக பறக்கின்றது. விமானத்தினுள்ளே இளம்மொடல் பெண்ணும் நடுத்தரவயதுமிக்க ஆணும் தங்களுக்குள் சிநேகமாக அறிமுகமாகின்றனர். அந்தப்பெண்ணின் காதலன் Pasternak இணை விமானத்தில் அறிமுகமாகிய ஆணுக்கு தெரிந்து இருகின்றது. இருவரும் Pasternakஇணை பற்றி உரையாட  இவர்கள் அருகில் அமர்ந்திருந்த வயோதிபப் பெண்ணொருத்தி இவர்கள் உரையாடல் நடுவில் எழுந்து தனக்கும் Pasternakஇணைத் தெரியும் அவன் தன்மாணவன் என்று சொல்கிறார். வாவ் என்னவோர் ஆச்சரியம் என்று இருவரும் தங்களுக்குள் வியந்து நோக்க அவர்கள் அருகிலுள்ள இன்னுமோர் ஆண் எழுந்து எனக்கும் தெரியும் அவன் வகுப்புத்தோழன்தான் என்று சொல்லி வயோதிபப் பெண்ணிடம் தன்னை நினைவு இருக்கா எனக்கு நீங்க படிபிச்சிங்க என்று சொல்கிறான். மொடல்பெண்ணுக்கு பேயரைந்தபோல் முகம் மாறுகின்றது எதோ தப்பாக இருகின்றது என்பது புரிய ஆரம்பிகின்றது. மீயூசிக்கும் திடுதிடுப்பாக விபரீதமாக மாறுகின்றது. வேற யாருக்கேல்லாம் Pasternak இணை  தெரியும் என்று வினவ அனைவர்க்கும் தெரித்து இருகின்றது. விமானப்  பணிப்பெண்ணும் அதிர்ச்சியான முகத்துடன் வருகின்றாள், அப்புறம் என்னாச்சு என்பது மிச்சக்கதை. அட்டகாசமாக சுவாரசியக்க வைகின்றது.

இரண்டாவது கதை - The Rats

நெடுஞ்சாலை ஓரத்தில் சிறிய ரெஸ்ட்டொரண்ட். அங்கே வேலைபார்க்கும் பெண் வந்திருக்கும் நபர் தன்குடும்பத்தைச் சிதைத்த நபர் என்பதை இனம்கண்டு கொள்கின்றாள். ரெஸ்ட்டொரண்டில் அவரை தவிர்த்துவேறு கஸ்டமர்களே இல்லை மெலிதான இரவுப்பொழுது. அவரைகண்டு திகைத்த பெண் தலைமைசமையல்காரியிடம் அவரை பற்றிச்சொல்கிறாள். அவர்க்கு வழங்கும் உணவில் எலிவிஷத்தை கலந்துகொடுக்கச் சொல்கின்றாள். அவள் மறுத்தபோதும் அவளுக்கு தெரியாமல் அவரின் உணவில் விஷத்தைகலந்துவிடுகின்றாள். அவரும் சாப்பிடத் தொடங்க அவரின் மகனும் ரெஸ்ட்டொரண்ட்க்கு வந்து இணைந்துகொள்கின்றார். அவனும் தந்தையின் உணவினை பகிர்ந்து உனைச்செல்ல இவள் திகைகின்றாள். அப்புறம் என்ன ஆச்சு என்பதினை பார்த்து தெரிந்துகொள்க. சமையல்காரியக நடித்த பெண்மணியின் தேர்வு, உடல்மொழிகள் கச்சிதமாக இருகின்றன. அவரின் மிரட்டும் முகபாவனையை படத்தில் கவனித்துப் பாருங்கள்.

மூன்றாவது கதை - The Strongest

நீண்ட ஹைவேயில் பயணமாகிக்கொண்டு இருக்கும்போது ஒரு பழையலொங்குலொட்டான் கார் எதிர்ப்படுகின்றது. ஓவர்டேக் செய்யவும் அந்தக்கார் விடுவதாக இல்லை. கடுப்பாகி ஒருமாதிரி அந்தக் காரை முந்தி முடித்தபின் தனது நடுவிரலை உயர்த்திக்காட்டிவிட்டு சில கெட்ட வார்த்தைகளை உதிர்த்துவிட்டு வருகின்றார்  Diego. அட்டமத்துச் சனி அவர் நடுவிரலில் உக்கார்ந்திருக்கவேண்டும். கார் கொஞ்சம்தள்ளி பஞ்சராகிவிடுகின்றது. என்ன ஏலவுடா என்று கார்டயரை மாற்றமுயலும்போது அவர் உதாசினப்படுத்திவிட்ட கார்வருகின்றது. பயத்தில் தன் காரின் உள்ளேயேறி சமர்த்தாக அமர்ந்து விடுகின்றார். வந்தவன் சும்மா விடுவான தன்னுச்சபச்ச வன்முறையை எல்லாம் கார்கண்ணாடிக்கு காட்டிவிட்டு உக்கிரமாக Diegoவினை அவமானப்படுத்திவிட்டு நகர்கின்றார். ரொம்பக்கடுபாகிய Diego அவனைதாக்க முயல்கின்றார். அங்கதான் சிக்கல் ஆரம்பிகின்றது. பரபரப்பாக செல்லும் இக்கதை எந்தவிதத்திலும் அலுப்புத்தட்டாது. உச்சகட்டமான உவையடையவைக்கும் என்பதில் மாற்றுக்கருது இல்லை.

நான்காவது கதை - Little Bomb

டைனமைட் வைத்து கட்டிடங்களை தகர்ப்பதில் பிரபல்யமானவர் Fischer. அவரின் மகளின் பிறந்தநாளுக்கு கேக்வேண்டச்செல்ல அவரின் காரை தரப்பிடதுக்காண பணம் அரசாங்கத்துக்கு கட்டவில்லையேன்று தூக்சிச்செல்கின்றார்கள். மனிஷனுக்கு டென்ஷனுக்குமேல் டென்ஷன் கொடுகின்றார்கள். திரும்பத்திரும்ப பிரஷர்கொடுக்க ஒருகட்டத்தில் மனிஷன் பின்னியெடுத்துவிடுகின்றார்.

ஐந்தாவது கதை - The Proposal

உயர் பணக்கார மேட்டுக்குடி குடும்பதில் பிறந்த Mauricioனின் மகன் கர்பணி பெண் ஒருத்தியை கார்விபத்தில் கொன்றுவிடுகின்றான். அழுதுகொண்டு பெற்றோறிடம் சொல்ல அவர்கள் இதிலிருந்து தப்பிக்க குடும்ப வக்கீலை அழைக்கின்றார். அவரும் ஐடியா கொடுக்கின்றார். அவரின் தோட்ட வேலைகாரனுக்கு பணம்கொடுத்து அவர்செய்ததாகக் சமாளிக்க முயல்கின்றார். தோட்டகாரனும் சரி பணம்கிடைக்கின்றது என்று சம்மதிக்க, வந்த பொலிஸ்காரர்க்கு கிட்னியில்கூட ஜாஸ்தியாகக் கொஞ்சம் மூளை இருந்திருக்கவேண்டும் அவர் நிஜத்தை கண்டுபிடித்துவிடுகின்றார். அவரையும் வக்கீல் மூலம் பேசிப்பாக்கின்றார்கள் அவரும் லஞ்சத்துக்கு சம்மதிக்வைக்கின்றார். வக்கீலும் தனக்கு தனியாக பங்குதரவேண்டும் என்று கேட்கின்றார். கூடிக்கழித்துப்பார்த்தால் கொடுக்கவேண்டிய பணம் எக்கச்சக்கமாக வருகின்றது. அதனால் கடுப்படைந்த Mauricio ஒரேயொரு பில்லியன்தான் தருவேன் மொத்தமாகத் தேவையானவர்கள் பங்குபிரிசுக்கொள்ளுங்கள் என்கின்றார், உடன்படாவிட்டால் மகனை கைதுபண்ணச் சொல்கின்றார்.  பண ருசிகண்டவர்கள் திகைத்துப்போய்விடுகிறார்கள் சமரசம் செய்ய முற்படுகின்றார்கள். அப்புறம் என்ன ஆச்சு என்பதே மீதி சுவாரசியம். குற்ற உணர்வில் கலந்துகட்டி Mauricio பாத்திரத்தில் நடித்தவர் அட்டகாசமாக நடித்துள்ளார். விறுவிருப்புக்கு பஞ்சமில்லை.

ஆறாவது கதை- Until Death Do Us Part

புதிதாக திருமணபந்தத்தில் இணைந்த தம்பதியினர் ரிஷப்ஷனுக்கு வருகின்றார்கள். அட்டகாசமாக ஹோட்டலில் ரிஷப்ஷன் நடைபெறுகின்றது. அப்போது கணவனின் பழையகாதலி பற்றித் தெரிந்துகொள்கின்றாள் மனைவி. மனமுடைந்த மனைவி வந்திருந்த விருந்தினர்முன் நடனமாடிக்கொண்டிருக்கும்போது கணவனிடம் கேட்டு உறுதிசெய்துகொள்கின்றாள். மனமுடைந்து அழுது ஹோட்டல் மொட்டைமாடிக்குச் செல்கின்றாள் குலுங்கிக்குலுங்கி அழுகின்றாள். தற்செயலாக தம் அடிக்க நின்ற சமையல்காரர் ஆறுதல் சொல்கின்றார். அவரின் ஆறுதலினால் கவரப்பட்டடு அவருடன் முத்தமிட்டுகொள்கின்றாள். அந்தமுத்தம் கொஞ்சம்கொஞ்சமாக முன்னேறி உடல் உறவை நோக்கிச்செல்கின்றது. அவளைத்தேடிவந்த கணவன் முக்கியவிடத்தில் பார்த்துவிட அதிர்கின்றார். அப்புறம் என்னாச்சு என்பது சிரிப்புக்கும் பஞ்சம் தராமல் நகர்கின்றது. நுணுக்கமான திரைப்பட படிமமாக்கள். அட்டகாசமான உருவாக்கம். கணவன் மனைவியாக நடித்தவர்கள் உட்பட ரிஷப்ஷனுக்கு வந்தவர்கள் அனைவரும் அட்டகாசமாக நடித்துள்ளார்கள்.

மெலிதான நகச்சுவையை கலந்துகட்டியவிதம் ரொம்பவும் அட்டகாசம். சுவாரசியமாகப் ஒவ்வொரு காட்சிப்படிமமாகப் பார்த்துரசிக்கலாம்.



Comments

3 கருத்துக்கள்:

Unknown 15 May 2015 at 08:13  

Download link comment pannunga

Unknown 15 May 2015 at 08:13  

அருமையான பதிவு

Annogen 15 May 2015 at 13:01  

// DHANUSH WARAN // நன்றி , இதனை முயற்சித்துப்பாருங்கள் https://kat.cr/wild-tales-2014-720p-bluray-x264-aac-deff-t10531892.html

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP